நாளிதழ்களில் இன்று: 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை'

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

குரங்கணி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை'

குரங்கணி காட்டுத் தீயில் மரணித்த விபின் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ். விபினின் மனைவி திவ்யாவும் அந்த தீ விபத்தில் சிக்கி 90 சதவீத காயங்களுடன் போராடி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ள அந்த செய்தியில், விபினும், திவ்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாகவும், இருவருக்கும் மலையேற்றத்தில் மிகுந்த ஈடுப்பாடு உண்டு என்றும், பல முறை அவர்கள் மலையேற்றத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தில் தொடங்கி அங்கேயே முடிந்தது இவர்கள் காதல் கதை என்கிறது அந்த செய்தி.

Presentational grey line

தினமணி - `திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம்`

கார்த்தி சிதம்பரம்

பட மூலாதாரம், Twitter

கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கு குறித்து முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ். ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, தில்லியிலுள்ள திகார் சிறையில் உடனடியாக கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார் என்கிறது அந்த செய்தி.

Presentational grey line

தினத்தந்தி - `கோடையில் வேண்டாம்'

குரங்கணி காட்டுத் தீ: மீட்பு பணியில் 4 ஹெலிகாப்டர்கள்

குரங்கணி தீ விபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக முதல் பக்கத்தில் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் காட்டுக்குள் மரங்கள், இலைகள் காய்ந்து இருக்கும் சூழ்நிலையால் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கோடை காலங்களில் பொது மக்கள் காட்டுப்பகுதிக்குள் செல்வதை தவரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக விவரிக்கிறது அந்த செய்தி.

Presentational grey line

தி இந்து - `ரஜினி பல விஷயங்கலில் மெளனமாக இருக்கிறார்'

கமல்

பட மூலாதாரம், Getty Images

கோயம்புத்தூரில் செய்தியாளர் சந்திப்பில், காவிரி விஷயத்தில் ரஜினி மெளனமாக இருப்பதாக ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ரஜினி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அல்ல. பல விஷயங்களில் மெளனமாக இருக்கிறார். அதனால், காவிரியுடன் மட்டும் அவரை தொடர்புபடுத்தி பார்ப்பது சரியாக இருக்காது என்று கமல்ஹாசன் கூறியதாக செய்திவெளியிட்டுள்ளது ’தி இந்து’ நாளிதழ்.

Presentational grey line

டெக்கான் க்ரானிக்கல் - 'சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆபத்து`

சர்க்கரை

பட மூலாதாரம், Getty Images

அதிகளவில் சுத்தகரிக்கப்பட்ட சர்க்கரையை எடுத்துக் கொள்வது ஆபத்தை தரும் என்று உலக சுகாதார மையம் கூறி உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது டெக்கான் க்ரானிக்கல் நாளிதழ்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :