கொரோனா வைரஸ் மருந்து: சுவிட்சர்லாந்து மலையில் ஒளிரவிடப்பட்ட இந்திய தேசிய கொடி - ஏன்?

மேட்டர்ஹார்னில் ஒளிரவிடப்பட்ட இந்திய தேசியக்கொடி

பட மூலாதாரம், Instagram/ Zermatt Matterhorn

படக்குறிப்பு, மேட்டர்ஹார்னில் ஒளிரவிடப்பட்ட இந்திய தேசியக்கொடி

சுவிட்சர்லாந்திலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள மிக உயரமான மலைகளில் ஒன்றான மேட்டர்ஹார்னில் சமீபத்தில் இந்திய தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை அளித்ததற்கும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுவதை குறிக்கும் வகையிலுமே இந்திய மூவர்ண கொடி ஒளிரவிடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ் தனது ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.

இதை பல்லாயிரக்கணக்கனோர் தங்களது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தனர்.

இந்த நிலையில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இந்தியாவின் தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டதுக்கும், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மற்ற நாடுகளுக்கு இந்தியா வழங்கியதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

அதாவது, சுவிட்சர்லாந்தின் சுற்றுலா ஆணையம் மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் மேட்டர்ஹார்னை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் தேசிய கொடியை "கடினமான காலங்களில் உலகிற்கு நம்பிக்கையின் அடையாளமாக" ஒளிரச் செய்து வருகிறது.

முஸ்லிம் இளைஞர் எச்சில் உமிழ்ந்தது கொரோனா வைரஸுடன் தொடர்புடையதா?

இந்தியாவில் இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை அதிகரித்து வருவதாக கவலைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில்,

அந்த மதத்தை சேர்ந்த ஒருவர் எச்சில் உமிழ்வதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

காவல்துறையினர் இருக்கும் அந்த வாகனத்தில் இருக்கும் இளைஞர் ஒருவர் எச்சில் உமிழ்வதை போன்று காணொளி உள்ளது.

Is a Muslim man spitting linked to the virus spread?

சமூக ஊடகங்களில் அந்த காணொளியை பகிர்ந்த நபர், அதன் விளக்கக்குறிப்பில் வங்காள மொழியில், “நிசாமுதீன் சென்ற ஜமாத்துகள் காவல்துறையினர் மீது எச்சில் உமிழும் காணொளி இதோ” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லாயிரம் முறை பகிரப்பட்டுள்ள இந்த காணொளி வழியே பரப்பப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தேடலில், இந்த படத்துக்கும் டெல்லியில் நடந்த மதக் கூட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று தெரியவந்துள்ளது.

தனக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்த 26 வயதான இளைஞர் குறித்த காணொளி இது என்று கடந்த பிப்ரவரி மாதம் ‘மும்பை மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த காணொளி மும்பையின் புறநகர் பகுதியான தானேவில் எடுக்கப்பட்டதே தவிர, டெல்லியில் அல்ல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: