கொரோனா வைரஸ்: தொற்று நீங்கி உடல்நலம் பெற சிலருக்கு தாமதம் ஆவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகெர்
- பதவி, பிபிசி செய்தியாளர் - அறிவியல் மற்றும் உடல்நலப் பிரிவு
நிறைய பேருக்கு கோவிட்-19 என்பது குறுகிய கால, லேசான பாதிப்பு உள்ள நோய். ஆனால் தொடர்ந்த அழற்சி, நீடித்த வலி மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் சிலர் மாதக் கணக்கில் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
"நீண்டகால கோவிட் பாதிப்பு'' என்ற சூழ்நிலை, மக்களின் வாழ்க்கையை பலவீனப்படுத்துவதாக ஆகிவிட்டது. கொஞ்ச தூரம் நடந்தால் கூட, சோர்ந்து போகிறோம் என்று சிலர் சொல்வது இப்போது சாதாரணமாகி விட்டது.
இதுவரையில், கொள்ளை நோய்த் தாக்குதலில் இருந்து உயிர்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் இப்போது கோவிட் தொற்றின் நீண்ட கால பின்விளைவுகளை மக்கள் எதிர்கொள்வது குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.
நீண்டகால கோவிட் பாதிப்புக்கு ஆளானவர்கள் அல்லது இந்தப் பாதிப்பு உள்ள எல்லோரும் முழுமையாகக் குணம் அடைவார்களா என்ற அடிப்படைக் கேள்வி, நிச்சயமற்ற ஒரு மனநிலையுடன் எழுப்பப்படுகிறது.
நீண்டகால கோவிட் என்பது என்ன?
எல்லா நோயாளிகளுக்குமான பாதிப்பு குறித்து மருத்துவ ரீதியில் வரையறைகளோ அல்லது அறிகுறிகளின் பட்டியலோ இல்லை. நீண்டகால கோவிட் பாதிப்பு உள்ள இரண்டு பேருக்கு இடையில் நிறைய வித்தியாசமான அனுபவங்கள் இருக்கலாம்.


இருந்தபோதிலும், ஆளை முடக்கிவிடும் அழற்சி தான் பொதுவான அம்சமாக இருக்கிறது.
மூச்சுவிட முடியாதது, இடைவிடாத இருமல், மூட்டு வலி, தசை வலி, செவித்திறன் பாதிப்பு, பார்வைக் கோளாறு, தலைவலிகள், மணம் மற்றும் ருசி அறிதல் குணம் பாதிப்பு, இருதயம், நுரையீரல்கள், சிறுநீரகங்கள் மற்றும் குடல் பாதிப்பு போன்றவை மற்ற அறிகுறிகளாக உள்ளன.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை இது மிக மோசமாகப் பாதிக்கும். ``இதற்கு முன்பு நான் அனுபவித்திராக அளவுக்கு அழற்சி காணப்படுகிறது'' என்று இதனால் துன்புறும் ஜேட் கிரே-கிறிஸ்ட்டி என்பவர் தெரிவித்தார்.
நீண்ட கோவில் பாதிப்பு என்பது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து குணமாவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்தைக் குறிப்பிடுவது கிடையாது. ஓரளவுக்கு லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கூட நீடித்த மற்றும் தீவிரமான ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

``நீ்ண்டகால கோவிட் உள்ளது என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது'' என்று எக்ஸெட்டெர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் ஸ்ட்ரெயின் பிபிசியிடம் கூறினார். நாள்பட்ட அழற்சி சிண்ட்ரோம் பாதிப்புக்கான தனது கிளினிக்கில் ஏற்கெனவே அவர் நீண்டகால கோவிட் பாதிப்பு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார்.
எவ்வளவு பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது?
ரோம் நகரில் மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றில் 143 பேரிடம் நடந்த ஆய்வின் முடிவு அமெரிக்க மருத்துவ சங்க இதழில் வெளியிடப்பட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து, வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு, அவர்களை தொடர்ந்து கண்காணித்தனர்.
குறைந்தது 87 சதவீதம் பேருக்கு சுமார் 2 மாதங்களுக்கு, குறைந்தபட்சம் ஓர் அறிகுறி இருப்பதும், பாதிக்கும் மேற்பட்டோருக்கு இன்னும் உடல் அழற்சி இருப்பதும் அதில் தெரிய வந்தது.
இருந்தபோதிலும், மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ள குறைந்த அளவிலான நோயாளிகளை வைத்து மட்டுமே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் சுமார் 4 மில்லியன் பேர் பயன்படுத்தும் கோவிட் அறிகுறி கண்காணிப்பு ஆப் - 12 சதவீதம் பேருக்கு 30 நாட்களுக்குப் பிறகும் அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. இன்னும் வெளியிடப்படாத அதன் சமீபத்திய தகவல் தொகுப்பில், பாதிப்புக்கு உள்ளான 50 பேரில் ஒருவருக்கு (அதாவது 2 சதவீதம்) 90 நாட்களுக்குப் பிறகும் நீண்ட கோவிட் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
தீவிர கோவிட் பாதிப்பு இருந்தால், நீண்டகால கோவிட் பாதிப்பு வருமா?
அப்படி இல்லை என்று தோன்றுகிறது.
டூப்ளின் நகரில் நடந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதி பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 10 வாரங்கள் கழித்தும் உடல் அழற்சி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் வேலைக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை.
பாதிப்பின் தீவிரத்துக்கும், உடல் அழற்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என டாக்டர்கள் கண்டறிந்துள்ளது முக்கியமான விஷயமாக உள்ளது.
இருந்தபோதிலும், அதிக அளவு சோர்ந்து போதல் என்பது நீண்ட கோவிட் பாதிப்பின் ஒரே ஒரு அறிகுறியாக மட்டும் உள்ளது.
நிமோனியா பாதிப்பு உள்ளவர்களுக்கு நுரையீரல்கள் பாதிக்கப்படுவதால், இதில் அதிக பிரச்சினைகள் ஏற்படலாம் என்று, குணம் அடைந்தவர்களைக் கண்காணிக்கும் PHOSP-கோவிட் திட்டத்தில் தலைமை ஆய்வாளராக இருக்கும் லெய்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ் பிரைட்லிங் கூறுகிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் நுரையீரஸ் ஸ்கேன் படத்தில் நிமோனியா பாதிப்பு பகுதி காட்டப்பட்டுள்ளது.
நீண்ட பாதிப்பு கோவிட் வைரஸ் எப்படி இருக்கும்?
இதுகுறித்தி நிறைய ஊகங்கள் இருக்கின்றன, ஆனால் உறுதியான பதில் எதுவும் கிடையாது.
உடலின் பெரும் பகுதியில் இருந்து வைரஸ் அகற்றப்பட்டிருக்கும். ஆனால் சில சிறிய இடங்களில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும்.
``நீண்ட நாட்கள் வயிற்றுப்போக்கு இருந்தால், அந்த வைரஸ் குடலில் ஒட்டியிருக்கும். வாசனையை அறிய முடியாதிருந்தால் அது நரம்புகளில் இருக்கலாம் - அதுதான் பிரச்சினையை உருவாக்குவதாக இருக்கலாம்'' என்று லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் கூறுகிறார்.
கொரோனா வைரஸ் உடலில் பல செல்களில் ஒட்டிக்கொண்டு, நோய் எதிர்ப்புத் தன்மையை சேதப்படுத்தி, உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தும். கோவிட் பாதித்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் இயல்புநிலைக்குத் திரும்புவதில்லை என்றும், அதுதான் ஆரோக்கியத்தை கெடுக்கிறது என்றும் ஒருசாரார் கூறுகின்றனர்.
நோயாளியின் உறுப்புகள் செயல்படும் விதத்தையும் இந்த நோய்த் தொற்று பாதிக்கும். குறிப்பாக நுரையீரலில் இதை நன்றாக காணலாம். அதில் தழும்பு ஏற்பட்டிரு்தால், சார்ஸ் அல்லது மெர்ஸ் தொற்று பாதிப்புக்குப் பிறகு கூட நீண்டகால பிரச்சினைகள் இருந்தன. அவை இரண்டுமே கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்தவைதான்.
ஆனால், நோயாளியின் உணவில் இருந்து சத்துகளை கிரகிக்கும் தன்மையும் கோவிட் காரணமாகப் பாதிக்கப்படும். கோவிட் காரணமாக நீரிழிவு ஏற்பட்டவர்களால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாமல் போராடும் நிலை பலருக்கு உள்ளது. குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கு கொழுப்புகளை உடல் கையாளும் வவிமுறைகளை சார்ஸ் மாற்றி அமைத்துவிட்டது.
மூளை அமைப்பில் மாற்றம் நடப்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகளும் தென்படுகின்றன. ஆனால் அது குறித்து இன்னும் ஆய்வுகள் நடக்கின்றன. கோவிட்-19 பாதிப்பும்கூட அசாதாரணமான உறைதல் உள்ளிட்ட ரத்த கோளாறுகளை ஏற்படுத்துகிறது. உடல் முழுக்க ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களிலும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
``திசுக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் சத்துகளை எடுத்துச் செல்லும் சிறிய ரத்த நாளங்கள், உரிய காலத்துக்கு முன்னதாகவே முதிர்வு நிலையை அடைந்துவிடுகின்றனவா என்பது குறித்து நான் ஆய்வு செய்து வருகிறேன்'' என்று பேராசிரியர் ஸ்ட்ரெயின் பிபிசியிடம் கூறினார். ஆனால் நீண்ட கோவிட் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்பதை நாம் கண்டறியாத வரையில், ``அதற்கான சிகிச்சைகளைக் கண்டறிவது சிரமமானது'' என்று அவர் எச்சரிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இது அசாதாரணமானதா?
வைரஸ் நோய்க்குப் பிறகு அழற்சி அல்லது இருமல் எற்படுவது குறித்து தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாதாரணமாக அப்படி நடக்கும். தொற்று நோய்கள் முழுமையாக குணமாவதற்கு நீண்டகாலம் ஆவதை நாம் பார்த்திருக்கிறோம்.
சுரப்பிகள் சார்ந்த காய்ச்சல் ஏற்படுவோரில் பத்தில் ஒருவருக்கு மாதக் கணக்கில் அழற்சி இருக்கும். ப்ளூ பாதிப்பு இருந்தால் - குறிப்பாக 1918 பாதிப்புக்குப் பிறகு - பார்க்கின்சன் போன்ற அறிகுறி இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
``கோவிட் பாதிப்பில் அறிகுறிகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது, பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்'' என்று பேராசிரியர் பிரைட்லிங் தெரிவித்துள்ளார்.
``அநேகமாக'' என்ற வார்த்தைக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்றாலும், எவ்வளவு பேருக்கு பாதிப்பு உள்ளது என்ற உண்மை நிலவரம் தெரியாத வரையில், பொதுவான அறிகுறிகளை நாம் அறிந்து கொள்வது சிரமமானது என்று அவர் கூறுகிறார்.
``ஒருவரை இந்த வைரஸ் எப்படி தாக்குகிறது, பிறகு செல்களின் செயல்பாட்டில் எந்த வகையில் மாற்றம் செய்கிறது என்ற தனித்துவமான செயல்பாடுகள், மற்ற வைரஸ்களைக் காட்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு எந்த அளவுக்கு தீவிரமானது என்பதை முடிவு செய்கின்றன. நீடித்த அறிகுறிகளை எப்படி காட்டுகின்றன என்பதைப் பொருத்தும் இது அமைகிறது'' என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மக்கள் முழுமையாக குணம் அடைவார்களா?
நீண்ட கோவிட் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகத் தெரிகிறது.
இருந்தாலும் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தான் இந்த வைரஸ் தோன்றியது என்பதால், நம்மிடம் நீண்டகால தகவல் தொகுப்பு எதுவும் இல்லை.
``இந்த பாதிப்பு உள்ளவர்களை 25 ஆண்டுகளுக்கு கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஓராண்டுக்கும் மேலான காலத்திற்கு பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் என் நம்பிக்கை தவறாகவும் இருக்கலாம்'' என்று பேராசிரியர் பிரைட்லிங் கூறுகிறார்.
மக்கள் இப்போது குணம் அடைவது போல தோன்றினாலும், வாழ்நாள் முழுக்க பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற கவலைகளும் இருக்கின்றன.
நாள்பட்ட அழற்சி சிண்ட்ரோம் இருப்பவர்களுக்கு அந்தப் பாதிப்பு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. வருங்காலத்தில் நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால், அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது தான் கவலைக்குரியதாக இருக்கிறது.
``நீண்டகால கோவிட் அதே போக்கில் இருந்தால், ஓரளவுக்கு குணம் அடைய வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறேன். ஆனால் அது அறிகுறியைக் காட்ட இன்னொரு கொரோனா வைரஸ் பாதிப்பு நடந்தால், ஒவ்வொரு பனிக்காலத்திலும் இதன் பாதிப்பு இருக்கலாம்'' என்று பேராசிரியர் ஸ்ட்ரெயின் கூறுகிறார்.

பட மூலாதாரம், SPL
எதிர்காலத்தில் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னமும் உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பரவலாக ஏற்படும் அழற்சி காரணமாக, குறைந்த வயதிலேயே இருதயக் கோளாறுகள் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
நீண்ட கோவிட் எனக்கு இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
``உங்களுக்கான கோவிட் குணமடைதல் செயல் திட்டம்'' ஒன்றை என்.எச்.எஸ். வெளியிட்டுள்ளது. அதில் இதுகுறித்த அறிவுரைகள் உள்ளன, குறிப்பாக மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோருக்கான அறிவுரைகள் அதில் உள்ளன.
சக்தியை சேமிக்க ``மூன்று விஷயங்களை'' அது பரிந்துரை செய்கிறது:
•அதிக கடினமாக உழைக்க வேண்டியிராத அளவிற்கு திட்டமிட்டு செயல்படுங்கள். நிறைய ஓய்வு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
•தினசரி வேலைகளுக்குத் திட்டமிடுங்கள். அதிக களைப்பு தரும் வேலைகளை நாளின் மற்ற நேரங்களுடன் பிரித்து செயல்படுங்கள்.
•முன்னுரிமைப்படுத்திக் கொள்ளுங்கள் - எதைச் செய்ய வேண்டும், எதைத் தள்ளி வைக்கலாம் என்பது பற்றி யோசியுங்கள்
எதிர்பார்க்கிற வேகத்தில் நீங்கள் குணம் அடையாவிட்டால் உங்கள் மருத்துவமனை குழுவினர் அல்லது உங்களின் பொது மருத்துவருடன் பேச வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கோவிட் பாதிப்பு உள்ளவர்களுக்கு, போதிய ஆதரவு கிடைப்பதில்லை என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- ரியா சக்ரவர்த்தியின் ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது என்சிபி - அடுத்தது என்ன?
- பெருந்தொற்றுகள் எப்படி முடிவுக்கு வரும்?
- கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும்
- கொரோனா காலத்தில் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கத்தொகை: சிங்கப்பூர் அரசு
- சீனாவின் ஆதிக்கம் - இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆலோசனை
- "அறுத்து வீசுங்கள், நடு ரோட்டில் தூக்கிலிடுங்கள்" - ஹாத்ரஸ் சம்பவத்தில் நடிகை மதுபாலா ஆவேசம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












