இலங்கையில் கப்பலுடன் மீன்பிடி படகு மோதி விபத்து - 7 மீனவர்கள் மீட்பு
காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடல் தொழிலுக்காக சென்ற படகு, வர்த்தக கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான படகில் பயணித்த 7 மீனவர்களையும் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

காலி மீன்பிடித்துறைமுகத்திலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவிலேயே மீனவப் படகு விபத்துக்குள்ளானதாகவும், அவர்களை கடற்படைக்கு சொந்தமான விரைவுப் படகின் உதவியுடன் காப்பாற்றியுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, விபத்துக்குள்ளான படகு மற்றும் விபத்தை எதிர்நோக்கிய மீனவர்களை கடற்படையினர் காலி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.








