டி20 முத்தரப்பு போட்டி: இந்தியா இலங்கையை வீழ்த்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச முத்தரப்பு டி20 தொடர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தியது இந்திய அணி.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான சர்வதேச முத்தரப்பு டி20 தொடர் கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகின்றன.
நேற்றைய தினம் (திங்கட்கிழமை) கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச டி20 முத்தரப்பு தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி இலங்கையை வெற்றி கொண்டது.
மழை காரணமாக 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்தது. 153 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 17.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில் வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்தது.
வெற்றியின் ஐந்து முக்கிய காரணங்கள்:
- இந்திய பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சு இலங்கை பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் எஸ்.என் தாகூர் 4 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு அடிதளமிட்டனர்.
- இலங்கை அணியின் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்ததடுத்த விக்கெட்களை பறிகொடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
- இந்திய அணி வீரர்களின் சிறப்பான ஃபீல்டிங் இலங்கை வீரர்களின் விக்கெட் மளமளவென சரிவதற்கு காரணமாக இருந்தது.
- இலங்கை பந்துவீச்சாளர்கள் சுராங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா, நுவான் பிரதீப் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரன்களை தாராளமாக வாரி வழங்கினார்கள்.
- இந்திய பேட்ஸ்மேன்கள் மணிஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக்கின் கூட்டணி அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தியது. இவர்கள் 44 பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்களை எடுத்திருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








