ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியப் பெண்களின் வெற்றி நழுவியது எங்கே?

ஹாக்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்

ஒலிம்பிக் ஹாக்கி களத்துக்குள் பரம்பரமாகச் சுழன்று அதிகமான நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்திய வீராங்கனைகளுக்கு கெடுவாய்ப்பாக வெற்றி கைநழுவிப் போயிருக்கிறது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி - பிரிட்டன் அணி இடையிலான கடைசி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.

முதல் கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் இரண்டாவது காற்பகுதி தொடங்கியதுமே பிரிட்டன் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

பிரிட்டன் வீராங்கனை அடித்த பந்து இந்திய வீராங்கனை தீப் கிரேஸின் மட்டையில் பட்டது. அதைத் திருப்ப முயன்றபோது தவறுதலாக கோலுக்குச் சென்றது. இதுவே இந்திய அணிக்குத் தொடக்க சறுக்கலாக அமைந்தது.

அடுத்த சில நிமிடங்களில் பிரிட்டன் அணி மற்றொரு கோலை அடித்து வலுவான நிலைக்குச் சென்றது.

இதற்குப் பதிலடி தரும் வகையில் 25-ஆவது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு கோலை அடித்து 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலைக்குச் சென்றது இந்தியா. இந்த இரு கோல்களையும் குர்ஜித் கவுர் அடித்தார்.

பாதி நேர ஆட்டம் முடிய ஒன்றரை நிமிடம் இருந்த நிலையில் இந்திய அணி மற்றொரு கோலை அடித்து 3-2 என்று முன்னிலைக்குச் சென்றது.

மூன்றாவது கால்பகுதி ஆட்டத்தில் பிரிட்டன் அணி மற்றொரு கோலை அடித்து சமநிலைக்குக் கொண்டுவந்தது.

இதனால் நான்காவது கால்பகுதி ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக அமைந்தது. 48-ஆவது நிமிடத்தில் பிரிட்டனின் கிரேஸ் கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்குக் கொண்டு வந்தார்.

அதன் பிறகு ஆட்ட நேர இறுதி வரை இந்திய அணியால் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை. கடைசி நேர பெனால்ட்டி கார்னரும் இந்த வீராங்கனைகளுக்குப் பலன் கொடுக்கவில்லை.

ஹாக்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டன் வீராங்கனைகள் தாக்குதல் ஆட்டத்தை நடத்தினர்

தாக்குதல் ஆட்டத்தில் பிரிட்டன் வீராங்கனைகள்

போட்டி முழுவதுமே பிரிட்டன் வீராங்கனைகள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரணைத் தகர்த்து பல முறை கோலடிக்கும் வாய்ப்பை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். களத்தில் இருந்தே நேரடியாக 12 முறை கோலை நோக்கி அவர்கள் பந்தை அடித்தனர்.

இது தவிர போட்டி முழுவதும் மொத்தம் 7 பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் பிரிட்டனுக்குக் கிடைத்தன. இதில் ஒன்றேயொன்றில் மட்டுமே அவர்களால் கோல் அடிக்க முடிந்தது.

இந்திய பாதுகாப்பு அரண் உறுதியாக இல்லாதிருந்தால் இன்னும் பல கோல்களை பிரிட்டன் அடித்திருக்கும். முதல் கால்பகுதி ஆட்டத்தில் பிரிட்டனின் பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை இந்திய கோல்கீப்பர் சவீதா அற்புதமாகத் தடுத்தார். களத்தில் இருந்து கோலை நோக்கி வந்த பந்துகளை 6 முறை தடுத்தார்.

அதே நேரத்தில் இந்திய வீராங்கனைகள் தங்களுக்குக் கிடைத்த 8 பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இரண்டு கோல் அடித்தனர்.

இந்திய வீராங்கனைகளில் பல தருணங்களில் 10 பேருடன் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு பேர் பச்சை அட்டை மூலமாகவும் ஒருவர் மஞ்சள் அட்டை மூலமாகவும் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பச்சை அட்டை என்றால் 2 நிமிடமும் மஞ்சள் அட்டை என்றால் 5 நிமிடமும் களத்துக்குள் வர முடியாது.

ஹாக்கி

பட மூலாதாரம், Getty Images

தேம்பி அழுத வீராங்கனைகள்

போட்டியில் தோல்வியடைந்ததும் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் பலர் கண்ணீர் விட்டுத் தேம்பி அழுதது பலரையும் நெகிழச் செய்தது.

பல வீராங்கனைகள் களத்தில் இருந்து வெளியேற இயலாமல் சோகத்துடன் நின்றனர். அவர்களுக்கு பிரிட்டன் வீராங்கனைகள் சிலர் ஆறுதல் கூறினர்.

களத்துக்கு வெளியே இருந்த இந்தியக் குழுவினரும் கண்ணீர் வடித்தனர். ஒருவொருக்கொருவர் கட்டிப் பிடித்து தங்களைத் தேற்றிக் கொண்டனர்.

இதயங்களை வென்ற இந்திய வீராங்கனைகள்

1980ஆம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, டோக்யோ உட்பட மூன்று ஒலிம்பிக் போட்டிகளில்தான் இதுவரை பங்கேற்றிருக்கிறது. அதிலும் பதக்கத்துக்கு அருகே நெருங்கி வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

டோக்யோ ஒலிம்பிக் லீக் சுற்றில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த இரு போட்டிகளில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இந்திய அணி.

ஹாக்கி

பட மூலாதாரம், Getty Images

காலிறுதியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை படைத்தது

கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் பிரிட்டனுடன் 1-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதற்குப் பழிதீர்த்துக் கொள்ளும் முனைப்பில் இந்திய வீராங்கனைகள் களமிறங்கினர். இதன் மூலம் ஏற்கெனவே அவர்கள் இந்திய மனங்களை வென்றிருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தைத் தவற விட்டாலும் இந்தியப் பெண்களின் துணிச்சலும் திறனும் என்றும் போற்றத்தக்கதாக இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இதேபோல் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கும் இந்திய ஹாக்கி வீராங்கனைகளின் போராட்டத்தைப் பாராட்டியிருக்கிறார். இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் திகழ வேண்டும் என்றும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

பிரிட்டன் ஹாக்கி அமைப்பும் இந்திய அணியின் போராட்ட குணத்தைப் பாராட்டியிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகள் அவர்களுக்கு சிறப்பாக அமையும் என்றும் கூறியிருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

சக் தே இந்தியா படத்தில் ஹாக்கி பயிற்சியாளராக நடித்த ஷாருக்கான், இந்தத் தோல்வி அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் போராட்டத்தைப் பாராட்டியிருக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :