காணொளி: வாட்ஸ்ஆப் மூலம் எளிதாக பிறப்பு சான்றிதழ் வாங்குவது எப்படி?

காணொளிக் குறிப்பு, வாட்ஸாப் மூலம் பிறப்பு சான்றிதழ் வாங்குவது எப்படி?
காணொளி: வாட்ஸ்ஆப் மூலம் எளிதாக பிறப்பு சான்றிதழ் வாங்குவது எப்படி?

பிறப்பு சான்றிதழ்... சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை வாங்குவது என்றாலே நாம் முதலில் யோசிக்கும் விஷயம் ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று வாங்க வேண்டும் என்பதுதான்.

ஆனால், இப்போ தமிழ்நாடு அரசு 'நம்ம அரசு' என ஒரு சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளனர்.

இதன் மூலமாக வாட்ஸப்பில் 7845252525 என்ற எண்ணுக்கு Hi-னு மெசேஜ் செய்து ஆவணங்களை வாங்குவது, வரி செலுத்துவது, TNSTC-யில் டிக்கெட் பதிவு செய்வது, நிலத்தின் வழிகாட்டி மதிப்பு தெரிந்துகொள்வது என சுமார் 50 அரசு சேவைகளை பெறலாம் என அரசு சொல்கிறது.

இந்த சாட்பாட்டில் அறநிலையத்துறையில் இருந்து மொத்தமாக 17 துறைகளில் இந்த சேவையை நாம் பெற முடியும்.\இந்த சேவைகளை எப்படி பெறுவது என காணொளியில் பார்க்கலாம்.

இப்போ நம்ம எப்படி பிறப்புச் சான்றிதழை வாங்குவது என்பதை இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு