விவசாயிகள் போராட்டம்: இந்தியா-பாகிஸ்தான் தீர்க்க வேண்டிய பிரச்னை என பதிலளித்த பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர்

பட மூலாதாரம், @TanDhesi

இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி பேசியபோது, அந்த விவகாரத்தை இந்தியா - பாகிஸ்தான் இடையே தீர்க்க வேண்டிய பிரச்னை என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்ட பதிலால், அங்குள்ள எம்.பி.க்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

இது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி எம்.பி ஆன தன்மன்ஜீத் சிங், "இந்தியாவில் வேளாண் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அந்நாட்டு அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்கள் நடத்துகிறார்கள்.இந்த அவையில் பலரும் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பிற பகுதிகளை பூர்விகமாகக் கொண்டவர்கள். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதையும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைப்பதையும், பலப்பிரயோகம் செய்வதையும் பார்க்கும்போது மிகவும் கவலைப்படுகிறோம். ஆனால், தங்களை தாக்கிய படையினருக்கு அதே விவசாயிகள் உணவு கொடுத்து உபசரிக்கிறார்கள். இத்தகைய கனிவான எதிர்வினையை வெளிப்படுத்த எத்தகைய மனம் இருக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் நீடித்து வரும் முட்டுக்கட்டை தீர இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் பிரிட்டன் பிரதமர் பேச வேண்டும். அமைதி வழியில் போராட அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளது. இதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள்தானே" என்று தன்மன்ஜீத் பேசினார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இதற்கு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பந்தமே இல்லாத விவகாரத்தை பதிலாக தந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் மட்டுமின்றி அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

"எங்களுடைய பார்வையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம். ஆனால், இதுபோன்ற விவகாரம் அடிப்படையில் இரு நாட்டு அரசாங்கங்கள் தங்களுக்குள்ளாக தீர்கக வேண்டிய விஷயம், இந்த பதிலை நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்," என்று போரிஸ் ஜான்சன் பேசி அமர்ந்தார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், தலைநகர் டெல்லியில் நடத்தும் போராட்டத்துக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு என்ற ஆச்சரியத்தில் சில எம்.பி.க்கள் இருக்க, சிலர் போரிஸ் ஜான்சனின் பதிலால் வெளிப்படையாக சிரிக்கவும் செய்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத எமிலி தார்ன்பெர்ரி என்ற எம்.பி, "நமது பிரதமரான முன்னாள் வெளியுறவு செயலாளருக்கு பஞ்சாபுக்கும் காஷ்மீருக்கும் இடையிலான வேறுபாடு தெரியவில்லை போலும்", "அவரது பதிலால் நாங்கள் ஏன் ஆச்சரியப்படக்கூடாது?" என்று கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

அவரது ட்விட்டர் பதிவை ரீ-ட்வீட் செய்த தன்மன்ஜீத் சிங், "நமது பிரதமர் தான் என்னதான் பேசுகிறோம் என்பதை புரிந்து பேசுகிறாரா?" என்று குறிப்பிட்டு தமது கவலையை வெளிப்படுத்தினார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

வழக்கமாக அவையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்க வேண்டிய பதில்கள் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ பிரதமருக்கோ அளிக்கப்பட்டிருக்கும். அந்த பதில்களுடன் அவர்கள் தயாராகவே வந்திருப்பார்கள்.

இந்த நிலையில், பாகிஸ்தான் தொடர்புடைய கேள்வியை தன்மன்ஜீத் சிங் எழுப்பியதாக நினைத்து, தான் முன்பே தயாரித்திருந்த பதிலை போரிஸ் ஜான்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பதிவு செய்ததாகக் கருதப்படுகிறது. குழப்பமான பதிலால் இப்போது அவரே சர்ச்சையாகியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: