ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் திருநங்கை

காணொளிக் குறிப்பு, கூலி தொழில் செய்து ஜல்லிக்கட்டுக்குக் காளை வளர்க்கும் மதுரை திருநங்கை சிந்தாமணி

மதுரை அலங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட கல்லணை கிராமத்தைச் சேர்ந்த சிந்தாமணி என்கிற திருநங்கை கடந்த 2017ல் இருந்து ஜல்லிக்கட்டுக்குத் தனது காளை இறக்கி வருகிறார். மிகவும் வறுமை சூழ்நிலைக்கு இடையில் வாழும் இவர், ஆரம்பக் காலத்தில் கட்டட சித்தாள் வேலைக்குச் சென்று சிறுக சிறுக பணம் சேர்த்து ஜல்லிக்கட்டு காளை வாங்கினார். 2017ல் இருந்து பாலமேடு, அவனியாபுரம், சக்குடி என்று பல இடங்களில் தனது காளையைக் கட்டவிழ்த்து இருக்கிறார். அன்றாடம் பானிபூரி கடையில் தினக்கூலியாக பணியாற்றி வரும் சிந்தாமணி அதில் ஈட்டும் வருமானத்தில் தான் வளர்க்கும் காளைகளுக்குத் தேவையான உணவு தீவிரத்தை வாங்கி பராமரித்து வருகிறார்.

தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

திருநங்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: