நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் திறந்த தேசிய சின்னத்தில் கோரைப்பல் சிங்கங்கள்: மாறுபடும் வடிவமைப்பும் விமர்சனங்களும்

சிங்க சிலை

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மேலே இந்தியாவின் தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள் கொண்ட முத்திரையின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார்.

இந்த சிலையின் உயரம் 6.5 மீட்டர். வட்ட தட்டில் நான்கு சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்பது போன்றான சிலை அது.

ஆனால் கி.மு. 250ம் ஆண்டை சேர்ந்த சிங்க முத்திரை தற்போது புதிய வடிவமைப்பில் சிலையாக அமைக்கப்பட்டுள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சிங்கங்கள் தனது கோரைப் பற்களை ஆக்ரோஷமாக காட்டுவது தேவையற்ற சித்தரிப்பு என எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

ஆக்ரோஷமாக காட்சியளிக்கும் இந்த நான்கு சிங்கங்கள் பழைய அசோகர் சிங்க முத்திரையில் இருந்து வேறுபட்டதாக காட்சியளிக்கிறது எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் நடுவில் அமைந்துள்ள 9,500 கிலோ எடையுள்ள அந்த சிலையை திறந்து வைக்கும் வீடியோவை திங்களன்று காலை பகிர்ந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோதி.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

கி.மு. 250 காலப் பகுதியில் பேரரசர் அசோகர் காலத்தில் நிறுவப்பட்ட பல தூண்களின் மேல் பகுதியில் அமைக்கப்பட்ட அந்த சிங்க முத்திரையை அடிப்படையாகக் கொண்டே இந்த சிங்க சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சிங்க முத்திரை நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்பட்டது, தலை நகரத்தில் காலனித்துவ அடையாள நீக்கத்தில் முக்கிய மைல்கல் ஆகும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் இந்த சிங்கங்கள் மாற்றி வடிவமைக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

புதியதாக வடிவமைக்கப்பட்ட சிங்கங்கள் 'இணக்கத்துடனும், மேண்மையுடன்' காணப்படுவதற்கு பதிலாக 'சீறிப்பாயும் ஒரு விலங்கை போல காட்சியளிக்கின்றன' என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திட்டம், டெல்லியில் உள்ள காலனித்துவ கட்டடங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வருகிறது. இதற்கான செலவு 20 ஆயிரம் கோடி ரூபாய்.

எதிர்க்கட்சியினர் இத்தனை பெரும் தொகையில் இந்த கட்டடம் கட்டப்படுவது குறித்து விமர்சித்தனர். மேலும் அந்த கட்டடத்தின் வடிவமைப்பு குறித்தும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில்தான் தற்போது சிங்க முத்திரை குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாரம் யெச்சூரி, "தேசிய சின்னத்தை திறந்து வைத்து, அரசமைப்புச் சட்டத்தை மோதி மீறியுள்ளார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாகத் துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான வேறுபாட்டை நரேந்திர மோதி அழித்துவிட்டார்," என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்து மத முறையில் பூஜை செய்தது குறித்தும் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல தாங்கள் இந்த சிலை திறப்பிற்கு அழைக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றுக்கான எல்லைகளைப் பிரித்து வைக்கிறது நமது அரசமைப்புச் சட்டம். இந்தியப் பிரதமராக உள்ள மோதி, நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தேசிய சின்னத்தை திறந்து வைத்திருக்கக் கூடாது. மக்களவை சபாநாயகர் அரசின் உதவியாளர் அல்ல. பிரதமர் மோதி அனைத்து அரசியலமைப்பு விதிகளையும் மீறிவிட்டார்," என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிதெரிவித்துள்ளார்.

சிலை திறப்பின் போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

"உண்மையை சொல்ல வேண்டுமானால் சத்யமேவ ஜெயதே என்பதிலிருந்து சிங்கமேவ ஜெயத்தேவிற்கு நாம் எப்போதோ மாறிவிட்டோம்," என திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

"அசோக சிங்கங்கள் தற்போது பற்களை காட்டுகின்றன? மோதி அரசின் புதிய வரவாக இது உள்ளது" என தெலங்கானா ஆளும் கட்சியான ராஷ்டிர சமிதி சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒய். சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

இந்த புதிய சிங்கங்கள் கருணையும் கம்பீரத்துடனும் இருப்பதை காட்டிலும் ஆக்ரோஷமாக தெரிகின்றன என எழுத்தாளர் கிரண் மன்ரால் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வரும் அக்டோபரில்தான் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: