பழங்கால ரகசியங்களை வெளிப்படுத்தும் துருவப்பகுதி டைனோசர்கள்

பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், ஜாரியா கோர்வெட்
- பதவி, பிபிசி ஃப்யூச்சர்
பனி மற்றும் பனிக்கட்டிகள் சூழ்ந்த பகுதிகளுக்கு மத்தியில் சில டைனோசர்கள் வாழ்ந்ததற்கான மலைக்க வைக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எவ்வாறு அவை வாழ்ந்தன?
குளிர்காலத்தின் மத்தியில் அலாஸ்காவின் மந்தமான மேகம் சூழ்ந்த பொழுது.. ஒருபுறம் கொல்வில் நதியின் பரந்து விரிந்த தட்டையான பகுதி இன்னொருபுறம் உறைந்த சாம்பல் நிறத்தில் ஒரு உயரமான பாறை இருந்தபோதிலும் அதற்கு அடுத்து நூற்றுக்கணக்கான மைல்கள், ஆர்டிக் பகுதியில் உள்ளது போன்ற பாழடைந்த மரங்கள் அற்ற வெற்றிடம் காணப்பட்டது.
வடதுருவத்தைப் போல மைனஸ் 28 செல்சியஸ் (-20F) வெப்பநிலையில் குளிர்ச்சியான காற்றினால் சூழப்பட்ட அந்த பகுதியில் பனிகட்டிகள் வழியே ஊருடுருவி செல்வதற்காக பனிக் கோடாரி மற்றும் உலோக தகடு பொருத்தப்பட்ட காலனிகளை அணிந்தபடி சென்ற பாட் ட்ருக்கன்மில்லர் ஏதாவது விசேஷமாக தன் கண்களுக்குத் தட்டுப்படுமான என தேடிக்கொண்டிருந்தார்.
2021ஆம் ஆண்டில், குன்றின் மீது செல்வது ஒரு தீவிர பயணமாக இருந்தது. அலாஸ்காவின் தொலைதூரத்தில் வடக்கில் உள்ள பகுதியில், சாலைகள் ஏதும் இல்லை.
எனவே, அலாஸ்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த பழங்கால ஆராய்ச்சியாளர், மற்றும் அவரது சக ஊழியர்களும் பனிப்பகுதியில் பயணிக்கக்கூடிய ஸ்கூட்டரில் பயணித்து அந்த இடத்தை வந்தடைந்தனர். பின்னர் அதனருகே ஒரு தற்காலிக கூடாரம் அமைத்தனர்.
மிகவும் குளிராக இருந்ததால், ஒவ்வொரு கூடாரத்திலும் மரங்களை எரிக்கும் ஸ்டவ் ஒன்று இருந்தது. வரும் வாரங்களில் அந்த குழுவினர் தொடர்ச்சியாக உறைபனிக்கு எதிராகவும் போராட வேண்டும். "பனிப்பாறைகள் சரிவு, ஆவேசமான பனிக்கரடிகள் ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டோம்.
ஆனால், இது பயனுள்ள முயற்சிகளில் ஒன்று," என்றார் ஆய்வாளர் ட்ருக்கன்மில்லர், இருள் சூழ்ந்த லேசான வெளிச்சத்தில், பனித்தடுப்பு கண்ணாடி வழியே ட்ருக்கன்மில்லர், எதைத்தேடி வந்தாரோ அதை கண்டுபிடித்தார். ஆற்று மட்டத்தில் இருந்து 50 அடி உயரத்துக்கு மேலே பாறை அடுக்கில் களிமண் மற்றும் மணலின் ஒரு அடுக்காக 10 செ. மீ தடிமனில் அது புதைந்திருந்தது.
சராசரியாக 73 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவாக கீழே கிடந்தபோது இப்போது இருப்பதை விடவும் அப்போதைய காலகட்டத்தில் உலகம் வெப்பமாக இருந்தது. ஆனால் அந்த பகுதி இன்னும் வடக்கே இருந்திருக்கும்.
இன்றைக்கு அலாஸ்காவின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த பகுதி குளிர்காலத்தில் ஒவ்வொரு நாளும் சில மணி நேர அந்தி மாலை போன்ற அரைவெளிச்சம் காணப்படும்.
முந்தைய காலத்தில் ஆண்டின் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாதங்கள் முழுவதும் இருளடர்ந்த பகுதியாக மூடிக் காணப்படும்.
அவ்வப்போது பனி துகள்களுடன் மைனஸ்10 டிகிரி செல்சியஸ் (14F) க்கு கீழே வெப்பம் குறைந்திருக்கும்.
இன்னும் வண்டல் மடிப்புக்குள் மறைந்திருக்கும் அவை, வரலாற்றில் ஒரு வினோதமான சகாப்தத்தின் கடைசி எச்சங்களாக, சிறிய எலும்புகள் மற்றும் பற்கள், முழுவதும் வெறும் மில்லிமீட்டராக காணப்படும், அவை ராட்சதமான ஒன்றின் சந்ததியினருக்கு சொந்தமானவை.
இங்குதான் ஆயிரக்கணக்கான டைனோசர்கள் இருந்துள்ளன. குஞ்சு பொரிக்காத முட்டைகள் இன்றுவரை இருக்கின்றன.
"இது ஒருவேளை ஒட்டு மொத்த அலாஸ்காவுக்குமான டைனோசர் எலும்புகளின் மிகவும் ஆச்சர்யகரமான அடுக்காக இருக்கலாம்," என்றார் ட்ருக்கன்மில்லர். "நடைமுறையில் அவைகள் வடதுருவத்தில் வாழ்ந்திருக்கும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
புவிப்பரப்பு சூடாகவும், ஈரமாகவும் இருந்தபோது வெப்பமண்டல உயிரினங்களாக உலகின் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் உலவும் பயங்கரமான, பல் நிறைந்த ஊர்வனவாக டைனோசர்கள் இருந்தன என நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
இது முற்றிலும் சரியல்ல என்பதை விஞ்ஞானிகள் பெரும் அளவில் உணர்ந்து வருகின்றனர். குளிர்ச்சியான இடங்களிலும் கூட டைனோசர்கள் இருந்துள்ளன.
அவற்றுக்கு உகந்த நல்ல காலநிலையில் மட்டுமின்றி அவை எப்போதாவது வெகு தொலைவில் வேறு ஒரு காலநிலையில் இருந்தன என்பது தெளிவாகிறது.
ஆஸ்திரேலியாவில் இருந்து ரஷ்யாவுக்கு சென்று சில நூறு டைனோசர்கள் ஒரு காலத்தில் மிகவும் குளிர்ச்சியான பகுதியில் வசித்திருக்கக் கூடும் என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்திருக்கின்றனர்.
ஒவ்வோர் இரவிலும் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களின் ஒளி நிரம்பிய வானத்தின் கீழ் பருந்து போன்ற கண்களை மூடிக்கொண்டு இருக்கும் .சில சமயங்களில் அழகிய வெள்ளிப் பனி போர்த்தப்பட்ட பகுதிகளுக்கு இடையே உணவு தேடும். இந்த டைனோசர்கள் தங்களின் வாழக்கூடிய எல்லைகளின் வரம்புகளுக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் வசிக்கவில்லை. அலாஸ்கா போன்ற இடங்களில், அவை செழித்து வளர்ந்தன.
கண்டுபிடிப்புகள் அவர்கள் கற்பனை செய்யும் விசித்திரமான காட்சிகளுக்கு அப்பாற்பட்ட தாக்கங்களைக் கொண்டுள்ளன - மிகப்பெரிய டைனோசர்களான அவை (சாத்தியமான) தங்களைத் தாங்களே இறகுகளை அசைக்கின்றன, அல்லது காத்திருக்கும் ஒரு பனிப்புயலுக்காக தங்கள் இறகுகளை உதிர்க்கின்றன.
ஒவ்வொரு கண்டுபிடிப்பும், துருவ பகுதி டைனோசர்கள் குழுவின் உடலியல் மற்றும் நடத்தை பற்றிய ஈர்க்கும் ஆச்சர்யகரமான தகவல்களை வெளிப்படுத்துகின்றன. இந்த கண்டுபிடிப்பில் இருந்து விஞ்ஞானிகள் மேலும் கற்றுக்கொள்கின்றனர். பழங்கால அறிவியலின் மிகவும் சிக்கலான கேள்விகளான, டைனோசர்கள் சூடான ரத்தம் கொண்டவையாக இருந்தனவா அல்லது குளிர் ரத்தம் கொண்டவையாக இருந்தனவா என்று பதில் அளிப்பதற்கு அவை உதவுகின்றன.
ஒரு வியத்தகு கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images
1961ஆம் ஆண்டு, ஷெல் என்ற எண்ணெய் நிறுவனத்திற்காக கொல்வில்லே நதி படுகையில் ராபர்ட் லிஸ்காம்ப் என்பவர் மேப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாரத ஒன்றை கண்டெடுத்தார்.
குன்றின் அடுக்குகளுக்கு வெளியே ஒட்டிக்கொண்டிருந்த ஒரு கையளவு எலும்புகளை கண்டெடுத்தார். அவை பாலுட்டிகளுடையதாக இருக்கும் என்று அவர் கருதினார். எனினும் அதனை தன்னுடன் எடுத்துக் கொண்டு சென்றார். ஒரு அலமாரியில் அதனை போட்டு வைத்தார். அதே ஆண்டு பாறைச்சரிவு ஒன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு தசாப்தங்களாக இந்த எலும்புகள் இருந்தது மறந்துபோனது. அந்த நிறுவனத்தின் ஆவணக்காப்பகத்தில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, நார்வே தீவான ஸ்வால்பார்டில் உட்பட பிற வடக்கு பகுதிகளில் டைனோசர் படிமங்களின் சிதறல்கள் , கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டவை குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கின.
1984ஆம் ஆண்டின் ஒரு நாளில், ஆச்சர்யமளிக்கும் கண்டுபிடிப்பு வெளியானது. லிஸ்கோம்ப் கண்டுபிடித்த இடமான கோல்வில் ஆற்றின் அதே வடக்கு சரிவில் டைனோசர்களின் தோலின் பதிவுகள் மற்றும் கால்தடங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதனை மனதில் வைத்து, பழைய எலும்புகள் அலமாரியின் டிராயரில் இருந்து மீட்கப்பட்டன.
அவை டைனோசர்களுக்கு சொந்தமானவை என்பது தெரியவந்தது. இது பழங்கால ஆராய்ச்சியாளர்களிடையே கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியது. உண்மையில் குளிர் ரத்தம் கொண்ட விலங்குகள் இவ்வளவு தூரம் வடக்கு பகுதியில் இருந்திருக்க முடியாதா? என பழமையான அனுமானங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன மேலும் விஷயங்கள் சூடுபிடித்தன.
நீண்டகாலத்துக்கு முன்பே, கோல்வில் நதியில் கிடைத்த எலும்புகள் சாத்தியமில்லாத நிகழ்வாக இல்லை என்பது தெளிவாக தெரியவந்தது. புவிப்பரப்பின் மற்ற ஆர்க்டிக்அல்லது அண்டார்டிகா போன்ற பிற பகுதிகளில் கிடைத்ததைவிடவும் அதிகமாக ஆற்று படுகையில் பாறை படிமங்களாக டைனோசரின் புதைபடிமங்கள் நிறைந்து காணப்பட்டன.
"மிகவும் முக்கியமாக, இது டைனோசர் தளமான துருவப்பகுதிக்கு மிகவும் தொலைவில் உள்ளது" என்கிறார் ட்ருக்கன்மில்லர். இந்த கண்டுபிடிப்புகளும் சேர்க்கப்பட்டதால், இறுதியில் சான்றுகள் மிகப்பெரியதாக மாறியது.
அந்த ஆரம்ப நாட்களில் கூட, மாடு போன்ற தாவரவகைகளை உண்டு வாழும் டைனோசர் இனத்தை சேர்ந்த எட்மண்டோசரஸ் எனும் விலங்கு, ட்ரைசெராடாப்ஸின் எனும் மூன்று கொம்பு முகம் கொண்ட தொடர்புடைய அடையாளம் தெரியாத விலங்கு, அதே போல அலெக்ட்ரோசொரஸ் எனும் சராசரி கடற் பாலூட்டியின் அளவைக் கொண்ட விலங்குகளை வேட்டையாடும் டைனோசர் வகையின் ஒற்றைப் பல் ஆகிய ஏராளமான புதைபடிவங்கள் இருந்தன.
உண்மையில் துருவ டைனோசர்களாக இருந்திருக்கின்றன என்பதால், எப்படி அவை பிழைத்திருந்தன என்பது தொடர்ந்து புரிந்துக்கொள்ளப்படாமலேயே இருக்கிறது.
அவை சூடாக இருக்கும்போது மட்டுமே அங்கு வாழ்ந்தன- அதன் பின்னர் அவை இடம்பெயர்ந்தன என்ற அதிர்ஷ்டவசமாக ஒரு எளிதான விளக்கம் இருக்கிறது. அவை தொலைதூர வகையான ஸ்டெர்னா பாரடைசியா எனப்படும் விலங்கைப் போல கோடைகாலத்தின் போது மட்டும் துருவப்பகுதிகளுக்கு சென்று வரகூடியதாக இருந்திருக்கும்.
பின்னர் குளிர்காலத்தில் வெப்பமான காலநிலைக்கு திரும்பி வரும் வகையில் இருந்திருக்கும். அவைகள் 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணிக்கும் என்று சில வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பின்னர் இந்த கோட்பாடும் ஒரு சிக்கலை எதிர்கொண்டது.
கிரெட்டேசியஸில் காலகட்டத்தின் பிற்பகுதியில் ஒரு குளிர் கோடை நாளில்,ஆர்க்டிக்கின் ஒரு சேற்று வெள்ளத்தை ஹட்ரோசர்களின் ஒரு பெரிய கூட்டம் கடந்து சென்றது. அப்போது சுமார் 10-12 செல்சியஸ் வெப்பம் நிலவியது (50-54F), மாடு போன்ற தாவரவகைகளை உண்ணும் வகையில் பற்களற்ற அலகுகள் மற்றும் பாரிய, சதைப்பற்றுள்ள வால்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன.
கிட்டத்தட்ட உறைபனிக்கு குறைந்த கடுமையான குளிர்காலத்தின் வெப்பநிலை இருந்தும் பிழைத்திருந்தன. சிறியவை, கொஞ்சம் வளர்ந்தவை, பெரியவை என அனைத்து வயதைக் கொண்ட ஆயிரகணக்கானவையாக அவை இருந்தன.
