வலி என்பது என்ன? இரவில் அதிகமாக வலி எடுப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரோசியோ டி லா வேகா டி கரான்சா
- பதவி, .
விக்டர் ஹ்யூகோவின் நாவலை அடிப்படையாகக் கொண்ட லெஸ் மிஸரபிள்ஸ் (Les Miserables) என்ற படத்தின் பாடலில், புலிகள் இரவு வரும்போது, அவைகளின் உறுமல் இடிபோன்று இருந்தன என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நாம் எல்லோரும் ஒரு இரவில் துயரத்தில் இருக்கின்றோம். படுக்கையில், பொறுத்துக் கொள்ள முடியாத முதுகு வலி (அல்லது பல்வழி, காதுவலி)யின் காரணமாக வீட்டின் மேற்கூரையை வெறித்துப் பாரத்தபடி தூக்கமின்றி உழன்று கொண்டிருக்கின்றோம்.
இது பகல் பொழுதிலும் இருந்தது. ஆனால் இரவில் அது நம்மை ஓய்வு எடுக்கவிடாது. ஒரு காட்டுப் புலியைப் போல அந்த வலி நம்மை கடித்துக் கொண்டிருக்கும். நமக்கு எழும் கேள்வி, இரவு நேரத்தில் மட்டும் ஏன் நமது உடல் மேலும் அதிகமாக வலிப்பதை உணர்கின்றோம்? இது குறித்து விஞ்ஞானம் என்ன சொல்கிறது? என்பதுதான்.
ஆரம்பத்தில் இருந்து தொடங்குவோம்;
வலி என்றால் என்ன?
சில நேரங்களில் நாம் எல்லோரும் வலியில் இருந்திருப்போம். இப்போதைக்கு வலி என்பது யாருக்கும் அரிதான ஒன்றாக இருக்காது என்று நம்மில் பலருக்கு உறுதியாகத் தெரியும். எனினும், இதனை வரையறுத்தால் இந்த விஷயம் சிக்கலாகத் தொடங்கும்.
வலி குறித்த ஆய்வுக்கான சர்வதேச அசோசியேஷன் பல ஆண்டுகளாக பலமுறை ஏராளமான மாற்றங்களுக்குப் பிறகு, வலியை ஒரு விரும்பத்தகாத உணர்வு மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவத்துடன் தொடர்புடையது அல்லது தொடர்புடைய, உண்மையான அல்லது சாத்தியமான திசு சேதம் போன்றது என்று வரையறுப்பதற்கு 2020ஆம் ஆண்டில் ஒப்புக் கொண்டது.
ஆகையால், உடல் ரீதியாக சில பாதிப்புகள் ஏற்படும்போது விரும்பத்தகாத உணர்ச்சிக்கூற்றை ஒருவர் உணர்வதுடன் தொடர்புடைய இது (அல்லது நினைவூட்டுவது) உணர்வுகளின் அனுபவம் என்று இப்போதைக்கு கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது.
எதற்காக நமக்கு வலி ஏற்படுகிறது?
இந்த உணர்வு பாதகமான ஏதோ ஒன்று என்றும் நாம் சிந்திக்க முயச்சிக்கும்போது இது, ஒரு விரும்பதகாத அனுபவம் என்று வரையறுக்கப்படுகிறது. ஆனால், மனிதன் ஒரு சிக்கலான, திறன் கொண்ட இயந்திரமாக இருப்பதால் இது அரிதாகவே செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
ஏதேனும் ஒன்று தவறாக இருக்கும்போது, வலியின் நோக்கம் என்பது எச்சரிப்பதாக இருக்கிறது. நமது உடல் ஒழுங்கமைவுக்கு அச்சுறுத்தலாக இருக்ககூடிய அபாயங்களில் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பிழைத்திருத்தலுக்கான முறையாகும்.
நாம் என்ன விதமான அபாயத்தில் இருக்கின்றோம் என்பதை நமது மூளை நமக்கு சொல்வதற்கான முன்னெச்சரிக்கை செய்வதற்கான அலார முறையாகும். அது நமக்கு விரும்பத்தகாததாக நாம் உணர்ந்தால், அதனை தவிர்க்க வேண்டிய தேவை உள்ளது.
எனினும், ஒரு தூண்டுதலுக்கான மறுமொழியாக இது இருக்காது. உள்ளார்ந்த யோசனையாக எண்ணப்பட்டது. (உதாரணத்துக்கு; எரிந்து கொண்டிருக்கும் ஏதோ ஒன்றை நாம் தொட்டால், கை வெந்து போவதில் இருந்து இந்த வலியானது பாதுகாக்கிறது. என்னுடைய கையை எடுத்துக்கொள்ளும்படி செய்கிறது) இது நமது மூளையின் ஒரு செயல் என நவீன கருத்தாக்கம் புரிந்து கொண்டிருக்கிறது. எங்கே, எந்த அளவுக்கு, எந்த வழியில், இது காயமாகும் என்பதை இந்த உடற்பாகம் நமக்கு சொல்கிறது.
நிச்சயமாக, வெளி தூண்டுதலானது (முன்பு நாம் குறிப்பிட்ட சூடு போன்றது), மூளையை இணைக்கும் புறநரம்புகளுக்கு தகவலை அனுப்பும். அதன் பின்னர், இது செயலாகும். நோசிசெப்ஷன் என்று அழைக்கப்படும் (புற மற்றும் மத்திய நரம்பு மண்டலம் மூலம் தீங்கு விளைவிக்கும் தூண்டுதல் தொடர்புபடுத்தப்படும் செயல்முறையாகும்) ஏதோ ஒன்றாக மாறும். ஆனால், இது ஒரு பகுதி அனுபவம் மட்டுமே. நமது நோசிசெப்ஷனின் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி ஆகியவற்றோடு இணைந்ததே வலி என்பதன் கருத்தாக்கமாகும்.

பட மூலாதாரம், Getty Images
சுருக்கமாக, நாம் பெறும் வலி என்பது எப்போதுமே நேரடியாக வலியை ஏற்படுத்தும் தூண்டுதல் அளவோடு தொடர்புடையது அல்ல. அவை இல்லாத போதும் இதனை உணரமுடியும். ஒரு தீவிரமான உதாரணமாக, உண்மையிலேயே மூட்டு பகுதியில் இல்லாத வலியை உணர்வது. உடலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டவர்களின் மூளையானது மிகவும் உண்மையான வலியை அவர்களுக்கு ஏற்படுத்தும்.
கண்ட்ரோல் கேட் கோட்பாடு என்பது என்ன?
இரவு நேரத்தில் ஏன் வலி உணர்வு அதிகரிக்கிறது. நமது படுக்கையில் எப்போது நாம் பாதுகாப்பாக இருப்போம்? இது எவ்வாறு உயிர்வாழ உதவுகிறது.
நமது மூளையின் செயல்பாடு முறைகள், உணர்வு எனும் அறிவியல் ஆகியவற்றுடன் விளக்கம் பெறலாம். 1960களில், ரோலண்ட் மெல்சாக் மற்றும் பேட்ரிக் வால் ஆகிய இருவரும் தங்களது கேட் கண்ட்ரோல் கோட்பாட்டை முன் வைத்தனர். முதுகு தண்டுவடத்திலேயே ஒரு தடுப்பு முறை இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அதில் முன் வைத்தனர். இதன் மூலம் வலியுடன் கூடிய உணர்வு மூளைக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், நாம் குறைவான வலியை உணரும் வகையில் கதவை மூடி வைப்பது போன்ற சில விஷயங்கள் அங்கே மேற்கொள்ளப்படும். மாறாக அது திறந்திருந்தால் இன்னும் தீவிரமான வலியாக உணரப்படும். உதாரணமாக, நமக்கு நாமே நம்மை தாக்கிக் கொண்டால், நமது தோலை நாம் தடவி விட்டுக் கொள்வது போன்ற இயந்திரத்தனமான செயல்தான். அப்போது ஏற்படும் உணர்வு வலியுடன் போட்டியிடுகிறது. வலியை குறைவாக உணரச் செய்கிறது.
இரவு நேரத்தின் அமைதியில், அந்த புலிகளின் உறுமல் அதிக சத்தமாக கேட்கும். அதே போல, நாம் ஏறக்குறைய மறந்து விட்ட, பகல் வேளையில் நாம் உணரந்த விரும்பத்தகாத சில சூழல்களை நாம் நினைவு படுத்திக் கொள்கின்றோம்.

பட மூலாதாரம், Getty Images
அங்கே தனியாக, இருட்டில், நம்மை திசைதிருப்ப மற்றும் கதவை மூடுவதற்கு எதுவும் இல்லை : படங்கள் இல்லை, ஒலிகள் இல்லை, மற்றவர்களுடன் தொடர்பு இல்லை.
அதிகாலை 4 மணி எனும் மோசமான தருணம்
1960ஆம் ஆண்டில் இருந்து புதிய கோட்பாடுகள், புதிய தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை வலியின் அறிவியலை வழங்கி வருகின்றன. ஆகவே, இரவு நேரத்தில் வலி ஏற்படுத்தும் சாத்தியமுள்ள முக்கியமான முகமையாக சர்க்காடியன் ரிதங்கள்-circadian rhythms என்று அழைக்கப்படும் நமது உடலின் சுழற்சி கடிகாரம் திகழ்வதாக பிரைன் (Brain) என்ற இதழில் கடந்த செப்டம்பரில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
இனெஸ் டாகெட் மற்றும் அவருடன் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதுமையான ஆய்வக ஆராய்ச்சியில் வலி மிகவும் தீவிரமாக உணரப்படும் நாளின் நேரம் என்பது காலை 4 மணி என உள்ளதாக கண்டறிந்தனர்.
தூக்கக் குறைபாடு என்பது சாத்தியமுள்ள விளக்கமாக இருக்கிறது. தவிர, இதன் தாக்கம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இனெஸ் டாகெட் மாதிரியில், சர்க்காடியன் ரிதங்கள் என்ற முறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நாம் நாள் முழுவதும் , நோயெதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடைய கார்டிசோல், அழற்சி, மெலடோனின் எனும் ஹார்போன் போன்றவற்றில் உள்ளதால், இந்த மாற்றங்கள் ஹார்மோன் சுழற்சி மட்டத்தில் நிகழ்வதோடு தொடர்புடையதாக இருக்கலாம்.
இவை எல்லாம் இருந்தபோதிலும் இது ஒரு பரிசோதனை ஆய்வு என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு ஆய்வக சூழலில், ஆய்வில் பங்கேற்போர் அவர்களின் இயற்கையான சூழலில் இருப்பதில்லை (அவர்கள் தங்களது படுக்கையில் உறங்குவதில்லை). அவர்களுக்கு செயற்கையாக வலி உண்டாக்கப்படுகிறது. (ஒரு இயந்திரத்தின் மூலம் அவர்களுக்கு வெப்பம் தூண்டப்படுகிறது)

பட மூலாதாரம், Getty Images
ஆபத்தான அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கை
ஹடாஸ் ஆராய்ச்சியாளர்கள் நஹ்மான்-அவர்புச் மற்றும் கிறிஸ்டோபர் டி. கிங் ஆகியோர் வெளியிட்டுள்ள முந்தைய ஆய்வின் விளக்கத்தில், நாம் உறங்கும்போது, இரவின் எதிரிகள் எனும் அபாயத்தில் நாம் மிகவும் பாதிக்கப்படுகிறோம். எனவே, குறைந்த தூண்டுதல் தீவிரம் போதுமானது என்ற உணர்வை அது உருவாக்குவதால் சாத்தியமான ஆபத்தில் இருந்து நம்மை எழுப்புகிறது.
சுருக்கமாக, இரவு நேரத்தில் நாம் ஏன் அதிகமான வலியை உணர்கின்றோம் என்பதை புரிந்து கொள்வதற்கு இன்னும் மேலும் ஆராய்ச்சி தேவை. நாம் ஆபத்துடன் உறங்கச்செல்லும்போது அந்த ஆபத்து நம்மை தின்று விடாமல் இருக்க நம்மை பாதுகாப்பதில் நமது மூளை முயற்சிக்கிறது என்பதாகத்தான் இது தோன்றுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












