உற்சாகத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜன்: "அடுத்தகட்ட சவால்களுக்கு தயார்" என்று ட்விட்டரில் பதிவு

பட மூலாதாரம், Twitter
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நடராஜனுக்கு அணியின் நிர்வாகம் சார்பில் புதிய ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆடையுடன் உற்சாகமாக காணப்படும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடராஜன், "வெள்ளை ஜெர்சியை அணியும் பெருமைமிக்க தருணமிது. அடுத்தகட்ட சவால்களுக்கு தயாராக இருக்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னியில் வரும் ஏழாம் தேதி தொடங்கவுள்ள போட்டியில் இந்திய அணியின் சார்பாக நடராஜன் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 1-2 என தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டி வரும் ஜனவரி ஏழாம் தேதி சிட்னியிலும், நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15ஆம் தேதியும் தொடங்குகின்றன.
தொடரிலிருந்து விலகிய கே.எல். ராகுல்

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கே.எல். ராகுல் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
"மெல்போர்னில் கடந்த சனிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டபோது கே.எல். ராகுலுக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரால் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது. காயமடைந்துள்ள ராகுல், இந்தியாவுக்கு திரும்பி பெங்களூரூவில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் காயத்துக்குச் சிகிச்சை பெறவுள்ளார்" என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. மேற்கொண்டு உமேஷ் யாதவால் விளையாட முடியாத காரணத்தால் அவருக்கு பதிலாக தற்போது நடராஜன் சேர்க்கப்ட்டுள்ளார்.
முன்னதாக முகமது ஷமிக்கு பதிலாக ஷரதுல் தாக்கூர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவது தொடர் கதையாகி வருகிறது. இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் என வேகப்பந்து படை தத்தளித்து வருகிறது. இந்த நிலையில்தான் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவாரா என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியவரும்.
கடந்த செப்டம்பர் மாதம் சன் ரைசர்ஸ் அணியில் அறிமுகமான நடராஜன் ஐபிஎல்லில் சிறப்பாக பங்களித்ததன் மூலம் ஆஸ்திரேலியா தொடரில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் ஒருநாள், டி20 தொடர்களிலும் சேர்க்கப்பட்டார். நடராஜன் இந்திய அணிக்கு ஒரு துருப்புச் சீட்டாக உருவெடுத்தார். இந்த நிலையில்தான் டெஸ்ட் தொடரிலும் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
- இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
- ஜாக் மா மாயமாகிவிட்டாரா? சீன அரசுடனான மோதல்போக்கு காரணமா? - எழுப்பப்படும் கேள்விகள்
- யுரேனியம் செறிவூட்டலை திடீரென அதிகரித்த இரான் - எச்சரிக்கும் உலக நாடுகள்
- தகனம் செய்யப்படும் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: பிரச்சனை எழுப்பும் ஜாகிர் நாயக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












