பாஜகவுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டத்திற்கு அழைப்பு – எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா எழுதிய கடிதம்

பட மூலாதாரம், Getty Images
சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட, இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பாரதிய ஜனதா கட்சி நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதலை ஒருங்கிணைந்து சிறப்பாக எதிர்கொள்ள, மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பேனர்ஜி, இந்தியாவில் பாஜக அல்லாத எதிர்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"தேசிய தலைநகரப் வட்டார திருத்தச் சட்டம், இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான நேரடி தாக்குதல்" என அக்கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு நிறுவனங்களை தடாலடியாக தனியார்மயப்படுத்துவது குறித்தும் அக்கடிதத்தில் தன் விமர்சனத்தைப் பதிவு செய்திருந்தார்.
"இந்த சட்டமன்றத் தேர்தல் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பின், இந்த பிரச்னைகளைக் குறித்து விவாதிக்கவும், ஒரு திட்டத்தை வகுக்கவும், அனைத்து கட்சிகளும் கூட வேண்டும்" என அக்கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி.
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, திமுக தலைவர் மு க ஸ்டாலின், ஆர் ஜெ டி தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் திபங்கர் பட்டாச்சார்யா, தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி என பல எதிர்கட்சித் தலைவர்களுக்கு அந்த மூன்று பக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளார் மம்தா பேனர்ஜி.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் மம்தா இம்மாதிரியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிற செய்திகள்:
- ரஜினிக்கு தாதா சாஹிப் பால்கே விருது: இந்திய அரசு அறிவிப்பு
- புதுச்சேரியில் பரிதவிக்கும் திருநங்கைகள்: கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்
- கோவைக்கு வந்த யோகி ஆதித்யநாத்: கடைகள் மீது கல்வீச்சு, என்ன நடந்தது?
- ஒரு துளி மனித ரத்தம் கலந்து தயாரிக்கப்பட்ட சாத்தான் ஷூ - ஒரு வணிகப் பரபரப்பு
- வட மாவட்டங்களை குழப்புகிறதா வன்னியர் இடஒதுக்கீடு? ராமதாஸை கொதிக்க வைத்த ஓ.பன்னீர்செல்வம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












