சௌதி அரேபியாவில் அரங்கம் அதிர புதிய அவதாரம் எடுத்த ரொனால்டோ

ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

கால்பந்து வரலாற்றில் சாதனை அளவாக, உச்சபட்ச ஆண்டு ஊதியத்துடன் சௌதி அரேபிய அணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐரோப்பாவில் அனைத்தையும் சாதித்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் இன்றும் பல அணிகள் தன்னை சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

உலகமே கொண்டாடிய உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த வேளையிலேயே, மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ விலகப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. மான்செஸ்டர் யுனைடெட் அணியை விமர்சித்து அவர் அளித்த பேட்டியே இதற்குக் காரணம்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே, மான்செஸ்டர் அணியில் இருந்து விலகிய ரொனால்டோ, சௌதி அரேபியாவைச் சேர்ந்த அல்-நாசர் அணியில் இணைந்தார். 2025-ம் ஆண்டு வரை இரண்டரை ஆண்டு காலத்திற்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ள அல்-நாசர் அணி, விளம்பர ஒப்பந்தங்களையும் சேர்த்து ஆண்டுக்கு சுமார் 1,775 கோடி ரூபாயை ஊதியமாக தர முன்வந்திருப்பதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.

அல்-நாசர் அணியில் ரொனால்டோவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் விழா, சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் சவுத் பல்கலைக் கழக ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அங்கே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே, அல்-நாசர் அணியின் ஜெர்சியை அணிந்தபடி கிறிஸ்டியானோ ரொனால்டோ தோன்றினார். அரங்கமே வண்ணமயமாக காட்சியளித்தது. 

சவுதி கிளப் ஜெர்சியில் ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பாலன் டி ஓர் விருதை 5 முறை வென்றுள்ள ரொனால்டோ, ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். பின்னர், அல்-நாசர் அணி நிர்வாகிகளின் கேள்விகளுக்கு மட்டும் அவர் பதிலளித்தார். 

"ஐரோப்பாவில் மிக முக்கியமான முன்னணி அணிகளுடன் விளையாடிவிட்டேன். அங்கு அனைத்தையும் வென்றுவிட்டேன். ஆசியாவில் இது புதிய சவால்" என்று அவர் கூறினார். 

"ஐரோப்பா, பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இருந்தும், என் தாய்நாடான போர்ச்சுகலில் இருந்தும் கூட எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன என்பது யாருக்கும் தெரியாது. பல அணிகள் என்னை ஒப்பந்தம் செய்ய முயன்றன" என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

சவுதி ஜெர்சியில் ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

"ஆனால், இந்த அணிக்கு விளையாடுவதாக வாக்களித்துவிட்டேன்" என்று கூறிய ரொனால்டோ, "இந்த ஒப்பந்தம் தனித்துவமானது. ஆனால், நானும் தனித்துவமான வீரர் என்பதால் என்னைப் பொருத்தவரை இது சாதாரணமானதுதான்," என்றார். 

ரொனால்டோவை ஒப்பந்தம் செய்தது சிறப்பான ஒன்று என்று அல்-நாசர் அணி பயிற்சியாளர் ரூடி கார்சியா தெரிவித்தார். 

"ரொனால்டோ போன்ற சிறந்த வீரர்களை கையாள்வது எளிது என்பதை கண்டிருக்கிறேன். ஏனெனில், அவர்களுக்கு கற்றுக் கொடுக்க எதுவும் இல்லை" என்றார் அவர். 

அல்-நாசர் அணிக்கு ரொனால்டோ எவ்வளவு முக்கியம்?

தனது 37-வது வயதில் ரொனால்டோ, அல்-நாசர் அணிக்கு வந்துள்ளார். தொழில்முறை கால்பந்து வாழ்வில், 819 கோல்களை அடித்துள்ளார். அதில், 700 கோல்களை கிளப் போட்டிகளில் வந்தவை. கடந்த சீசனில் மேன்செஸ்டர் யுனைடெடின் முதன்மை கோல் ஸ்கோரராக 24 கோல்களை அடித்துள்ளார். அதில், 18 கோல்கள் ப்ரீமியர் லீக்கில் அடித்தவை.

இருப்பினும், அவருக்கும் மேன்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்குமான ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு முன்பு, இங்கிலாந்தில் நடந்த போட்டிகளில் மொத்தமாகச் சேர்த்து மூன்று கோல்களையே அடித்துள்ளார்.

கத்தாரில் உலகக்கோப்பை போட்டியிலும், ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி ஆகிய சுற்றுகளில் அவர் போர்ச்சுகலுக்கு பெரியளவிலான பங்களிப்பை வழங்கவில்லை.

அவர் தற்போது ஆசிய லீக் போட்டிகளின் பக்கம் வந்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நிலையில், இது அவருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கலாம் என்றும் அல்-நாசர் அணிக்கும் இது நல்ல வலுவைச் சேர்க்கலாம் என்றும் கருதப்படுகிறது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

ரொனால்டோவின் புதிய கிளப் எப்படிப்பட்டது?

அல்-நாசர் கிளப் 1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சௌதி தலைநகரான ரியாத்தில் இது அமைந்துள்ளது. அந்நாட்டின் உச்சகட்ட பிரிவான சௌதி தொழில்முறை லீக் போட்டிகளில் ஆடும் 16 அணிகளில் இதுவும் ஒன்று. கடந்த சீசனில் அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

சௌதி தொழில்முறை லீக் போட்டிகளில் 9 முறை அவர்கள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். அந்த லீக் போட்டியின் வரலாற்றில் இது இரண்டாவது அதிக வெற்றி எண்ணிக்கை. முதல் இடத்தில், 18 வெற்றிகளோடு அல்-நாசருக்கு நீண்டகால போட்டியாளராக இருக்கும் அல் ஹிலால் அணி உள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

2018-19 போட்டியின்போது கடைசியாக அல் நாசர் கடைசியாக சௌதி தொழில்முறை லீக் கோப்பையைக் கைப்பற்றியது. 1995ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்கு வந்தபோது, அவர்கள் ஆசிய கால்பந்து லீக் போட்டியில் தங்களுடைய சிறந்த ஆட்டத்தைக் காட்டினார்கள்.

ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான வடிவத்தை ஆசிய கால்பந்து சம்மேளனம் தற்போது மாற்றியுள்ளது. அல்-நாசர் 2022-23க்கான குரூப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமெனில், அதற்கு சௌதி ப்ரீமியர் லீக்கில் வெற்றி பெற வேண்டும்.

இந்திய மண்ணில் ரொனால்டோ விளையாட வாய்ப்பு

2021-22 சௌதி ப்ரீமியர் லீக் சாம்பியனாக இருப்பதால், அல் ஹிலால் ஏற்கெனவே 2023-24 ஆசிய சாம்பியன்ஸ் லீக் குரூப் சுற்றுக்குள் நேரடியாக நுழையும் தகுதியைப் பெற்றுள்ளது. சௌதி அரேபியாவிலிருந்து செல்லக்கூடிய மற்ற இரண்டு அணிகளுக்கான இடங்கள், 2022-23 ப்ரீமியர் லீக் சாம்பியன் மற்றும் கிங்ஸ் கோப்பை வெற்றியாளருக்குச் செல்லும்.

ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு ஏற்கெனவே 2021-22 கிங்ஸ் கோப்பையை வென்ற அல் ஃபய்ஹாவுக்கு சென்றுள்ளது. அல்-நாசர் அணியைப் பொறுத்தவரை, 2022-23இல் மூன்று குரூப் சுற்றுகள் மற்றும் ஒரு ப்ளே-ஆஃபில் விளையாடவுள்ளார்கள். 2021-22, 2022-23 இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பொறுத்து ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு இந்திய அணிகள் தகுதி பெறுவது முடிவாகும்.

2021-22 லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றிபெற்று ப்ளே-ஆஃபில் தங்களுடைய இடத்தை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், அல்-நாசர் 2022-23 சௌதி ப்ரீமியர் லீக் அல்லது கிங்ஸ் கோப்பையை வென்றால், இந்திய கிளப்புகளோடு மோதும் வாய்ப்பு 2023-24 ஆசிய சாம்பியன்ஸ் லீக்கில் கிடைக்க வாய்ப்புள்ளது. அது நடந்தால், ரொனால்டோ இந்தியாவில் விளையாடும் வாய்ப்பு உருவாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: