கிலியன் எம்பாப்பே பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் பேசியது ஏன்?

கிலியன் எம்பாப்பே பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் பேசியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட், தேசிய அணிக்குப் பயிற்சியளிப்பது குறித்து விவாதிக்க அழைத்தால், அழைப்பை எடுக்க மாட்டார் என்று முன்னாள் மிட்ஃபீல்டர் ஜினுடீன் ஜுடான் குறித்துப் பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜினுடீன் ஜிடானுக்கு ஆதரவாக பிரெஞ்சு அணியின் முன்கள ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே குரல் கொடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தலைமை பயிற்சியாளர் டிடியர் டெஷ்சாம்ப்ஸின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தது. அவர் பிரான்ஸ் அணியைத் தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குக் கொண்டு சென்றார்.

பிரெஞ்சு அணி, கடந்த மாதம் கத்தாரில் அர்ஜென்டினாவிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்றனர். டெஷ்சாம்ப்ஸ் வருவதற்கு முன்பு மிகவும் விரும்பப்பட்ட பயிற்சியாளராக ஜுடான் இருந்தார்.

1998இல் பிரான்ஸ் அணிக்காக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்து, அந்த அணியை வெற்றிக்கனி பறிக்க வைத்தவர், ஜினூடீன் ஜுடான்.

அதற்குப் பதிலாக இப்போது பிரேசிலிய தேசிய அணியை நிர்வகிப்பாரா என்று கேட்கப்பட்டபோது, நோயல் லு கிரேட், “நான் ஒன்றும் செய்யவில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

ஜுடான் எப்போதும் கண்காணிப்பில் இருந்தார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவருக்கு நிறைய ஆதரவாளர்கள் இருந்தார்கள். சிலர் டெஷ்சாம்ப்ஸ் வெளியேறுவதற்காக் காத்திருந்தார்கள்.

ஆனால், டெஷ்சாம்ப்ஸை யாரால் தான் கடுமையாகப் பேச முடியும்? யாராலும் முடியாது,” என்று அவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கிலியன் எம்பாப்பே பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் பேசியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜினுடீன் ஜுடான் (நடுவில்)

“ஜுடான், அவர் விரும்பியதைச் செய்கிறார். அது என்னுடைய வேலையல்ல. நான் அவரை ஒருபோதும் சந்தித்ததில்லை. நாங்கள் ஒருபோதும் டிடியர் டெஷ்சாம்ப்ஸை விட்டுப் பிரிந்து செல்ல நினைத்ததில்லை.

அவர் விரும்பும் கிளப்புக்கு அவர் செல்லலாம். ஜுடான் தொடர்புகொள்ள முயன்றால், நிச்சயமாக நான் அழைப்பை எடுக்கவே மாட்டேன்,” என்று பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட் கூறினார்.

ரியல் மாட்ரிட் அணிக்கு தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்று கொடுத்த முதல் பயிற்சியாளர் ஜுடான்.

இப்போதைய பயிற்சியாளர் டெஷ்சாம்ப்ஸுடன் பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்போதைய பயிற்சியாளர் டெஷ்சாம்ப்ஸுடன் பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட்

அவருக்கு 50 வயதாகிறது. அவர் 2000ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை பிரான்ஸ் அணிக்காக வென்றார்.

கடந்த ஆண்டு ஸ்பானிஷ் கிளப்பான ரியல் மாட்ரிட்டில் இருந்து வெளியேறிய பிறகு, அவர் தற்போது வேறு எங்கும் இணையாமல் இருக்கிறார்.

“ஜுடான் தான் பிரான்ஸ். அந்த ஜாம்பவானை மரியாதைக் குறைவாக நாங்கள் நடத்த மாட்டோம்,” என்று லு கிரேட்டின் பேட்டி ஒளிபரப்பப்பட்ட பிறகு, பிரெஞ்சு கால்பந்து அணியின் முன்கள தாக்குதல் ஆட்ட வீரர் கிலியன் எம்பாப்பே ட்விட்டரில் பதிவிட்டார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

ஜுடானை நீக்கிய பிறகு,டெஷ்சாம்ப்ஸை பிரெஞ்சு அணியின் பயிற்சியாளராக்கினார் லு கிரேட் . பிரான்சின் விளையாட்டுத்துறை அமைச்சர் அமெலி ஒடியா-காஸ்டெரா, நாட்டின் ”மிகப்பெரிய விளையாட்டுக் கூட்டமைப்பின்” தலைவர் எல்லை கடந்து பேசியுள்ளதாகக் கூறியுள்ளார். லு கிரேட்டின் கருத்துகளை விமர்சித்துள்ள பல அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

“விவரம் ஏதும் தெரியாமல் கூறப்பட்ட கருத்து மற்றும் அதற்கும் மேலாக வெட்கக்கேடான மரியாதை இல்லாத கருத்து. கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானை நோக்கிப் பேசப்பட்ட இந்தக் கருத்து, அவரை மட்டுமின்றி நம் அனைவரையுமே காயப்படுத்தியுள்ளது,” என்று அவர் டிவிட்டரில் பதிவிட்டார்.

பிரெஞ்சு அரசியல்வாதியான பியர்-அலெக்சாண்ட்ரே அங்க்லாடே, லு கிரேட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். “ஜூடான், பிரெஞ்சு கால்பந்து விளையாட்டின் நினைவுச் சின்னம். அனைத்து பிரெஞ்சு மக்களாலும் விரும்பப்படும் ஓர் ஆளுமை,” என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: