துவேஷப் பிரச்சாரங்களில் ஈடுபட சவுதி இமாம்களுக்கு தடை

சவுதி அரேபியாவிலுள்ள ஒரு லட்சம் இமாம்கள் மற்று மதப்பிரச்சாரகர்கள் தமது பிரசங்கங்களின்போது, அரசியல் மற்றும் இனக்குழு மோதல்கள் தொடர்பான விஷயங்களை தவர்க்குமாறு கூறப்பட்டுள்ளனர்.

மதப் பிரசங்கங்களில் அரசியல் பேசவேண்டாம் என சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, மதப் பிரசங்கங்களில் அரசியல் பேசவேண்டாம் என சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தலை சவுதியின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமது பிரசங்கங்களின்போது எந்தவொரு தனிநபர் மட்டும் நாடுகளை சபிப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் சுன்னிப்பிரிவு முஸ்லிம்களை விமர்சிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, இஸ்ரேல் மற்றும் சுன்னிப்பிரிவு முஸ்லிம்களை விமர்சிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் இஸ்ரேல் மற்றும் முஸ்லிம்கள் அல்லாதோரை மட்டுமன்றி, சுன்னிப் பிரிவைச் சேராத முஸ்லிம்களை சபிப்பதை இமாம்கள் வழக்கமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இனி பள்ளிவாசல்களின் உள்ளே எவ்விதமான நன்கொடைகளும் வசூலிக்கப்படக் கூடாது எனவும் சவுதியின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.