101 வயதில் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற இந்தியப்பாட்டி
இந்தியாவைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி மான் கவுர் 100மீட்டர் ஓட்டப் போட்டி ஒன்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

பட மூலாதாரம், AFP
நியூசிலாந்தின் ஆக்லான்ந்து நகரில் நடைபெற்ற, உலக மூத்தோர் போட்டியில் அவர் பதக்கம் வென்றார்.
நூறு மற்றும் அதற்கும் அதிகமான வயதுடையோருக்கான பிரிவில் போட்டியிட்ட ஒரே வேட்பாளர் அவர் மட்டுமே.
அந்தப்பாட்டி 100மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் ஓடினார்.
அவரை 'சண்டிகரின் அதிசயம்' என்று நியூசிலாந்தின் ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.

பட மூலாதாரம், AFP
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்ட அவர், தனது 93ஆவது வயதில்தான் ஓட்டப்போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.
இதுவரை 17 தங்கப்பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.
தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













