வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள்-2
கால்பந்து விளையாட்டு கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் ஒரு தொழில்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது போல், வயதிருக்கும்போதே சம்பதித்துக்கொள் என்பது கால்பந்து உலகில் மறுக்கமுடியாத உண்மை.
முதல் பகுதியை படிக்க :வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள்
பெரும்பாலான கால்பந்து வீரர்கள் 35 வயதை எட்டுவதற்கு முன்னரே விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். ஆனால் இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன.
நாற்பது வயதைக் கடந்த பிறகு ஆடி ரசிகர்களைக் கவர்ந்த பிரபலங்களில், கேமரூனின் ரோஜர் மில்லா போன்று புகழ்பெற்றவர்களில் ஹுவான் செபாஸ்டியன் வெடன்(Juan-Sebastian Veron), காசுயோஷி மியூரா ஆகியோரும் அடங்குவர்.

பட மூலாதாரம், EPA/Demian Estevez
அர்ஜெண்டினாவின் வெடன் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சீ கால்பந்து அணிகளுக்காக விளையாடியவர். ஆனால் அதில் அவரது வெற்றி சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இருந்தபோதும் தனது 23 ஆண்டுகால பந்து வாழ்வில் அவர் ஒன்பது கால்பந்து அணிகளுக்காக ஆடியுள்ளார். அது இன்னும் தொடருகிறது.
தற்போது தாய்நாட்டில் தான் முதலாவதாக ல ப்ளட்டாவில் ஆடத் தொடங்கிய ஸ்டூடியாண்டஸ் அணிக்காக ஆடிவரும் அவர் இத்தாலிய கால்பந்து லீகிலும் ஆடியுள்ளார்.
அவர் 2014-ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும் இந்த ஆண்டு தனது 41ஆவது வயதில் மீண்டும் விளையாட வந்துள்ளார். அதற்கு ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது தனது போட்டிக்கான நுழைவுச்சீட்டை 65 % ரசிகர்கள் வாங்கினால், தான் மீண்டும் ஆடுகளத்துக்கு திரும்புவேன் என்று கூறினார். ரசிகர்கள் அதை ஏற்றனர்.
இப்போது அவர் மீண்டும் ஆடுகளத்தில்.
காசுயோஷி மியூரா
ஐம்பது வயதைக் கடந்த பிறகு லீக் போட்டியில் ஆடிய முதல் கால்பந்து வீரர் எனும் பெருமையைப் பெற்றவர் மியூரா.

பட மூலாதாரம், Reuters
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானிய லீகில் யோக்கோஹோமோ அணிக்காக விளையாடிய அவர் தெஸ்பா குசாட்சூ அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்தார்.
முன்னாள் சர்வதேச கால்பந்து வீரரான அவர் 1986-ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார்.
பிரேசிலின் சாண்டோஸ், இத்தாலியின் ஜெனோவா ஆகிய கால்பந்து அணிகள் உட்பட தனது 31 ஆண்டு கால்பந்து வாழ்வில் பல அணிகளுக்காக ஆடியுள்ளார்.
வயதைத் தாண்டி கால்பந்து உலகில் தடம் பதித்த மேலும் இருவர் குறித்து அடுத்த பகுதியில் பார்போம்.
பிற முக்கிய செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












