சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலையா? தற்கொலையா? ஓராண்டாகியும் விலகாத பாலிவுட் மர்மம்

பட மூலாதாரம், PRATHAM GOKHALE/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? இந்த கேள்விக்கான பதில் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
இந்த மர்மத்திற்கு விடை கண்டுபிடிக்க, ஐந்து புலனாய்வு அமைப்புகள் முயற்சித்தும் பலனில்லை.
2020ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் இறந்து கிடந்தார். முதலில் அது தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால், போகப் போக இந்த வழக்கு பல சிக்கல்களை சந்தித்த வண்ணம் இருந்தது.
இந்த வழக்கை மும்பை காவல்துறை, பிகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (NCB), அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன.
மும்பை காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சிபிஐ இன்னும் வழக்கு விசாரணை முடிவுகளை வெளியிடவில்லை. பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்ற கோணத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான என்.சி.பி. விசாரிக்கிறது. தவறான பணப் பறிமுதல் குறித்து அமலாக்கத்துறை இன்னும் எதையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
தற்போது விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்ப்போம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
சிபிஐ விசாரணை எந்த அளவில் இருக்கிறது?
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்துதான் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு 10 மாதங்கள் ஆகிறது. ஆனால், விசாரணை முடிவுகள் என்ன என்பது குறித்த கேள்விக்கு அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.
சிபிஐ-ன் விசாரணை அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பாலிவுட் நடிகையும் சுஷாந்தின் காதலி என்று கூறப்பட்ட ரியா சக்ரபர்த்தி, சுஷாந்தின் நண்பர் சித்தார்த், அவரது சமையல்காரர் நீரஜ் மற்றும் திபேஷ் சாவந்த் ஆகியோரிடம் இருந்து சிபிஐ வாக்குமூலம் பெற்றது. சுஷாந்த் கொலை செய்யப்பட்டார் என்பதை அறிய ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் மருத்துவர் சுதிர் குப்தா தலைமை தாங்கினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
அவர் தமது அறிக்கையை 2020 செப்டம்பர் மாதம் சிபிஐ-யிடம் சமர்பித்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் குப்தா, "சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தற்கொலை வழக்கு, அவரது உடலில் வேறு எந்த தடயங்களும் இல்லை" என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் பாஐக எம்பி சுப்பிரமணிய சுவாமி, பிரதமர் அலுவலகத்திடம் இந்த வழக்கு குறித்து கேட்டிருந்தார். அப்போது, விசாரணை நடைபெற்று வருவதாகவும், அனைத்து கோணங்களும் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் சிபிஐ பதில் அளித்தது.
"உயர்தர தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களில் இருந்து தரவுகளை சேகரிக்கிறோம். பல்வேறு இடங்களில் மூத்த காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்" என்று சிபிஐ கூறியது.
இதுதான் இந்த வழக்கு குறித்து சிபிஐ தெரிவித்த கடைசி செய்தி. அதன்பிறகு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அமலாக்கத்துறை விசாரணை
நடிகை ரியா சக்ரவர்த்தி சுஷாந்தின் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் தன் கணக்கிற்கு மாற்றிக் கொண்டதாக சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
பணம் கையாடல் வழக்கின் கீழ் அமலாக்கத்துறை ரியாவிடம் கடந்தாண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணை நடத்தியது.
ரியாவின் மேலாளர் மற்றும் முன்னாள் வீட்டு மேலாளர் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.
ஒரு மாதகால விசாரணைக்கு பிறகு, ரியா சுஷாந்திடம் இருந்து பணம் கையாடல் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.

பட மூலாதாரம், RHEA CHAKRABORTY/INSTAGRAM
போதைப் பொருள் தடுப்புப் பிரவினரின் விசாரணை
ரியாவின் செல்பேசியை சோதனை செய்தபோது, அதில் போதைப் பொருள் தொடர்பான தகவல் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவிக்க, இது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் விசாரணை வளையத்துக்குள் சென்றது.
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இது தொடர்பாக ரியாவை கைது செய்து அவர்கள் விசாரித்தனர்.
"ரியா போதைப் பொருட்களை வாங்கியுள்ளார். சுஷாந்தின் போதைப் பொருள் பழக்கத்தை அவர் மறைக்க முயன்றார். ரியாவின் வாட்சப் சேட் மூலம் ரியாவுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது" என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
அக்டோபர் மாதம் ரியாவுக்கு உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக போதைப் பொருள் வழக்கில் இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ரியாவின் சகோதரர் ஷௌவிக்கும் ஒருவர்.

பட மூலாதாரம், FB/RHEACHAKRABORTYOFFICIAL
இதுதொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன், ராகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர். ஆனால், எந்த தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.
மும்பை காவல்துறை விசாரணை
சுஷாந்த் சிங் வழக்கு ஒரு முக்கிய வழக்கு. ஆனால், அவர் எந்த தற்கொலை குறிப்பையும் விட்டுச்செல்லவில்லை
"பிரேதப் பரிசோதனையின் அறிக்கைப்படி, சுஷாந்த் தூக்கில் தொங்கியதால் மூச்சடைப்பு வந்து இறந்தார்" என்று துணை காவல்துறை ஆணையர் அபிஷேக் திரிமுகே முன்னதாக தெரிவித்தார்.
மேலும் 2020 ஜூலை 27ஆம் தேதி மும்பை காவல்துறையிடம் தடயவியல் துறை அளித்த அறிக்கையின்படி, இது கொலை இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அவர் எந்த போதைப் பொருளும் எடுத்துக் கொண்டதற்கான தடையமும் இருக்கவில்லை.
சுஷாந்தின் கழுத்தில் இருந்த துணியில் நூல்கள் இருந்தது தெரிய வந்தது. அதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். "அந்த துணி சுமார் 200 கிராம் எடை கொண்டது" என தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிகார் காவல்துறை விசாரணையும் அரசியலும்

பட மூலாதாரம், TWITTER/SUSHANTSINGHRAJPOOT
மும்பை காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாமல், சுஷாந்தின் குடும்பத்தினர் பிகார் காவல்துறையில் ஒரு புதிய புகாரை அளித்தனர்.
அப்போது பிகார் தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில், இந்த வழக்கு ஒரு புதிய அரசியல் திருப்பம் பெற்றது.
இந்த வழக்கு அங்கு அரசியலாக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க பிகார் காவல்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு அது பெரும் சர்ச்சையானது.
ஐந்து புலனாய்வு அமைப்புகள் இதில் ஈடுபட்டும், சுஷாந்த் வழக்கில் உள்ள மர்மங்களுக்கு விடை எட்டப்படாதது ஏன் என்று இன்னும் தெரியவில்லை. சுஷாந்தின் ரசிகர்கள் மற்றும் பலரும் சிபிஐ-யின் அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












