அமெரிக்காவில் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பல தசாப்தங்களுக்கு முன்னர் கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் பல மாநிலங்களில் இந்தக் கட்டாயக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது
படக்குறிப்பு, அமெரிக்காவின் பல மாநிலங்களில் இந்தக் கட்டாயக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது

அந்த மாநிலத்தில் 1920ஆம் ஆண்டுகள் தொடக்கம் 1970ஆம் ஆண்டு வரையிலானக் காலப்பகுதிவரை உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ கருவுறத் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்ட 8000க்கும் அதிகமான ஆடவர் மற்றும் மகளிருக்கு அவ்வகையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டன.

யூஜெனிக்ஸ் என்று அறியப்பட்ட அந்தத் திட்டமானது அமெரிக்காவின் 30க்கும் அதிகமான மாநிலங்களில் நடைமுறையில் இருந்தது.

இதேபோன்ற ஒரு நடைமுறையை அடால்ஃப் ஹிட்லரும், சிறந்த இனத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.

வர்ஜீனியாவில் இப்படி கட்டாயக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இன்னும் வாழ்ந்து வருபவர்களுக்கு தலா 25,000 டாலர்கள் இழப்பீடு பெறவுள்ளனர்.

இதற்கு முன்னர் வட கரோலினா மாநிலமும் இப்படியான இழப்பீட்டை வழங்கியிருந்தது.