மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்

மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்

பட மூலாதாரம், dinamani.com

முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில செய்திகளின் தொகுப்பு.

இருசக்கர வாகனத்தில் மும்பை - புதுக்கோட்டை பயணம்

மும்பையில் குடியேறிய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த தம்பதி, பொது முடக்கத்தால் கடந்த 7 மாதங்களாகப் பிரிந்திருந்த தனது மகள் மற்றும் மகனைப் பார்ப்பதற்காக 1,400 கி.மீ தொலைவை 37 மணி நேரத்தில் கடந்து இரு சக்கர வாகனத்திலேயே கறம்பக்குடி வந்து சேர்ந்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கறம்பக்குடியைச் சேர்ந்த செல்வம் (41), பல ஆண்டுகளாக மும்பையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி சங்கீதா (36), மகள் வேணி (13), மகன் யோகேஷ்வர் (6) ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 20ஆம் தேதி கறம்பக்குடி வந்த இவர்கள், கொரோனா பொது முடக்கம் அறிவித்த பிறகு, சங்கீதாவின் தந்தை வீட்டில் மகள், மகன் இருவரையும் விட்டுவிட்டு மும்பை திரும்பியுள்ளனர்.

அதன்பிறகு அவர்களால் கறம்பக்குடி திரும்ப இயலவில்லை. ஏறத்தாழ 7 மாதங்கள் நிறைவடைந்தது. பொது முடக்கக் காலத்தில் தளர்வுகள்கள் அளிக்கப்பட்டாலும் மும்பையிலிருந்து தமிழகத்துக்கு ரயில் சேவை இயக்கப்படவில்லை.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்தச் சூழலில் யோகேஷ்வருக்கு அக். 28ஆம் தேதி பிறந்த நாள் என்பதால், விமானம் ஏறி வரும் அளவுக்கு வசதியில்லாததால், தம்பதியினர் தங்களது இரு சக்கர வாகனத்திலேயே கறம்பக்குடி செல்வது என்று அசாத்திய முடிவெடுத்து, 1,400 கி.மீ தொலைவை இரு சக்கர வாகனத்திலேயே கடந்து 37 மணி நேரத்தில் கறம்பக்குடி வந்து சேர்ந்துள்ளனர்.

தமிழகம் வந்தவுடன் சுகாதாரத் துறையில் இருந்து ஒரு மருத்துவர் வந்துப் பரிசோதித்துச் சென்றிருக்கிறார். 5 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகுதான் தங்களின் மகளையும், மகனையும் சந்திக்கப் போகிறார்கள்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

"அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பு மருந்து"

அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பு மருந்து போடப்படும் என்று மத்திய கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி உறுதி அளித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

coronavirus vaccine bbc

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையில், பிகார் மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் கோவிட்-19 தடுப்பு இலவசமாக கிடைக்கும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது.

அரசியல் காரணங்களுக்காக தொற்றுநோயைப் பயன்படுத்துவதாகப் பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

"இந்த நிலையில், ஒரிசாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான

பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் மத்திய இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி செய்தியாளர்களிடம் பேசியபோது, பிரதமர் நரேந்திர மோதி அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பு மருந்து வழங்க உள்ளதாக கூறினார். ஒவ்வொரு நபருக்கும் தடுப்பு மருந்து போட 500 ரூபாய் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பு மருந்து போடப்பட வேண்டுமென நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கோரிக்கைகள் விடுத்துள்ளன. பாஜக அறிவித்தபடி, தேர்தல் நடைபெறும் பிகாரில் மட்டுமல்லாமல், நிச்சயம் அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி போடப்படும்" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

ரோகித் சர்மாவுக்கு அணியில் இடமில்லை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோகித் சர்மாவுக்கு அணியில் இடமில்லை

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

டி20 அணி: விராத் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், ஜாஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சஹார், வருண் சக்கரவர்த்தி.

டெஸ்ட் அணி: விராத் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜாஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்.

ஒருநாள் அணி: விராத் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: