India Vs Australia கிரிக்கெட்: கேப்டன் ஃபின்ச், ஸ்டீவன் ஸ்மித் சதம், 374 குவித்த ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images
இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
ரோகித் ஷர்மா இல்லாத நிலையில், அணியில் மயாங்க் அகர்வாலை சேர்த்துள்ளார் இந்திய அணித் தலைவர் விராட் கோலி.
ஆரம்பத்தில் நிதானமாக விக்கெட் இழப்பின்றி ரன் சேர்த்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடியாக விளையாடியது. அணித் தலைவர் ஃபின்ச் 114 ரன்கள் எடுத்தார்.
62 பந்துகளில் ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்தார். 19 பந்துகளில் மேக்ஸ்வெல் 45 ரன்கள் எடுத்தார். இருவரது அதிரடியும் ஆஸ்திரேலியாவின் அபார ஸ்கோருக்கு வழி வகுத்தன.
ஆட்ட இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஷமி மட்டும் 10 ஓவர் வீசி, 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்திருந்தார். மற்ற பௌலர்கள் விட்டுக்கொடுத்த ரன் சராசரி மிக அதிகம். பும்ரா, சைனி, சாச்சல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
375 ரன்கள் என்ற இலக்கோடு இந்தியா பேட்டிங்கில் களமிறங்க இருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக 269 நாள் ஓய்வுக்குப் பிறகு களமிறங்கியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மூலம் தமது கிரிக்கெட் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறது இந்தியா.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடும்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா தனிமைப்படுத்தல் தொடர்பான விதிகள் கடுமையானவை. யாராக இருந்தாலும் வெளியில் இருந்து வந்தால் அவர்கள் 14 நாள்கள் தனிமையில் இருக்கவேண்டும்.
அந்தக் கட்டத்தை இந்திய அணி கடந்துவிட்டது.
கொரோனாவுக்கு முன்பு கடந்த முறை இந்திய அணி வெளிநாடு சுற்றுப் பயணம் செய்தபோது நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆனால், ஒரு நாள் தொடரில் சுத்தமாக காலியானது குறிப்பிட்டது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












