காமன்வெல்த் 2022: இறுதிப்போட்டிக்குள் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி - 10 தகவல்கள்

இந்திய மகளிர் கிரிக்கெட்

பட மூலாதாரம், @WeAreTeamIndia

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. அதன் முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  • காமன்வெல்த் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்ட மகளிர் டி20 கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இதையடுத்து இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துடன் இந்திய மகளிர் அணி விளையாடும்.
  • 165 என்ற வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது.
  • முன்னதாக, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் முறையே 61 மற்றும் 44 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 20 ஓவர்களில் 164/5 ரன்களை எடுத்தது.
  • மந்தனா இந்தியப் அதிவேக அரை சதத்தை குறுகிய நேரத்தில் பதிவு செய்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நீண்ட நேரம் கிரீஸில் தமது இருப்பை தக்க வைக்கத் தவறினார்.
1px transparent line
  • இந்தியா ஸ்மிருதி மந்தனாவும் ஷபாலி வர்மாவும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். 61 ரன்களில் ஆட்டமிழந்த ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 3 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் அவர் 61 ரன்களை குவித்தார். இங்கிலாந்து கேப்டன் நாட் ஸ்கீவரால் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மந்தனா இன்னிங்ஸின் 6வது ஓவரில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
  • இங்கிலாந்து அணியின் கேப்டன் நடாலீ சிசிவெர் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் ஸ்னே ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • மந்தனாவின் மைல்கல் ஆட்டத்துக்குப் பிறகு, ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்தார். முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
  • புதன்கிழமை நடந்த கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் பார்படாஸை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா, அடுத்து எதிர்கொண்ட பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • டீம் இந்தியா தனது குரூப் ஏ பிரச்சாரத்தை மொத்தம் நான்கு புள்ளிகளுடன் முடித்தது, மறுபுறம் இங்கிலாந்து குரூப் பி இல் முதலிடத்தைப் பிடித்தது.
1px transparent line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: