'போர்க்குற்றம்' தொடர்பாக எனக்கு எதிராக வழக்கு தொடர முடியாது: ஜகத் ஜெயசூர்ய

போரில் இறுதி கட்டங்களில் ராணுவ தளபதியாக செயல்பட்ட ஜகத் ஜெயசூர்ய (நடுவில் இருப்பவர்)

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, போரில் இறுதி கட்டங்களில் ராணுவ தளபதியாக செயல்பட்ட ஜகத் ஜெயசூர்ய (நடுவில் இருப்பவர்)

போர் குற்றங்கள் தொடர்பாக தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாதென்று முன்னாள் இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யவிற்கு எதிராக தென் அமெரிக்க நாடுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள போர் குற்ற வழக்குகள் தொடர்பாக அவர் இலங்கையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை அறிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய, யுத்தம் நடைபெற்ற போது ராணுவத்திற்கு தலைமை தாங்கி தானே உத்தரவுளை வழங்கியதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா பலமுறைகள் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு எந்த விதமான அடிப்படை காரணங்களும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தற்போது எழுந்துள்ள நிலை குறித்து தான் இலங்கை ரானுவத்தின் தற்போதைய தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய ஜகத் ஜெயசூரிய, தனிப்பட்ட ரீதியில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென்றும், அரசாங்கம் தலையிடுவதன் மூலம் மாத்திரமே இந்த சிக்கலை தீர்த்து வைக்கமுடியுமென்றும் தெரிவித்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக இலங்கை ராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரோஷன் சேனவிரத்ன நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

காணொளிக் குறிப்பு, ஹாங்காங்கின் கிழக்கில் சூறாவளி காற்றால் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 11 பேர் ஆச்சரியமூட்டும் வகையில் காப்பாற்றப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :