#வாதம் விவாதம்: ''வளர்ச்சி மட்டுமல்ல நிர்வாகமும் ஸ்தம்பித்து இருக்கிறது''

பட மூலாதாரம், Getty Images
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இந்நிலையில், ''ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்திருக்கிறதா?, ஜெயலலிதா இருந்திருந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காதா?" என பிபிசி தமிழின் சமூக வலைத்தள பக்கத்தில் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே...
''வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அதுபோல அவர் இல்லாத அஇஅதிமுக, அவர் இல்லாத தமிழ்நாடு, அம்மா இல்லாத இந்திய அரசியல் என்று எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது." என சேது என்பவர் பதிவிட்டுள்ளார்.

"வளர்ச்சி மட்டுமல்ல நிர்வாகம் ஸ்தம்பித்து இருக்கிறது. பல தமிழக மக்கள் விரும்பாத திட்டங்கள் குறிப்பாக நீட், மீத்தேன் , நிர்வாகத்தில் ஆளுனர் தலையீடு என்று எல்லா விஷயங்களும் நடக்கின்றன'' என சிக்கந்தர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
''இருந்திருந்தாலும் எந்த மாற்றமும் இருந்திருக்காது. ஜெயலலிதா மிகப்பெரிய தவறை செய்து விட்டுப் போயிருக்கிறார். அது சசிகலா குடும்பத்தை தெரிந்தே வளர்த்து விட்டது.'' என சரோஜா கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
''ஒரு முன்னேற்றமும் இருந்திருக்காது. 90 சதவிகித மந்திரிகள் மாற்றப்பட்டிருப்பார்கள்.'' என மோகன் பதிவிட்டுள்ளார்.
''அம்மா இல்லாமல் தமிழ்நாடு வீழ்ச்சி அடைந்து விட்டது'' என மோகன் என்ற பெயருடைய இன்னொரு நேயர் கூறியுள்ளார்.
''மாற்றம் ஏதும் ஏற்பட்டிருக்காது. ஆனால் தமிழக மக்களின் கடன் சுமை அதிகமாகியிருக்கும்'' என விஜய் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்