பீகாரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் தீயில் கருகி 27 பேர் பலி
பீகார் மாநிலத்தில் பயணியர் பேருந்து ஒன்று கவிழ்ந்து தீப்பற்றி கொண்ட விபத்தில் இறந்தோருக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், AFP/Getty Images
இந்த விபத்தில் சிக்கிய 27 பயணிகளும், பேருந்து கவிழ்ந்த பின் பற்றிய தீயில் கருகி பலியாகியுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு வந்துகொண்டிருந்த வேளையில். சாலையை விட்டு வெளியேறிய இந்தப் பேருந்து அருகிலுள்ள ஒரு பள்ளத்தில் விழுந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்தியாவில் போக்குவரத்தில் விபத்துகள் பொதுவாக நிகழ்கின்றன.
மோசமாக வாகனம் ஓட்டுதல், மோசமான சாலைகள் மற்றும் சரியாக பராமரிக்கப்படாத வாகனங்கள் போன்ற மோசமான பாதுகாப்பு பதிவுகளால் இந்த விபத்துகள் ஏற்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








