இலங்கை தேர்தல்: கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ ஆதரவு பெற்றது எந்தப் பகுதியில்?

பட மூலாதாரம், Getty Images
இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பெரும்பான்மை சிங்கள மக்கள் செறிந்து வாழும் அநேகமான பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், சஜித் பிரேமதாஸ தமிழர் பிரதேசங்களில் முன்னிலை வகிக்கின்றார்.
குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவு மாத்திரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, களுத்துறை, பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கான தபால்மூல முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த பகுதிகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.
அத்துடன், காலி மாவட்டத்தின் ஹபராதுவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகளின் பிரகாரமும் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தின் தபால் தேர்தல் முடிவுகளின் பிரகாரமும் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.
மேலும், குருநாகல் மாவட்டத்திற்கான தபால் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
குருநாகல் மாவட்டத்தில் 45,193 வாக்குகளை பெற்று தபால் தேர்தல் முடிவுகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.
கம்பஹா மாவட்ட தபால் தேர்தல் முடிவுகளின் படி, கோட்டாபய ராஜபக்ஷ 30,918 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கின்றார்.
மாத்தறை மாவட்டத்தின் தபால் வாக்குகளின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிப்பதுடன், அதே மாவட்டத்தில் தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகளின் படி கோட்டாபய ராஜபக்ஷ 43,556 வாக்குளினால் முன்னிலையில் திகழ்கின்றார்.

பட மூலாதாரம், Getty Images
அதேபோன்று மாத்தறை தேர்தல் மாவட்டத்தின் அக்குறஸ்ஸ தேர்தல் தொகுதியில் 53,478 வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.
மாத்தளை மாவட்டத்திலும் தபால் தேர்தல் முடிவுகளின் படி, 13,405 வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.
இலங்கையில் தென் பகுதிகளில் அனைத்திலும் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












