உலகின் பணக்கார பெண்மணிகள் யார்?

பட மூலாதாரம், AFP
உலகின் பணக்கார பெண் தனது 94 வயதில் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்த லோரியல் அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசான லிலேனே பென்டன்கோட் $40 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தை கொண்டிருந்தார்.
எனவே, இவருக்கு அடுத்து உலகின் பணக்கார பெண்மணி யார்? என்று பார்ப்போம்.
உலகின் பணக்கார பெண்கள்

பட மூலாதாரம், Getty Images
1.அலிஸ் வால்டன் - நிகர சொத்து மதிப்பு $33.8 பில்லியன்
ஃபோர்ப்ஸ் இதழின் இவ்வாண்டுக்கான உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பென்டன்கோட்க்கு மூன்று இடங்கள் பின்தங்கி 17-வது பெற்றிருந்த இவர், தற்போது உலகின் பணக்கார பெண் என்ற நிலையை அடைந்துள்ளார்.
அமெரிக்க பல்பொருள் அங்காடி ஜாம்பவானாக வால்மார்டின் நிறுவனர் சாம் வால்டனின் ஒரே மகளான இவரின் நிகர சொத்து மதிப்பு $33.8 பில்லியன் ஆகும்.
அவ்வாறு இருந்தபோதிலும், இவர் தனது சகோதரர்களை போன்றல்லாமல், குடும்ப தொழிலில் இருந்து விலகி இருந்ததுடன், தனது சொந்த நகரமான அர்கன்சாஸில் உள்ள பென்டோவில்லேவில், தனக்கு கலையின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக Crystal Bridges Museum of American Art-ன் தலைவராகவும் உயர்ந்தார்.
2. ஜாக்குளின் மார்ஸ் - நிகர சொத்து மதிப்பு $27 பில்லியன்
போர்ப்ஸ் பட்டியலில் 26வது இடத்தில் உள்ள 77 வயதான இவர், உலகின் மிகப் பெரிய மிட்டாய்கள் செய்யும் நிறுவனத்தின் சொத்தை தனது இரண்டு சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
அவர் கிட்டத்தட்ட 20 வருடங்களாக குடும்ப நிறுவனத்தின் வேலை மற்றும் கடந்தாண்டு வரை அந்நிறுவனத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும் இருந்தார்.
தற்போது கொடையாளராக அறியப்படும் இவர், வாஷிங்டன் தேசிய ஆவண காப்பகம் மற்றும் வாஷிங்டன் தேசிய ஓபரா உள்ளிட்ட சிலவற்றின் குழுக்களிலும் உள்ளார்.
3. மரியா பிரான்க்கா பிஸோலோ:
இறந்த ஃபெரெரோ ரோச் புகழ் - மைக்கேல் ஃபெர்ரெரோவின் மனைவியான இவர் இப்பட்டியலில் இடம் பிடித்த முதல் ஐரோப்பிய பெண்மணி ஆவர்.
Nutella, Kinder மற்றும் Tic-tacs ஆகியவற்றைக் தயாரிக்கும் இவரின் நிறுவனத்தை, இப்போது தனது மகன் ஜியோவானி மூலமாக இயக்குகிறார்.
இவர் பொதுவாக, மொனோக்கோவில் நேரம் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
4. சுசன்னே ஸ்கேலாட்டென் - நிகர சொத்து மதிப்பு $20.4 பில்லியன்

பட மூலாதாரம், Getty Images
இப்பட்டியலில் இருக்கும் இரண்டாவது ஐரோப்பியரான இவருக்கு 55 வயதாகிறது. ஜெர்மனியை சேர்ந்த இவரின் சொத்துக்கு காரணமாக கார்கள் மற்றும் மருந்து தொழில்கள் உள்ளன.
இவரின் பெற்றோர்கள் இறந்தபோது இரசாயன நிறுவனமான அல்டானா ஏஜியின் 50% சதவீத பங்குகளும் மற்றும் இவரும் இவரது சகோதரரும் இணைந்து பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ-வில் 50% பங்குகளை வைத்துள்ளனர்.
அதன் பிறகு, அல்டானா தனியார் நிறுவனம் முழுவதையும் தனதாக்கியதோடு காற்றாலை மின்சாரம் முதல் கிராபைட் தயாரிப்பு நிறுவனங்கள் வரை என பலவற்றில் பங்குகளை வாங்கியதால் இந்த பட்டியலில் இடம் பிடிப்பதை உறுதி செய்தார்.
5. லாரன் பௌல் ஜாப்ஸ் - நிகர சொத்து மதிப்பு $20 பில்லியன்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அளவில் ஐந்தாவது இடத்திலும் அல்லது உலகளவில் 40வது இடத்திலும் இருக்கும் இவர், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியாவார்.
53 வயதான இவர் எமர்சன் காலெக்ட்டிவ் என்னும் நிறுவனத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் மற்றும் சுற்றுசூழல் பிரச்சனைகள் சார்ந்த விடயங்களுக்காக செயல்பட்டு வருகிறார்.
இவர் காலேஜ் ட்ராக் என்னும் பின்தங்கிய மாணவர்களுக்கு மேற்கல்வியை பயில்வதற்கு உதவி செய்யும் அமைப்பொன்றின் இணை-நிறுவனராகவும் உள்ளார்.
மேலும், இவருக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 0.7% பங்குகளும் மற்றும் டிஸ்னி நிறுவனத்தில் 4% பங்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- வட கொரியாவுக்கு நெருக்கமாக பறந்து மிரட்டிய அமெரிக்க போர் விமானங்கள்
- ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பான டுவிட் பதிவால் பறிக்கப்பட்ட 'துருக்கி அழகி பட்டம்'
- இலங்கை: புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
- கமலுக்கு எதிராகத் திரும்பிய இணையவாசிகள்
- பெண்களுக்கு “அரை மூளை”தான் என்ற சௌதி அரேபிய மதகுருவுக்கு தடை
- விஜய் படத்துக்கு `மெர்சல்' பெயரை பயன்படுத்த தடை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












