"எட்டு மாத கர்ப்பிணிக்கு கட்டாயமாக கருச்சிதைவு" - வட கொரிய சிறையில் அதிர வைக்கும் அனுபவங்கள்

வட கொரியா சிறை வாழ்க்கை

பட மூலாதாரம், Korea Future

படக்குறிப்பு, ஒரு நாள் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு தரவுத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.
    • எழுதியவர், லாரா பிக்கர்
    • பதவி, பிபிசி நியூஸ், சோல்

தனது சிறை அறையில் ஊர்ந்து சென்றதற்காக, லீ யங்-ஜூ, தனது இரண்டு கால்களை மடக்கி அமரும்படி உத்தரவிடப்பட்டது. அவரது கைகள் கால் மூட்டியில் வைத்திருக்க கட்டளையிடப்பட்டது.

அந்த நாளில் 12 மணி நேரத்துக்கு எங்கும் நகர கூட அவர் அனுமதிக்கப்படவில்லை.

சிறைவாசிகளிடையே மெல்லிய பேச்சு சத்தமோ அல்லது முணுகல்களோ கேட்டாலும் கூட, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

குறைந்த அளவிலேயே குடிநீரும், சிறிய சாப்பாடும்தான் அவருக்கு தரப்பட்டது.

"நான் ஒரு மனிதரைப் போல இல்லாமல் விலங்கே போல உணர்ந்தேன்," என்கிறார் அவர்.

நம்மில் பலரும் மிகவும் யதார்த்தமாக செய்யும் ஒரு விஷயங்களுக்காக அந்தச் சிறையில் பல மணிநேரம் விசாரிக்கப்பட்டதாக அவர் தாய்நாட்டை விடடுப் போக்கும்போது பிபிசியிடம் தெரிவிக்கிறார்.

2007ஆம் ஆண்டில் வட கொரியாவில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற அவர் சீனாவில் பிடிபட்டு, மீண்டும் அழைத்து வரப்பட்டார்.

சீனாவின் எல்லைக்கு அருகே உள்ள வட கொரியாவின் அன்சாங் தடுப்புக் காவல் மையத்தில் மூன்று மாதங்களுக்கு அவர் தண்டனைக்காக காத்திருந்தார்.

கடுமையான காவல் கண்காணிப்புக்கு இடையே, யங்-ஜூ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி, தனது சக சிறைவாசியுடன் முணுமுணுத்தார்.

"நாங்கள் மீண்டும் தப்பி செல்லும் திட்டங்கள் குறித்துப் பேசுவோம். இடைத்தரகர்களை சந்திப்பது குறித்துப் பேசுவோம். அது மிகவும் ரகசியமான உரையாடல்கள்," என்று அவர் கூறினார்.

ஆனால், யங்-ஜூவின் திட்டங்கள் கேட்கப்பட்டன.

"அங்குள்ள காவலர்கள், என்னை செல்லுக்கு வரச் சொல்வார்கள். அவர்களை எனது கைகளை நீட்ட வைத்து, வீக்கம் ஏற்பட்டு கைகள் நீல நிறத்திற்கு திரும்பும் வரை அடிப்பார்கள். வட கொரியாவை விட்டு வெளியேற முயற்சி செய்பவர்களை துரோகிகள் போல இந்த காவலர்கள் நினைப்பாரகள்" என்று அவர் கூறுகிறார்.

"மற்றவர்கள் அடிவாங்கும் குரலைக் கூட உங்களால் கேட்க முடியும். நான் செல் 3-இல் இருந்தேன். ஆனால், செல் 10இல் அடிவாங்குபவர்களின் சத்தததை இங்கேயே கேட்க முடியும்".

அடக்குமுறையின் அமைப்பு

வட கொரியாவின் சிறை அமைப்பிற்குள் சர்வதேச சட்டத்தை மீறுவது குறித்து கொரியா ஃபியூச்சரின் விரிவான விசாரணைக்கு பங்களித்த 200 க்கும் மேற்பட்டவர்களில் யங்-ஜூவும் ஒருவர்.

148 குற்றச்சாட்டுகளில், 785 கைதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 5,181 மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய 597 குற்றவாளிகளை தன்னார்வலர் அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.

ஒரு நாள் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு தரவுத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை வடகொரியா எப்போதும் மறுத்து வருகிறது. இந்த விசாரணைக்கு பதிலளிக்க வடகொரியாவின் பிரதிநிதியை தொடர்பு கொள்ள பிபிசி முயற்சித்துள்ளது. ஆனால், அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.

வட கொரியா சிறை வாழ்க்கை

பட மூலாதாரம், KOREA FUTURE

படக்குறிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, உலகத்தை விட்டு மிகவும் தனித்துள்ளது வட கொரியா நாடு.

தங்களுடைய நிலையைப் பார்க்க வழி செய்யும் வகையில், ஒன்சாங் தடுப்புகாவல் மையத்தின் 3D மாதிரியையும் அக்குழு உருவாக்கியுள்ளது.

இந்த சிறை அமைப்பும், அதில் நடக்கும் வன்முறையையும் 25 மில்லியன் பேரை கொண்ட மக்கள் தொகையை ஒடுக்கப் பயன்படுத்தபட்டதாக, கொரியா ஃபியூச்சரின் இயக்குநர் சுயோன் யோ தெரிவித்துள்ளார்.

துன்புறத்தல் குறித்த பல்வேறு புகார்கள்

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, உலகத்தை விட்டு மிகவும் தனித்துள்ளது வட கொரியா.

கடந்த மூன்று தலைமுறைகளாக, அந்த நாட்டை கிம் குடும்பம் ஆட்சி செய்து வருகிறது. அந்நாட்டு மக்கள், அவர்களின் குடும்பத்திடமும், தற்போதைய தலைவரான கிம் ஜோங்-உன் உடனும் முழு மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த கட்டமைப்பில் நடக்கும் வன்முறைகள் குறித்து, பல்வேறு வாக்குமூலங்களில் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது.

பாலியல் வன்முறையும், பிற வகையான பாலியல் துன்புறத்தல்களும் அங்கு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அங்கிருந்து பிழைத்தவர்கள் தாங்கள் கருச்சிதைவு செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினார்.

ஒரு முறை, தன் சக சிறைவாசி எட்டு மாதம் கர்ப்பிணியாக இருக்கும்போது, கருச்சிதைவு செய்யும் நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டார் என்று வட ஹம்க்யாங் மாகாணத்தின் மையத்திலிருந்து பிழைத்த ஒருவர் கூறுகிறார். அந்த குழந்தை பிழைத்தது ; ஆனால், ஒரு தண்ணீர் தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டார்.

ஐந்து மரண தண்டனைகளும் விதிக்கப்பட்டதாக, நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

நீதிக்கு ஒரே சிறிய வழி

யங்-ஜூவுக்கு இறுதியில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. "நான் என் தண்டனை காலம் முடிவதற்குள் உயிருடன் இருப்பேனா என்று கவலை கொண்டேன்," என்று அவர் கூறுகிறார்.

வட கொரியா சிறை வாழ்க்கை

பட மூலாதாரம், KOREA FUTURE

"நீங்கள் இது போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, சகித்துக்கொள்வதற்கும் உயிர்வாழ்வதற்கும் நீங்கள் மனிதனாக இருப்பதை விட்டுவிட வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். சாரோம் 2007ஆம் ஆண்டு ஒன்சாங் தடுப்புகாவல் மையத்தில் இருந்தார். அரசின் பாதுகாப்பு சிறைகளில் அடிபட்டதை மோசமான அனுபவம் என்று அவர் நினைவு கூர்ந்தார்.

"உங்களின் தொடையில் மரக் குச்சியால் அடிப்பார்கள். நீங்கள் நடந்து செல்வதாக இருந்தாலும் ஊர்ந்து செல்லவே முடியும். பிறரை அடிப்பதை சகிக்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டால் கூட அவர்கள் அந்த தாக்குதலை பார்க்க வைப்பார்கள்."

"ஆன்மாவை குலைப்பதுதான் அவர்களின் எண்ணம். சாத்தியம் இருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று சாரோம் எங்களிடம் கூறுகிறார்.

"இப்போது தென் கொரியாவில் தனது புதிய வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறுகிறார். இந்த வழக்குகளை விசாரிப்பது கடினமாக இருக்கும். இருப்பினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நிபுணர்கள் சேகரித்த விவரங்களை இந்த வழக்கு கொண்டுள்ளது. அவை நீதிமன்றத்தால் ஏற்கப்படும். அவற்றை வெளிப்படையாக எவரும் பார்க்கலாம்."

"இந்த அறிக்கை நீதிக்கு வெகு அருகே தங்களை கொண்டு செல்ல உதவும் என்று நம்புவதாக சாரோமும் யங்-ஜூவும் எங்களிடம் கூறினர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :