இலங்கை போர்: தாமதிக்காமல் உடனடியாக ஐ.நா., நீதி வழங்க வேண்டும்
உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை அரசை ஐ.நா., விமர்சித்துள்ளது. சர்வதேச அழுத்தத்தால் இலங்கை தமிழர்களுக்கு நீதி வழங்க முடியுமா? அல்லது இலங்கை அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வந்தால்தான் நீதி கிடைக்குமா? என பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் கூறிய கருத்துகளை தொகுத்து வழங்கி உள்ளோம்.
"ஐ.நா., சபையால் அழுத்தம் மட்டும்தான் கொடுக்க முடியும். இலங்கை அரசு, தமிழர்களும் மனிதர்கள்தான் என்று நினைக்கிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு விடிவுகாலம்" என்கிறார் பிபிசி ஃபேஸ்புக் நேயர் சரோஜா பாலசுப்பிரமணியன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது உறங்கிக் கொண்டிருந்த ஐ.நா., சபை இப்போதுதான் விழித்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ள பிபிசி நேயர் இளந்தென்றல், இனியும் தாமதிக்காமல் ஐ.நா உடனடியாக நீதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள துரை முத்துசெல்வம், "இலங்கை அரசு தனது நடவடிக்கைகளில் மாற்றங்களை கொண்டு வருவதுடன் போர் குற்றவாளிகளுக்கு இலங்கை அரசின் உச்சபட்ச தண்டனையை தாங்களே வழங்க வேண்டும்" என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"உலக அரங்கில் எடுக்கும் நடவடிக்கைகள் காலம் கடந்துதான் உள்ளது. இது எப்பொழுது எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கை. அப்பொழுது வேடிக்கை பார்த்து விட்டு இப்பொழுது நிறைய மக்களை இழந்த பின் எடுப்பதால் என்ன பயன்" என்று வினவுகிறார் சுப்புலட்சுமி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்