ஜோதிமணி வெளியேறிய விவகாரம் - “நாகரிக அரசியலை பாஜகவினர் கற்றுக் கொள்ள வேண்டும்”

ஜோதிமணி

பட மூலாதாரம், JOTHIMANI

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நேற்றைய தினம் நடந்த கேள்வி நேரம் என்ற விவாத நிகழ்ச்சியில் பாஜகவின் பேச்சாளர், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை கடுமையாக விமர்சித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கைகொடுக்க மறுக்கின்றவா எதிர்க்கட்சிகள் என்ற தலைப்பில் நேற்றைய தினம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், திமுக எம்.பி கலாநிதி வீராசாமியும், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் கலந்து கொண்டனர். பாஜக தரப்பிலிருந்து கரு.நாகராஜன் பங்கேற்றிருந்தார்.

விவாதத்தின் தொடக்கத்தில், ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கருணையற்று, இரக்கமின்றி நரேந்திர மோதி அரசு நடந்துகொண்டதாகவும், தொழிலாளர்கள் விவகாரம் கை கழுவப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

ஜோதிமணியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து பேசிய பாஜகவின் கரு.நாகராஜன், "கொரோனா பாதிப்பு காலத்தில்கூட தற்சார்பு இந்தியாவை உருவாக்க முடியும் என்ற நிலை பாஜக அரசால்தான் முடியும் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றும், இரக்கம் பற்றி பேசும் ஜோதிமணி அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி இந்நாளில்தான் இலங்கையில் தமிழ் மக்களை கொன்றுகுவிக்க துணை போனது," என்றும் குற்றஞ்சாட்டினார்.

பின்னர் மீண்டும் ஜோதிமணி பேசிய போது, "நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் இருந்து வேலை செய்வதால்தான் இன்னும் மக்கள் பிரதமரை கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் பேசிய கரு.நாகராஜன் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை குறித்து பேசிவிட்டு ஜோதிமணி எம்.பியை கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர் பின் ஜோதிமணியை தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேசினார்.

நாகராஜனின் பேச்சால் கோபமடைந்த ஜோதிமணி, "பாஜக மாதிரியான கேவலமான கட்சியையோ அல்லது நாகராஜன் மாதிரியான கேவலமான ஆளையோ பார்த்தது கிடையாது என்றும், இதுமாதிர கேவலமான மனிதர்களை விவாதத்துக்கு அழைக்காதீர்கள்" என்றும் நிகழ்ச்சி நெறியாளரிடம் காட்டமாக தெரிவித்தார். தெரிவித்துவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.தொடர்ந்து, திமுக எம்.பி கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இறுதிவரை தான் பேசிய கருத்துகளுக்கு மன்னிப்பு கோராத நாகராஜன், கடைசியாக யார் மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துவதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களை பரபரப்பாக்கி உள்ளது. #I_Stand_with_Jothimani என்ற ஹாஷ்டேகும் தமிழக அளவில் டிரெண்டாகி வருகிறது. 2017ல் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன் நோட்டாவை காட்டிலும் குறைவான வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியதை சமூக ஊடகங்களில் கேலி செய்து வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3

X பதிவின் முடிவு, 3

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, "ஊடக விவாதங்களில் பாஜகவினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும், பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள்.

பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன்.

விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜகவினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று பதிவிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

கரு.நாகராஜனின் கருத்துக்கு கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. பாஜகவின் சித்தாந்தம் பெண்மைக்கு எதிரானது என்றும், 21ஆம் நூற்றாண்டில் பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களை இழிவாகப் பேசுகிற பாஜக நண்பர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விடுத்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

அதேசமயம் கரு.நாகராஜனின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சை பாஜகவினர் ஆதரித்தே வருகின்றனர்.

"தரம், தராதரம் எதுவுமே உங்கள் கட்சிக்கும், உங்கள் கூட்டணி கட்சிக்கும் எள்ளளவுகூட இல்லை" என்று பாஜக இளைஞர் பிரிவை சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் கருத்து தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

"முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை அவதூறு செய்த போது வாய் மூடி மெளனமாக இருந்தவர்கள், பிரதமரை கல்லால் அடிப்போம் என்று கூறியதையும் கேட்டு ரசிப்பது, வெறுப்பு அரசியலின் உச்சமே," என்று பாஜகவின் பேச்சாளர் நாரயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 7
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 7

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: