குடியுரிமை திருத்தம்: போராட்டத்தில் இந்தியா முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில், முக்கிய நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள். சிலர் கலந்து கொள்ள முயற்சி செய்தவர்கள்.

பட மூலாதாரம், Getty images
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான ராமசந்திர குஹா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். பிபிசி இந்தியிடம் பேசிய அவர், ஒரு செய்தியாளரிடம் காந்தி குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, காவல்துறையினர் தன்னை கைது செய்ததாக குறிப்பிட்டார். "என்னை எங்கேயோ கூட்டிச் செல்கிறார்கள்" என்று மெசேஜ் மூலம் அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
டெல்லியில் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் செயற்பாட்டாளுருமான உமர் காலித் டெல்லி செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

பட மூலாதாரம், ANI
டெல்லி மண்டி ஹவுஸ் பகுதியில் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்ஷித்தை காவல்துறையினர் கைது செய்தனர். "போராட்டத்தில் கலந்துகொள்ள செங்கோட்டை செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் மண்டி ஹவுஸ் பகுதிக்கு வந்தேன்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் டெல்லி மண்டி ஹவுஸ் பகுதியில் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.


பிற செய்திகள்:
- CAA போராட்டம்: டெல்லியில் ஏர்டெல், வோடாஃபோன் தொலைத்தொடர்பு சேவைகளை முடக்கியது மத்திய அரசு
- "ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் - ஜாமியா மிலியா விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன்?"
- ஐபிஎல் ஏலம் 2019: அதிக கவனம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?
- நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்தது உண்மையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












