கால்பந்து: அர்ஜென்டினாவை வென்று இந்தியா வரலாற்று சாதனை

கால்பந்து: அர்ஜென்டினாவை வென்று இந்தியா சாதனை

பட மூலாதாரம், TWITTER / DDNEWS

ஸ்பெயினில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொடிஃப் (Cottif) கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஃபிஃபா 20 வயதுக்குட்பட்டவர்கள் கோப்பையில் ஆறு முறை சாம்பியனான அர்ஜென்டினாவும், இந்தியாவும் மோதியது. இந்த போட்டியில், ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபக் டாங்ரி முதல் கோலை அடித்தார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 68-வது நிமிடத்தில் அன்வர் அலி இந்தியாவின் இரண்டாவது கோலை லாவகமாக அடித்து 2-0 என்று அணிக்கு வலுவான முன்னிலையை பெற்றுத் தந்தார்.

அர்ஜென்டினாவை வென்று இந்தியா சாதனை

பட மூலாதாரம், TWITTER / COTIF

தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் 72-வது நிமிடத்தில் அர்ஜென்டினா தனது முதல் கோலை அடித்தது.

இறுதியில், அர்ஜென்டினாவை 2-1 என்று தோற்கடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மிகவும் வலுவான அர்ஜென்டினாவை வென்று இருப்பதாலும் 20 வயதுக்குட்பட்டவர்கள் உலக கோப்பைக்கு இது தகுதி சுற்றாக அமையும் என்பதிலும், இந்தியாவின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :