டெங்கு அச்சுறுத்தல்: கொசு ஒழிப்புப் பணியில் அதிகாரிகளுக்கு உதவும் இலங்கை ராணுவம்
நாட்டின் மிக மோசமான டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து, அதற்குக் காரணமான கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க, இலங்கை சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் பணியில் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Science Photo Library
ஈரப்பதம் நிறைந்த மழைக்காலப் பருவநிலை, வெள்ளத்தால் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் குவிந்து வரும் அழுகிய நிலையில் உள்ள குப்பைகள் அனைத்தும் ஒன்று சேர கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளன. கொழும்பு நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தன் இருபத்தி ஐந்து குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 71 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு முழுவதும் பாதிக்கப்பட்ட 55 ஆயிரத்தை விடவும் அதிகம்.
இந்த ஆண்டு மட்டும் டெங்கு காய்ச்சலால் 200-க்கும் அதிகமானோரை உயிரிழந்துள்ளனர். 30 பேரின் உயிரிழப்புக்கு காரணமான குப்பை குவியல் மையம் சரிந்ததை தொடர்ந்து, ஏப்ரல் மதம் முதல் நகராட்சியின் குப்பை சேகரிப்பு குறைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
- இலங்கை : டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலால் மொரட்டுவ பல்கலைக்கழகம் மூடல்
- இலங்கை : டெங்கு காய்ச்சலுக்கு அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள்
- இலங்கை: டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதா?
- 'இலங்கையில் உயிரிழப்புகளுக்கு குப்பைகள் அதிகரிப்பு காரணம்'
பிற செய்திகள்
- 150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?
- குடும்பத்துக்கு விடுமுறை, வனத்தில் குதூகலம்
- ஃபேஸ்புக்கின் ஆளில்லா விமான சோதனை ஓட்டம் வெற்றி
- பிட்காயின்களை பிணைத்தொகையாக கேட்கும் இணையவழி தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் :யுக்ரேயின்
- நீண்டகால நோய்களுக்கு இலவச மருந்து பரிந்துரைச்சீட்டு கொடுக்கலாமா?
- இரானில் இந்த ஆண்டில் மட்டும் 239 பேருக்கு தூக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












