வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள்-3

கால்களில் வலுவுள்ள மட்டும் கால்பந்து ஆடலாம் என சில பிரபலங்கள் நிரூபித்துள்ளனர்.

விளையாடுவதற்கு வயது ஒரு தடையல்ல என்று காண்பித்துள்ளவர்களில் அலெக்சாண்டர் டூரிச் மற்றும் சாக்ரெட்டீஸும் அடங்குவர்.

பிரேசிலின் கால்பந்து பிரபலமாக சாக்ரெட்டீஸின் ஆளுமை உலகம் அறிந்த ஒன்று.

கால்பந்து

பட மூலாதாரம், Allsport/Getty Images

படக்குறிப்பு, மருத்துவர் சாக்ரெட்டீஸ்

பிரேசில் அணிக்காக 60 போட்டிகளில் ஆடிய அவர் 22 கோல்களை அடித்துள்ளார். 15 ஆண்டுகள் தொழில்முறை ரீதியில் அவர் போட்டாஃபோகோ மற்றும் கொரிந்தியாஸ் அணிகளுக்காக அவர் விளையடினார்.

இங்கிலாந்து லீகில் இடம்பெறாத கார்ஃபோர்த் நகர் அணிக்காக அவர் ஒருமுறை விளையாடியுள்ளார். அதையும் கணக்கில் எடுத்தால், நம்பமுடியாத வகையில் அவரது கால்பந்து வாழ்க்கை 30 ஆண்டுகள் நீடித்த்து.

மருத்துவர் பட்டம் பெற்றிருந்த சாக்ரெட்டீஸ், ஆடுகளத்தில் பந்து அடுத்து எப்பக்கம் செல்லக் கூடும் என்று கணிப்பதில் வல்லவராக இருந்தார் என்று கால்பந்து வர்ணனையாளர்கள் கூறுவர்.

கால்பந்துக்கு அப்பாற்பட்டு அவர் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வந்த கட்டுரையாளராகவும் திகழ்ந்தார்.

உலகின் மிகச்சிறந்த 100 கால்பந்து வீரர்களில் ஒருவர் சாக்ரெட்டீஸ் என பெலேயால் புகழப்பட்ட அவர், தனது 57ஆவது வயதில் 2011ல் காலமானார்.

அலெக்சாண்டர் டூரிச்

கடந்த 1970களில் மார்ஷல் டீட்டோ தலைமையில் பிரிக்கப்படாத யூகோஸ்லாவியா கிழக்கு ஐரோப்பாவில் ஆளுமை செலுத்திவந்த காலகட்டம் அது.

அந்த சமயத்தில் பிறந்த பாஸ்னியாவில் பிறந்த அலெக்சாண்டர் டூரிச், 17 வயதாக இருக்கும்போது யூகோஸ்லாவிய இராணுவத்தில் இணைக்கப்பட்டார்.

அங்கு கால்பந்து விளையாட கற்றுக்கொண்ட அவர், பின்னர் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள 14 கால்பந்து அணிகளுக்காக 600 போட்டிகளில் ஆடியுள்ளார்.

பின்னர் 2007ல் ஆண்டு தனது 37ஆவது வயதில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றார்.

சிங்கப்பூர் தேசிய அணிக்காக அவர் 53 போட்டிகளில் விளையாடி 24 கோல்களை அடித்துள்ளார். பின்னர் 2014ல் தனது 44ஆவது வயதில் அவர் ஓய்வுபெற்று இப்போது பயிற்சியாளராக உள்ளார்.

உலகெங்கும் நாற்பது வயதுக்கு பிறகும் பலர் சர்வதேச அளவில் விளையாட்டில் ஈடுபட்டிருந்தாலும், சிலரது சாதனைகளை மட்டுமே இப்பகுதிகளில் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.கால்களில் வலுவுள்ள மட்டும் கால்பந்து ஆடலாம் என சில பிரபலங்கள் நிரூபித்துள்ளனர்.

மற்ற பகுதிகளை படிக்க :

பிற முக்கிய செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்