சேற்றின் குறுக்கே அவைகளின் ஊர்வலம் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்திருக்கலாம். ஆனால் அவை விட்டுச் சென்ற தடங்கள் விரைவில் மேலும் வண்டலால் மூடப்பட்டு, தொடர்ந்து வந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட்டன . 2014 ஆம் ஆண்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படும் வரை, கால்தடங்கள் மிகவும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டிருந்தன.

பட மூலாதாரம், Getty Images
டைனோசர்களின் கால்களில் உள்ள செதில்களை அளவிடுவது கூட சாத்தியமாக இருந்தது.
ஆனால் இன்னும் ஆர்க்டிக்கிற்கு உள்ளே, கோல்வில் நதி படுக்கைகளில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து தென்பகுதியில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால், இந்த புதைபடிவங்கள் அலாஸ்காவின் இயற்கை காப்பு வனப்பகுதியில் இருந்தன.
மிகச்சிறியவையான அவை நீண்ட இடம்பெயர்வைச் சமாளிக்க முடியாது என்பதால், இளம் டைனோசர்களின் தடங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவைகள் ஆண்டு முழுவதும் பிராந்தியத்தில் இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், எல்லோரும் நம்பவில்லை. ட்ருக்கன்மில்லர் தான் சிரமப்பட்டு கண்டுபிடித்த பாறை வளையத்துக்குள் நுழைந்தார்.
ஒரு தந்திரமான பணி
சில பழங்கால ஆராய்ச்சியாளர்கள், டால்பின்களைப் போன்ற அளவு கொண்ட தொடை எலும்புகளை தென் அமெரிக்காவின் வெப்பம் மிகுந்த பேட்லாண்ட்ஸ் பகுதியில் தோண்டி எடுத்தனர்.
ட்ருக்கன்மில்லரின் அணுகுமுறையில் இருந்து தவிர்க்க முடியாமல் வேறுபட்டது.
இந்த குழு முதலில் அலாஸ்காவில் உள்ள கோல்வில் நதி தளத்தில் பணியாற்றியது. இன்று வெப்பம் 1-10செல்சியஸ் ஆக (34-50F) இருக்கும்போது. கோடையில் வருகை தரும் இது இலட்சியத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதை அவர்கள் விரைவில் கண்டுபிடித்தனர்.
ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், அலாஸ்கா கொசுக்களால் திரள்கிறது - மாபெரும் மேகங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மனிதர்களின் மீது கருப்பு பனி போல பனிப்புயல்கள் கீழிறங்குகின்றன.
அவற்றில் பல வகை உள்ளன. அவை அலாஸ்கா நாட்டின் பறவை என்று விளையாட்டுத்தனமாக குறிப்பிடப்படுகின்றன. அவர்களின் கவலைகளில் மிக குறைந்த அளவே இது இருந்தது.
அவர்கள் பணியாற்றிய இடத்தின் செங்குத்தான பாறை முகம், உறைந்த நிலையில் இருக்கும் ஒரு தடிமனான அடி மேற்பரப்பு அடுக்கில் தளர்வாக ஒட்டப்பட்ட சேற்றுப் பாறைகளால் ஆனதாகும்.
"கோடையில் போதுமான வெப்பமயம் காரணமாக அந்த பனியில் சில உருகும் என்பதால், இந்த பாறைகள் பேரழிவு தரும் வகையில் சரிந்துவிடும்.நீங்கள் அவற்றில் ஒன்றின் கீழ் நின்றால், அவ்வளவுதான் உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது" என்கிறார் ட்ருக்கன்மில்லர்.
அந்த இடத்திற்கே உரிய பிரச்னைகளை முன்வைத்து விஞ்ஞானிகள் அதற்கு பதிலாக குளிர்காலத்தில் செல்ல முடிவு செய்தனர், .ஆர்க்டிக் பெருங்கடற் பகுதியில் இருந்து வெறும் 32 கிலோ மீட்டர் தொலைவில் அவர்கள் பணியாற்றினர். அது மிகவும் குளிராக இருந்தது சிறியவகை டைனோசர்களின் எலும்புகளை பிரித்தெடுக்கும் போது நாள் முழுவதும் தலைகுப்புற வயிற்றை தரையில் வைத்து படுக்க வேண்டும்.
மாறாக, குழு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பாறை அடுக்கைக் கண்டுபிடித்தவுடன், வெற்று நிலப்பரப்பின் அமைதியானது செயின்சா எனும் அறுக்கும் கருவி மற்றும் ஜாக்ஹாமர்கள் எனப்படும் உடைக்கும் கத்திகளின் ஒலியால் குலைந்தது.
முதலில் குழு அதைக் கடந்து செல்வதற்காக குன்றின் மீது சில படிகளை வெட்டியது. பின்னர் குறிப்பிட்ட எலும்புகளை விட. நம்பிக்கைக்குரிய தோற்றமுடைய வண்டல் தொகுதிகளை செதுக்கும் வேலையில் ஈடுபட்டனர்.
பின்னர் இவை ஸ்லெட்கள் எனப்படும் ஒரு தட்டையான அடிப்பகுதி கொண்ட ஒரு சிறிய வாகனம் மற்றும் ஸ்னோமொபைல்கள் எனப்படும் பனி வண்டிகளில் ஏற்றப்பட்டன, முழுவதும் உறைந்த ஆர்க்டிக் நிலையில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருந்த ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
அலாஸ்கா பல்கலைக்கழகத்துக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு, மறைத்திருக்கும் களிமண் கழுவப்பட்டது. “அடிப்படையில் ஒரு சிறிய மணல் பகுதிபோல அது இருந்தது. சிறிய எலும்புகள், பற்களை கண்டறிய நாங்கள் மணலின் ஒவ்வொரு துகளையும் நுண்ணோக்கி வழியாக ஆராய்ந்தோம்,” என்றார் ட்ருக்கன்மில்லர்.
அது மிகவும் மெதுவான, அதிக நேரம்பிடிக்கும் செயல்பாடாக இருந்தது. மாறாக டைனோசர்களை, தவிர தங்கத்தை வாங்குதல் போலத்தான் இதுவும்,” என்றும் குறிப்பிட்டார். ஒரு தசாப்த காலப்பகுதியில், இந்த சிறிய புதைபடிவங்களைத் தேடுவதில் அவரது குழு மில்லியன் கணக்கான மணல் துகள்களை ஆய்வு செய்ததாக அவர் மதிப்பிடுகிறார்.
அவரது குழு கண்டுபிடித்தது அசாதாரணமானது. “நாங்கள் வெறுமனே ஒன்று அல்லது இரண்டு வகையான சிறிய டைனோசர்களை மட்டுமல்ல, தாவரத்தை உண்ணுபவை மற்றும் இறைச்சி உண்பவை என சிறிய இனங்கள் மற்றும் பெரிய இனங்கள் உட்பட, ஏழு வெவ்வேறு வகையான டைனோசர்களின் ஆதாரங்களை உண்மையில் கண்டுபிடித்தோம்,” என்றார் ட்ருக்கன்மில்லர்.
முக்கியமாக, உண்மையில், குளிர் அதிகமாகும் போதுமட்டும் அவை நிச்சயமாக இடம்பெயரவில்லை. வாத்தின் தாடையைப் போன்ற ஹட்ரோசர் உள்ளிட்ட சில பொதுவான டைனோசர் வகைகள், அவற்றின் முட்டைகளை அடைகாப்பதற்கு அவற்றுக்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டன.
இளவேனில் காலத்தில் தாய் டைனோசர் முட்டைகளின் மீது உட்கார்ந்து அடைக்காக்க தொடங்கினால், அவை குஞ்சு பொரிக்கும் காலம் என்பது கிட்டத்தட்ட குளிர்காலமாக இருக்கும்.
ஆர்க்டிக்கில் குளிர்காலத்தில் இருள் சூழ்ந்திருக்கும் மாதங்களை தவிர்த்து கூடு கட்டுவதற்கு இந்த சிறிய டைனோசர்கள் எப்படியாவது உடனடியாக ஆயிரக்கணக்கான மைல்கள் இடம்பெயர வேண்டியிருக்கும்.
அங்கே வெறுமனே போதுமான நேரம் இல்லை. "இது தர்க்கத்தை மீறுவதாக இருக்கிறது. இந்த டைனோசர்கள் ஆண்டு முழுவதும் வசிப்பவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்கிறார் ட்ருக்கன்மில்லர்.
இந்த துருவ பகுதி டைனோசர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? மேலும் அவைகள் எப்படி உயிர் பிழைக்க முடிந்தது?
பனிமூடிய மர்மம்
கிரெட்டேசியஸ் எனும் பழங்காலதின் பிற்பகுதியில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் ஆர்க்டிக் வனப்பகுதியின் பரந்த வெளியில் அது இறுதியில் கொல்வில் நதியின் தளமாக மாறும்.ஊசியிலை மரங்கள் மற்றும் பழங்கால ஜிங்கோ மரங்களின் வெற்று கிளைகள் மொட்டு விட்டுகொண்டிருந்தன.
கீழே உள்ள ஃபெர்ன் எனப்படும் பூக்கள் அற்ற இலை தாவரம் மற்றும் குதிரைவாலிகளின் கீழ் தளத்தின் மீது பட்டு புள்ளிகள் போன்ற நிழல் படரும். ஹட்ரோசர்கள் கூட்டம், கூட்டமாக பசுந்தழைகள் மீது கவனம் இல்லாமல் உலவுகின்றன, பேச்சிரினோசொரஸ் எனும் ஆண் வகையினம் வலிமையான ட்ரைசெராடாப்ஸின் தொடர்புடைய ஒரு துணையை ஈர்க்கும் நம்பிக்கையில் தங்கள் ஆடம்பரமான கழுத்துடன் அணிவகுத்துச் சென்றன - ஒருவேளை அவைகளின் நீண்ட, குமிழ் போன்ற மூக்கு வழியாக எப்போதாவது குறட்டை போன்ற ஒலியை வெளிப்படுத்தும். சில சமயங்களில் தொடர்புடைய இந்த அமைதியானது பசியுள்ள நானுக்ஸாரஸ் அல்லது துருவ கரடி பல்லியின் துரத்தல் மற்றும் சத்தத்துடன் முடிவுக்கு வரலாம். அதன் தாடைகளின் செதில், கொக்கு போன்ற தெசெலோசரஸைப் பிடிக்க முடிந்தது.
பனி-வெள்ளை இறகுகளின் மென்மையான முடிகளுக்கு கீழே இரத்தம் சொட்டுவதால், அது சில சமயங்களில் , அதன் நவீன பெயரைப் போலவே குறிப்பிடத்தக்கதாகத் தோன்றியிருக்கலாம் என சித்தரிக்கப்படுகிறது. சாத்தியமான சமூக நாற்றங்கால் ஆக ,அருகில் பல கூடுகள் இருந்தன -. உள்ளூர் இனங்கள் தங்கள் முட்டைகளை அடைகாக்கும் இடத்தில்.
டைனோசர்கள் அவற்றின் தெற்கு பகுதி வகையைப் கொண்டிருக்கும். பறவை போன்ற வெலோசிராப்டர்கள்(கிரெட்சேசியஸ் காலத்தை சேர்ந்தவை), சௌரோனிடோலெஸ்டைன்கள், தங்களின் குட்டிகளோடு தன்னளவில் சேர்ந்து கொண்டன.
இறகுகளை முன்னெடுப்பதற்கு அவற்றின் சிறப்புப் பற்களைப் பயன்படுத்தியிருக்கலாம்.
பலதசாப்தங்களாக அல்லது பல நூற்றாண்டுகளாக சில டைனோசர் வகைகள் இந்த பகுதியில் இறந்திருக்கலாம். அருகில் உள்ள ஆறு அல்லது ஏரியில் அடித்துச் செல்லப்பட்டு முடிவுற்றிருக்கலாம். இந்த எலும்புகள் மற்றும் பற்கள் இந்த சிறிய தனித்த அடுக்குகளில் வண்டலாக குவியும் வகையில், ஒரு வழியில் இலையுதிர் காற்று புல் வழியாக வீசியிருக்கிறது" என்கிறார் ட்ருக்கன்மில்லர்.

பட மூலாதாரம், Getty Images
கொல்வில்லே நதிக்கரையில் உள்ள தளங்களிலிருந்து வண்டல் மண்ணில் அடையாளம் காணப்பட்ட இது, அதாவது உக்ருனாலுக் குக்பிகென்சிஸ் என்ற வகை உள்ளூர் இனுபியாட் மொழியில் "பண்டைய மேய்ச்சல்" என்று அழைக்கப்பட்டது. இந்த வகையான ஹட்ரோசர் வேறு எங்கும் காணப்படவில்லை, நிச்சயமாக, அவை இறுதியில் இருந்திருக்காது என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை, மேலும் அவை குளிருக்கு ஏதேனும் சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டிருந்தன என்பதை இது நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அது நம்பிக்கையளிக்கிறது.
அலஸ்கா டைனோசர்கள், ஆர்க்டிக் போன்ற குளிரான நிலைமைகளைச் சமாளிக்க அவைகளுக்கு உதவ உருவான நடத்தைகள் போன்ற சில தனித்துவமான அம்சங்களையாவது கொண்டிருந்திருக்கும் என ட்ருக்கன்மில்லர் கருதுகிறார். "சிறிய இனங்களில் சில, குறிப்பாக தாவரங்களை உண்பவை என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறது, , ஒருவேளை இவற்றில் சில குளிர்காலத்தில் சிறிய வளைகளை உருவாக்கி உறங்கும் அளுக்கு சிறியதாக இருக்கலாம்," என்றும் அவர் நம்புகிறார்.
இந்த தற்காலிக குறிப்புகள், மரத்தின் தண்டுகளில் உள்ளதைப் போன்ற எலும்பின் குறுக்குவெட்டுகளில் உள்ள வளர்ச்சி வளையங்களிலிருந்து வந்திருக்கின்றன. விலங்குகளின் வளர்ச்சி முறை ஆண்டுக்கு ஆண்டு எவ்வாறு மாறுபடுகிறது என்பதை இந்த அடையாளங்கள் காட்டுகின்றன.
செயலற்ற உறக்கநிலையின் போது வளர்ச்சி நிறுத்தப்பட்டால், இந்த இடைவெளியானது ஒரு வளையத்தை விட்டுச் செல்கிறது. ட்ருக்கன்மில்லரின் கூற்றுப்படி, கோல்வில்லே ஆற்றின் சரிவுகளில் இருந்து கண்டறியப்பட்ட பல டைனோசர்களில் இந்த தனித்துவமான பட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றில் சில செயலற்ற உறக்கநிலையில் இருந்திருக்கலாம்.
டைனோசர்கள் குறைந்தபட்சம் வளைகளுக்காகத் துளையிடுதல் போன்ற சில தேவையான சில அம்சங்களை கொண்டிருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை இது சேர்க்கிறது.2007 ஆம் ஆண்டில், ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் போன்ற அளவைக் கொண்ட ஒரிக்டோட்ரோமியஸின் எனும் ஒரு வகை டைனோசரின் புதைபடிவ எலும்புக்கூடு - அதன் இரண்டு குட்டிகளுடன் தென்மேற்கு மொன்டானாவில் ஒரு வசதியான சிறிய வளைபோன்ற துளையில் கண்டுபிடிக்கப்பட்டன.
புதையுண்டிருந்த முழு நிலமும் சுமார் 100 மில்லியன் ஆண்டுகளாக எந்த இடையூறும் இல்லாமல் இருந்தன. அவை தெசெலோசொரஸ் இனத்தின் ஒரு பகுதியாகும், அவற்றில் சில கோல்வில்லே நதி தளத்திலும் காணப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
" உண்மையில் அலாஸ்காவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட வகைகள் உள்ளன. இந்த இனங்கள் கூட வளைகளை துளையிடுபவை. எனவே, உறக்கநிலையில் இருந்திருக்கக்கூடும்" என்கிறார் ட்ருக்கன்மில்லர். துரதிருஷ்டவசமாக, கூடுதலாக ஆர்க்டிக்கில் மற்றொரு வளைவைக் கண்டறிந்து இதை நிரூபிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
உடல் கொழுப்பில் அடுக்குகளை கட்டமைக்கும் நவீனகால பாலூட்டிகள் செய்வதைப் போல குளிரை எதிர்கொள்ளும் இன்னொரு சாத்தியத்தை டைனோசர்கள் கொண்டிருந்தன.
ஒவ்வொரு கோடைகாலத்திலும் எடையைக் குவிக்கும் பெரிய மான் வகை மற்றும் கலைமான் போன்ற உதாரணத்தை ட்ருக்கன்மில்லர் சுட்டிக்காட்டுகிறார். குளிர்காலத்தில் உணவு அரிதாக இருக்கும் போது அவற்றின் கொழுப்பு இருப்பு மற்றும் குறைந்த தரம் வாய்ந்த தீவனத்தின் கலவையில் உயிர்வாழலாம் - இந்த உத்தி, அவற்றை சூடாக வைத்திருக்கும் கூடுதல் போனஸைக் கொண்டுள்ளது.
"அடிப்படையில் அவைகள் மெல்ல பசிப்பதை கொண்டிருக்கின்றன" என்று சொல்லும் அவர், "டைனோசர்கள் அதைச் செய்திருக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை," என்றும் குறிப்பிட்டார்.
டைனோசர்கள் தங்கள் உடல் வெப்பநிலையை எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதற்கு ஒரு தகவமைப்பை கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.
டைனோசர்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அவை வெப்பமானவையா அல்லது குளிர் இரத்தம் கொண்டவையா என்று விஞ்ஞானிகள் விவாதித்து வருகின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், அடிப்படையில் அவை பாரிய, எக்டோர்மிக் ஊர்வன என்று பரவலாகக் கருதப்பட்டது - அவைகள் தங்களை தாங்களே உடல் வெப்பத்தை உருவாக்க முடியவில்லை (அதாவது, சூரிய ஒளி அல்லது சூடான பாறை மேற்பரப்பு போன்ற வெளிப்புற மூலங்களைச் சார்ந்து உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துபவை).
மேலும் நவீனகால உயிரினங்களைப் போல சூரிய ஒளியில் இருக்க வேண்டியிருந்தது. 1854 இல் லண்டனில் கிரிஸ்டல் பேலஸ் டைனோசர் சிற்பங்கள் திறக்கப்பட்டபோது, அவை பருமனான, செதில்கள் கொண்ட பல்லிகள் போல இருந்தன.
டைனோசர்களின் வாழ்க்கையில் இருந்து விஞ்ஞானிகள் மேலும் சிலவற்றை கற்றனர். அந்த நவீன பறவைகள் அடிப்படையில் மூக்கு, இறகுகள் கொண்ட டைனோசர்கள் என்பதை உணரத் தொடங்கினர். அவை துல்லியமாக இருந்தனவா என்றும் பலர் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
இறுதியில், டைனோசர்கள் ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையில் வெப்பநிலையை பராமரித்து இருக்கலாம் என்று அவர்கள் ஒருமித்த கருத்தை உருவாக்கினர், இன்னும் சமீப காலம் வரை வலுவான சான்றுகள் ஓரளவு குறைவாகவே இருந்தன.
ஆர்க்டிக் டைனோசர்கள் இவை எல்லாவற்றையும் மாற்றிவிட்டன. " இந்த டைனோசர்கள் ஓரளவுக்கு நிச்சயமாக சூடான இரத்தம் கொண்டவை என்பது இந்த முழு கதையிலும் நாம் கருதும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது " என்று கூறுகிறார் ட்ருக்கன்மில்லர்.
"நிச்சயமாக இந்த டைனோசர்கள் சில அளவு உள்வெப்பநிலையைக் கொண்டு தங்களுடைய உள் வெப்பத்தை உருவாக்கிக் கொண்டன. அது ஒரு குளிர் சூழலில் வாழ்வதற்கு ஏற்ற முன்னெச்சரிக்கை ஏற்பாடாகும்."

பட மூலாதாரம், Getty Images
வியக்கத்தக்க வகையில், அலாஸ்காவின் புதைபடிவ படுக்கைகளில் ஊர்வனவற்றின் புதைபடிவ எச்சங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை - பறவைகள், பாலூட்டிகள் மற்றும் டைனோசர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.
"இப்போது நீங்கள் மொன்டானாவில் பணிபுரிந்தால், டைனோசர்களைத் தேடுகிறீர்கள் என்றால், வழியில் முதலைகள், ஆமைகள், பல்லிகள் போன்றவற்றைத்தான் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்... அந்த குளிர் இரத்தம் கொண்ட இனகுழுக்களின் எச்சத்தை நாங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை," என்கிறார் ட்ருக்கன்மில்லர்.\
நிச்சயமாக, அனைத்து டைனோசர்களும் சூடான இரத்தம் கொண்டவை அல்ல, இனத்தைப் பொறுத்து அவர்களின் உடல் வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் (31F) வரை மாறுபடும் என்பதற்கான சான்றுகள் உள்ளன, சிறிய அளவிலான டைனோசர்கள் 29 டிகிரிசெல்சியஸ் முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை இருக்கின்றன (115-84F). ஒப்பீட்டு அளவில் பெரும்பாலான பாலூட்டிகள் 36 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை (97-104F) உள்ளன. பறவைகள் குறிப்பிடத்தக்க அளவு வெப்பமாக இருக்கும் போது, பரந்த அளவில் 41 முதல் 43 செல்சியஸ் (105-109F) வரை வெப்பம் கொண்டிருக்கின்றன.
ஆயினும்கூட, தாக்கங்கள் மிகப்பெரியவை. வெப்பமான விலங்குகள் பொதுவாக வேகமான வளர்ச்சி விகிதம் மற்றும் அதிக உணவுக்கான தேவை போன்ற சில பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் முக்கியமாக, உயிர்வாழ்வதற்கு உலகளாவிய குளிர்ச்சி சில குழுக்களை அனுமதித்தது என்ற கருத்தானது, வரலாற்று ரீதியாக டைனோசர்களின் அழிவுக்கும் காரணமானது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. பாலூட்டிகள் மற்றும் பறவைகள் அதைக் கையாள முடியும் என்றால், ஏன் ஆர்க்டிக் டைனோசர்கள் அதை கையாளவில்லை?
அலாஸ்காவில் கிடைத்த டைனோசர்களுக்கான சான்றுகள் 1980 களில் கிடைக்கத் தொடங்கியதால், விஞ்ஞானிகள் ஏற்கனவே தங்களுக்கு மற்றொரு விளக்கம் தேவைப்படலாம் என்பதை உணர்ந்திருந்தனர். இன்று பெரும்பாலானவை அழிந்து போனதற்கு உண்மையான காரணம் அவற்றின் அளவுதான் என்று கருதப்படுகிறது, அதாவது கிடைக்கக்கூடிய உணவை விடவும் அதிக அளவு உணவு அவற்றுக்கு தேவைப்பட்டதாக இருந்தது. இதில் இருந்து மணிரப்டோரன்(முதன்முதலில் ஜுராசிக் காலத்தில் புதைபடிவ பதிவில் தோன்றின) அல்லது கைகளை கைப்பற்றும் டைனோசர்கள் வகை விதிவிலக்காக இருந்தன. இந்த வகையின் மிகச்சிறிய, இறகுகள் கொண்ட விலங்குகள் - சுமார் ஒரு கிலோகிராம் (2.2 பவுண்ட்) எடையுள்ளவையாக பற்றிக்கொள்ளவும் தகவமைத்துக் கொள்ளக்கூடியவையாகவும் இருந்தன. இந்த பரம்பரை பறவைகள் என்பது இப்போது நமக்குத் தெரியும்.
ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பின் போதும், கிட்டத்தட்ட இந்த துருவப்பகுதி டைனோசர்கள் புவிப்பரப்பு முழுவதும் உள்ள தடயங்கள் வாயிலாக தங்கள் இனத்தின் பன்முகத்தன்மை மற்றும் பின்னடைவுக்கான காரணங்களை வெளிப்படுத்துகின்றன - மேலும் அவை ராட்சத பல்லிகளை விட அதிகம் கொண்டவை என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
ஜாரியா கோர்வெட் பிபிசி ஃபியூச்சரின் மூத்த பத்திரிகையாளர் ஆவார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













