எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசியில் பிரதமர் வாழ்த்து
தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு பிரதமர் நரேந்திர மோதி தன்னுடைய வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், TWITTER
இதுகுறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோதி, எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் பேசியதாகவும், தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவலை அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னர் இன்று மாலை ஐந்து மணி அளவில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட 31 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












