ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் தக்கப்பட்டதை அடுத்து தமிழகமெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

சட்டப்பேரவையில் திமுக சார்பில் வைக்கப்பட்ட ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை ஏற்கப்படாததால், தர்ணா போராட்டத்தை தொடங்கியதால், ஸ்டாலின் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல், போரட்டம், ஆர்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு ஆகிய போராட்டங்களில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டது, குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கு நடைபெறும் போராட்டங்களின் தகவல்கள் வந்த வணணமுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













