குஜராத் கலவரம் குறித்த சி.பி.எஸ்.இ கேள்வியால் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தேஜஸ் வைத்யா
- பதவி, பிபிசி குஜராத்தி
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 12-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வுத் தாளில் உள்ள கேள்வி சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
"2002-ம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வரலாறு காணாத வன்முறை எந்த அரசின் கீழ் நடந்தது?" என்பதுதான் அந்தக் கேள்வி.
அதற்கான நான்கு விருப்ப பதில்களில், "காங்கிரஸ், பாஜக, ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி" என்று கொடுக்கப்பட்டன.
சி.பி.எஸ்.இ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்தக் கேள்வி தவறு என்று குறிப்பிட்டது. "இது சரியல்ல. இது சி.பி.எஸ்.இ வழிகாட்டுதல்களை மீறுவதாகும். இதற்குக் காரணமான நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறியது.
மேலும், இது தொடர்பான ட்விட்டர் பதிவில், "கேள்விகள் கல்விசார்ந்து மட்டுமே இருக்கவேண்டும் என்று கேள்வித் தாள் அமைப்பிற்கான தெளிவான வழிகாட்டுதலை சி.பி.எஸ்.இ கொண்டுள்ளது. ஒரு கேள்வி மதம் மற்றும் வகுப்பு அடிப்படையில் நடுநிலையாக இருக்கவேண்டும். இந்தக் கேள்வி அவ்வாறு இல்லை. இதைப்போல், சமூக ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ புண்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடாது" என்று மேற்கோள் காட்டியது.
ட்விட்டர் தவிர வேறு எந்தத் தளத்திலும் சி.பி.எஸ்.இ வாரியம் இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான இந்த சர்ச்சை குறித்த செய்தியில் சி.பி.எஸ்.இ அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் பற்றிய இந்தக் கேள்வி என்.சி.ஆர்.டி-யின் 12-ம் வகுப்பு சமூகவியல் பாடநூலில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
"எந்தவொரு மாநிலமும் அல்லது பிராந்தியமும் வகுப்புவாத வன்முறையில் இருந்து விடுபடவில்லை. ஒவ்வொரு மதச் சமூகமும் இதுபோன்ற வன்முறைகளால் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாதிக்கப்பட்டுள்ளன. வன்முறையின் தாக்கம் சிறுபான்மை சமூகங்களுக்கு இன்னும் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியும் அரசும்கூட தங்களை நிரபராதி என்று கூறிக்கொள்ள முடியாது. ஏதோவொரு வகையில், ஒவ்வோர் அரசாங்கமும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கலாம். முக்கிய அரசியல் கட்சியின் கீழ் நடந்த மிகவும் அதிர்ச்சியூட்டும் இரண்டு வகுப்புவாத வன்முறை சம்பவங்களைக் கூறலாம். 1984-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது டெல்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம். 2002-ம் ஆண்டு பாஜக ஆட்சியின்போது குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் ஆகியவற்றைக் கூறலாம்," என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு எதிராக எழுந்த கேள்விகள்
இந்தக் கேள்வி கேட்கப்பட்டதும் பிறகு அது தவறு எனக் கூறப்பட்டதும், விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டன. சிலர், கேள்வி உண்மையானது, இதில் தவறு இல்லையென நினைக்கிறார்கள். இன்னும் சிலர் தேச விரோதிகளால் மட்டுமே இதுபோன்ற கேள்வியைக் கேட்கமுடியும் என்று கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
2002-ம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் வெடித்தபோது பாஜகவின் நரேந்திர மோதி முதல்வராக இருந்தார்.
இந்தக் கேள்வி மற்றும் சர்ச்சை குறித்து சி.பி.எஸ்.இ-ன் எதிர்வினையைத் தெரிந்துகொள்ள பிபிசி குஜராத்தி தொடர்புகொண்டபோது, குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளார் யமால் வியாஸ், "சி.பி.எஸ்.இ ஏற்கெனவே பதில் அளித்துள்ளது. எனவே இதைப் பற்றி வேறு எதுவும் கூறுவது பொருத்தமாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை," என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
குஜராத் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி பேசியபோது, "தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பொதுவாக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும். இந்தக் கேள்வியின் பாடம் ஏற்கெனவே பாடத்திட்டத்தில் உள்ளது. புத்தகத்தில் இருந்தால், கேள்வி இருக்கலாம். தேர்வில் கேள்வி ஏன் கேட்கப்பட்டது என்பதை விளக்குவதற்குப் பதிலாக, அது ஏன் பாடத்திட்டத்தில் உள்ளது என்பதற்குத்தான் சி.பி.எஸ்.இ விளக்கம் தரவேண்டும்.
சி.பி.எஸ்.இ அதிகாரிகளின் வேலை உண்மை நிலையை மாணவர்களுக்கு உணர்த்துவதாக இருக்கவேண்டும். தங்களுடைய முதலாளியின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி கவனமாக இருக்க வேண்டியதில்லை," என்று கூறினார்.
கோத்ரா மற்றும் குஜராத் கலவரங்கள்

பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ரா ரயில் நிலையம் அருகே அயோத்தியில் இருந்து அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் S-6 பெட்டியின்மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 59 பேர் கொல்லப்பட்டார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான கலவரமாக இது குஜராத்தில் வெடித்தது. பிப்ரவரி 28 அன்று குல்பர்க் சொசைட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஹேசன் ஜாஃபரி கொல்லப்பட்டார் மற்றும் 31 பேர் காணாமல் போயினர். அவர்கள் இறந்துவிட்டதாகக் கடிதம் எழுதப்பட்டது. 2005-ல் அப்போதைய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், மாநிலங்களவையில் அளித்த ஒரு பதிலில் கலவரத்தில் 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டதாகக் கூறினார். அந்த நேரத்தில், 223 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 2008-ல் நடந்த ஒன்பது பெரிய கலவர சம்பவங்களை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது. கோத்ரா படுகொலைகள் (59 மரணங்கள்), அகமதாபாத்தில் குல்பர்க் சொசைட்டி படுகொலைகள் (69 மரணங்கள்), அகமதாபாத்தில் நரோடா பாட்டியா படுகொலைகள் (97 மரணங்கள்), நரோடா கிராம படுகொலைகள் (11 மரணங்கள்), மெஹ்சானாவில் சர்தாபுரா படுகொலைகள் (31 மரணங்கள்), ஒற்றைப்படை கிராம படுகொலைகள் (26 மரணங்கள்), மெஹ்சானாவில் தீபதா தர்வாசா படுகொலைகள் (11 மரணங்கள்) மற்றும் ஹிம்மத்நகர் மாவட்டத்தில் பிரந்திஜ் படுகொலை(3 பிரிட்டிஷ் பிரஜைகளின் கொலை) ஆகியவை அடங்கும்.
பிற செய்திகள்:
- கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
- குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது?
- விஜய் சேதுபதியிடம் ரூ.3 கோடி கேட்டு அவதூறு வழக்கு - விமான நிலைய தாக்குதலில் நடந்தது என்ன?
- 'மனிதாபிமானமற்ற, இழிவான நிலையில் வாழும் மலையகத் தமிழர்கள்' - ஐ.நா அலுவலர் கவலை
- 'கொலைகளை நிறுத்துங்கள்' - தாலிபன்களை எச்சரிக்கும் அமெரிக்கா, நட்பு நாடுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








