ட்விட்டர் சிஇஓ அக்ரவால்: அமெரிக்க அரசியல் முதல் கிரிப்டோகரன்சி வரை, அடுத்த டிவிட்டர் சிஇஓ எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?

ஜாக் டார்சி, ட்விட்டர் நிறுவனர்
படக்குறிப்பு, ஜாக் டார்சி, ட்விட்டர் நிறுவனர்
    • எழுதியவர், ஜேம்ஸ் க்ளேடன்
    • பதவி, வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர்

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட சிலரில் ஜாக் டார்சியும் ஒருவர். அவரைப் போல ஒரு கதாபாத்திரம் ஒரு படத்தில் தோன்றினால், வழக்கமான கதாபாத்திரம் என்றே நீங்கள் கருதுவீர்கள்.

தீவிர கொள்கை பிடிப்பு கொண்டவர், தொழில்நுட்பம் உலக அமைதியையும், வளத்தையும் கொண்டு வரும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்.

ஹிப்பிக்கள் போன்ற சுதந்திரவாத போக்குடையவர். உண்மையிலேயே தொழில்நுட்ப உலகில் அடுத்து என்ன நடக்கும் என்கிற தொலைநோக்கு பார்வை கொண்டவராகத் திகழ்ந்தார்.

ட்விட்டர் நிறுவனத்திலிருந்து அவர் இரண்டாவது முறையாக வெளியேறுகிறார். முதல் முறை அவர் ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய போது, 2009ம் ஆண்டு 'ஸ்கொயர்' என்கிற புதிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனத்தைத் தொடங்கினார், அது மிகப்பெரிய வெற்றியடைந்தது.

2015ம் ஆண்டு மீண்டும் ட்விட்டர் நிறுவனத்துக்குள் வந்தார் அவர். கடந்த திங்கட்கிழமை வரை ஜாக் டார்சி இரு நிறுவனத்தையும் நிர்வகித்து வந்தார். இது பல முதலீட்டாளர்களுக்கு பொருந்தாத ஒன்று.

ட்விட்டரின் மிகப் பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றான எலியட் மேனேஜ்மென்ட் என்கிற நிறுவனம், இரு நிறுவனங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு கடந்த ஆண்டு அவருக்கு கூறியது. ட்விட்டரில் மட்டுமே தன் முழு நேரத்தை செலவழிக்கும் ஒரு முதன்மை செயல் அதிகாரியை அந்நிறுவனம் விரும்புகிறது.

ட்விட்டர் நிறுவனத்தால் அதன் மிகப் பெரிய பயனர்களை வைத்துக் கொண்டு, அதிகம் சம்பாதிக்க முடியும், ஆனால் அந்நிறுவனம் சம்பாதிக்காமல் இருக்கிறது என ஒரு மனப்போக்கு முதலீட்டாளர்கள் மனதில் உள்ளது.

ட்விட்டரில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு சி.இ.ஓ இருந்தால் அதற்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

ட்விட்டரின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு ஜாக் டார்சி தான் காரணமென சிலர் கருதுகிறார்கள். பயனர்களின் அனுபவத்தின் பெயரில் பணம் சம்பாதிக்க, ட்விட்டர் தளத்தை உருவாக்கிய ஜாக் டார்சி விரும்பவில்லை.

அதற்காக ஜாக் டார்சி வருவாயை பெருக்க முயலாமல் இல்லை, பணம் ஈட்டும் நடவடிக்கைக்கு பயன்படும் பயனர்களின் எண்ணிக்கையை, வரும் 2023ஆம் ஆண்டுக்குள் 315 மில்லியன் அளவுக்கு கொண்டு செல்லவேண்டும் என அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார். மேலும் அவ்வாண்டில் வருவாயை இருமடங்காக அதிகரிக்க உள்ளதாகவும் அறிவித்தார்.

கொரோனா காலத்தில் ட்விட்டர் தன் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, இருப்பினும் இலக்கு மிகப் பெரியது. அந்த இலக்கை அடுத்து வரவிருக்கும் ட்விட்டர் முதன்மை செயல் அதிகாரி பராக் அக்ரவால் தன் தலைமையின் கீழ் ஏற்று செயல்படுத்த உள்ளார். அவர் முன், அவர் செய்ய வேண்டிய பெரிய பணிகள் இருக்கின்றன.

பராக் உடனடியாக ஜாக் டார்சியின் பணமாக்கும் பிரச்சனையை சமாளிக்க வேண்டும். ட்விட்டர் நிறுவனம் ஃபேஸ்புக்கை போன்றல்ல, அது ஒரு பயனரைக் குறித்த குறைவான விவரங்களையே வைத்துள்ளது. அதுவும் விளம்பரதாரர்களுக்கு பயனுள்ளதல்ல.

பயனர்கள் ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறுவதற்கு முன், அவர்களுக்கு அதிகப்படியான விளம்பரங்களைக் காட்டுவது மட்டுமே ஒரே வழி. பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அதே நேரத்தில் வருவாயையும் அதிகரிக்க வேண்டும் என இரண்டு விஷயங்களையும் சமாளிப்பது மிகவும் சிரமமான ஒன்று.

க்ரிப்டோகரன்சி

ஜாக் டார்சி, ட்விட்டர் நிறுவனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜாக் டார்சி, ட்விட்டர் நிறுவனர்

ஜாக் டார்சி க்ரிப்டோகரன்சி குறித்து பெரிய ஆர்வமுடையவர், குறிப்பாக பிட்காயின். டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் பரவலாக்கப்பட்ட செயலிகளை ஏற்றுக் கொள்வது தொடர்பாக ஒரு தனி குழுவையே அமைத்தார் ஜாக் டார்சி.

தற்போது அந்த அணியும் பராக்கின் கீழ் செயல்பட உள்ளது. ட்விட்டரின் வளர்ச்சி குறித்த புதிய முதன்மைச் செயல் அதிகாரியின் பார்வையில் டிஜிட்டல் கரன்சிகள் முக்கிய பங்கு வகிக்கலாம்.

அதே நேரத்தில், அமெரிக்க அரசியலிலும் ட்விட்டர் மிக ஆழமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ட்விட்டர் தளத்தில் பதிவிடப்படும் கருத்துக்களை தணிக்கை செய்யும் பிரச்சனையை பராக் அக்ரவால் எதிர்கொள்ள உள்ளார்.

ட்விட்டர் தளம் போலி செய்திகளை களைய போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினர் பொதுவாகக் கூறுவதுண்டு. மேலும், வெறுப்பு அரசியல் பேசுவதை உடனடியாகக் கண்டு பிடித்து நீக்கும் அளவுக்கு ட்விட்டர் தளம் வேகமாக இல்லை என்றும் வாதிடுவதுண்டு.

நாடாளுமன்றக் கலவரத்துக்குப் பின், ட்விட்டர் பழமைவாதத்துக்கு எதிரான சார்புடையதாக இருக்கிறது என்றும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை தடை செய்து ட்விட்டர் தன் சார்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குடியரசுக் கட்சியினர் வாதிடுகின்றனர்.

இப்போது இல்லை என்றாலும், விரைவில் ஏதோ ஒரு பிரச்சனை தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் முன்னிலையில் விளக்கம் கொடுக்க பராக் அக்ரவால் அழைக்கப்படலாம் என்பதில் சந்தேகமில்லை.

பராக் அகர்வால், புதிய ட்விட்டர் சி இ ஓ

பட மூலாதாரம், PARAG AGARWAL

படக்குறிப்பு, பராக் அக்ரவால், புதிய ட்விட்டர் சி இ ஓ

2010ஆம் ஆண்டு பராக் அக்ரவால் பதிவிட்ட ஒரு ட்வீட்டை சுட்டிக்காட்டி, அவர் இடதுசாரி சார்புடையவர் என பழமைவாதிகள் வாதிடுகின்றனர்.

"ஒரு நிறுவனம் 'நிறுவனர் தலைமையில்' இருப்பதன் முக்கியத்துவம் குறித்து நிறைய பேசப்படுகிறது. அது மிகக் கடுமையான வரம்புக்கு உட்பட்டது மற்றும் தோல்விக்கான ஒரு புள்ளி என நான் நம்புகிறேன்," என ஜாக் டார்சி தன் ராஜினாமா குறித்து வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கை குறிவைத்து எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது.

ஆனால் உணர்வுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ், செர்ஜி பிரின், லாரி பேஜ், ஸ்டீவ் ஜாப்ஸ், டார்சி போன்ற மாபெரும் வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கியோர் அனைவரும், கிட்டத்தட்ட 'பாதுகாப்பான தேர்வுகள்' மூலம் மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்டவர்கள் யாரும் அவர்களது முன்னோர்களை (நிறுவனர்களை) போன்றில்லை. ஒருவேளை ட்விட்டருக்கு வேண்டுமானால் அது தேவைப்படலாம்.

45 வயதான ஜாக் டார்சியைப் பொறுத்தவரை, அவர் இன்னும் இளமையாகவே இருக்கிறார். கடைசியாக அவர் ட்விட்டரிலிருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தபோது, அவர் அனாயாசமாக உருவாக்கிய ஸ்கொயர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் $100 பில்லியன்.

ஜாக் டார்சி சில சமயங்களில் வேடிக்கையான நபராக கருதப்படலாம், ஆனால் அவரை தீவிரமாக எடுத்துக்கொள்ளும் உரிமையை அவர் பெற்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :