ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மெரினா கடற்கரையில் தர்ணா

சட்டமன்றத்திலிருந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்கள்.
திமுக உறுப்பினர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் இந்தப் போராட்டத்தை நடத்திய காந்தி சிலைக்கு அருகே உள்ள ஜெயல்லிதா நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் ஆகிய அதிமுக (சசிகலா அணி) தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இரு எதிரெதிர் கட்சிகளும் சுமார் 200 மீட்டர் இடைவெளியில் மெரினா கடற்கரையில் குழுமியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, திமுக உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தனர்.
அவையில் நடந்த சம்பவத்தை அவர்கள் ஆளுநரிடம் விவரித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












