"நரேந்திர மோதியின் மனமாற்றத்தை நம்புவது கடினம்" - வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து பிரியங்கா காந்தி சந்தேகம்

பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரியங்கா காந்தி

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமரின் 'மாறும் அணுகுமுறையை' நம்புவது கடினம். தேர்தல் தோல்விக்கு பயந்து இப்போது திடீரென்று நாட்டின் உண்மையைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறீர்கள்" என்று அவர் கூறியுள்ளார். "நீங்கள் விவசாயிகளை கைது செய்தீர்கள், உங்கள் காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தியது, இப்போதுதான் உங்களுக்கு உண்மை புரிந்ததா? என்றும் பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்."இந்த தேசத்தின் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறீர்கள் - சரி. இந்த நாடு விவசாயிகளால் ஆனது, இந்த தேசம் விவசாயிகளுக்கு சொந்தமானது; விவசாயிதான் அதன் உண்மையான பராமரிப்பாளர், அவர்களின் நலன் மற்றும் நலனை மிதித்து எந்த அரசாங்கமும் வாழ முடியாது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"350 நாட்களுக்கும் மேலான போராட்டத்தில் உயிரிழந்த 600 விவசாயிகளை 'தியாகிகள்'" என்று அழைத்த பிரியங்கா காந்தி, "விவசாயிகள் மீது கார் மோதி நசுக்கிக் கொன்றவர் உங்கள் அமைச்சர் ஒருவரின் மகன்" என்று லக்கிம்பூர் கேரி சம்பவத்தை மோதிக்கு நினைவூட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மேலும், "உங்கள் கட்சித் தலைவர்கள் விவசாயிகளை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகள், துரோகிகள், குண்டர்கள், குண்டர்கள் என்று அழைத்தார்கள், நீங்களே அவர்களை போராட்டக்காரர்கள் என்று அழைத்தீர்கள். உங்கள் நிலைப்பாட்டில் இந்த மாற்றத்தை நம்புவது கடினமாக உள்ளது," என்று பிரியங்கா கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் பாரத்" என்ற வாசகத்துடன் விவசாயிகளை வாழ்த்தி தனது ட்வீட்டை நிறைவு செய்துள்ளார் பிரியங்கா காந்தி.

போராட்டத்தில் உறுதி காட்டிய விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், ANI

ஒரு வருடத்திற்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை தமது அரசாங்கம் ரத்து செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோதி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.முன்னதாக, அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே நடந்த பல கட்டப் பேச்சு வார்த்தைகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவராததால், மூன்று விவசாயச் சட்டங்களை அமல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் சங்கங்களின் பெரும்பாலானவை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஒரு சில அமைப்புகள் டெல்லி எல்லைக்கு வந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து விட்டுச் சென்றன. இந்த நிலையில், ஒரு சில விவசாயிகள் சங்கங்களை தமது நடவடிக்கைக்கு ஆதரவாக சேர்த்த மத்திய அரசு தரப்பு, அவர்களிடம் எழுத்துபூர்வமாக கடிதங்களைப் பெற்று மூன்று சட்டங்களும் சரியான நோக்கத்துடனேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி வந்தது.

ஆனால், பெரும்பான்மை விவசாயிகளுடன் ஒப்பிடும்போது, மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்த விவசாயிகள் சங்கங்களின் நிலைப்பாடு குறைவாகவே இருந்தது. அதனால், அது வெகுஜன ஆதரவை ஈர்க்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :