IND vs AUS: விசாகப்பட்டினம் டி20 - கடைசி பந்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியா உடனான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடக்கும் டி20 போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துது.
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் இந்தியாவின் கடுமையான முயற்சிகளையும் மீறி ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது .
இதன்மூலம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, அவருடன் சேர்ந்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
அவருக்குப் பிறகு வந்த கேப்டன் விராட் கோலி 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். .
கோலிக்கு பின் களமிறங்கிய பேட்மேன்களில், மகேந்திர சிங் தோனியைத் தவிர அனைவரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
தோனி ஆட்டமிழக்காமல் 29 ரங்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், ANESH DEBIKY/AFP/GETTY IMAGES
127 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தொடக்க வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஐந்து பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, இன்னொரு தொடக்க வீரர் ஆர்சி ஷார்ட் 37 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவதாக களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் டக் அவுட் ஆக, அவருக்கு அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்
ஆஸ்திரேலிய அணிக்காக நாதன் கோல்டர் - நைல் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்த டி20 போட்டி பெங்களூருவில் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. அதன் பின் இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












