இரானில் இந்த ஆண்டு இதுவரை 239 பேருக்கு தூக்கு

பட மூலாதாரம், Getty Images
நிகழாண்டின் முதல் பாதியில் 239 பேருக்கு துக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக இரானிய மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இதில் மூன்று பேர், அவர்கள் குற்றம் இழைத்தபோது 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர் என்று அந்த அமைப்பு கூறியது.

பட மூலாதாரம், Getty Images
இரானிய ஆட்சியாளர்களால் 45 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டது. மீதமுள்ளவை, அலுவல்பூர்வமற்ற வட்டாரங்களில் தெரிவிக்கப்படுபவை.
தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் பாதிப் பேர் போதை பொருள் தொடர்புடைய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு, குறைந்தது 530 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இரானிய மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












