ஒற்றைப் பாட்டில் ஒபாமாவையே சுண்டி இழுத்த ப்ரதீக், அது என்ன பாட்டு?

ப்ரதீக்

பட மூலாதாரம், SAMBIT BISWAS

    • எழுதியவர், மார்க் சேவேஜ்
    • பதவி, பிபிசி இசை செய்தியாளர்

"ஹிப் ஹாப், கன்ட்ரி பாடல்கள் முதல் பாஸ் வரை... இந்த ஆண்டில் என் பாடல்கள் பட்டியல் இதோ. உங்களின் ஒரு நீண்ட பயணத்துக்கு துணை தேடுகிறீர்களா அல்லது உடற்பயிற்சி செய்ய தூண்டும் வகையில் பாடல் வேண்டுமா? இதில் ஒரு சில பாடல்கள் இருக்கும் என நம்புகிறேன்" என, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் விருப்பப்பாடல்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அட, இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? ப்ரதீக் குஹாத் என்கிற ஒரு இந்திய இளைஞரின் பாட்டு இருந்தது. அதை எங்கிருந்தோ தேடிப் பிடித்து, இப்போது இணையத்தில் டிரெண்டாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

"I wish I could leave you, my love, but my heart is a mess," என்கிற ஆங்கிலப் பாடலைத் தான், ஒபாமா, தனக்கு பிடித்த பாடல்களில் ஒன்றாக Cold/Mess என்கிற பெயரில், இந்தியாவைச் சேர்ந்த ப்ரதீக் குஹாத்தின் பெயரைக் குறிபிட்டு இருக்கிறார்.

ஒபாமா வெளியிட்ட பாடல்கள் பட்டியலில், பியான்ஸ், டாபேபி, லிசோ, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில், ப்ரதீக் குஹாத் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரதீக்

பட மூலாதாரம், ARSH GREWAL

இத்தனைக்கும் ப்ரதிக்கின் "I wish I could leave you..." பாடல், அமெரிக்க சந்தையில் பிரமாண்ட வரவேற்பை எல்லாம் பெறவில்லை. ஆனால் எப்படியோ ஒபாமாவின் 35 பாடல்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது.

இரண்டு காதலர்களுக்கு மத்தியிலான உறவு பெரிய விரிசலைக் கண்டிருக்கிறது, ஆனால் இருவரும் அந்த வலியைக் கடந்து வர முடியாமல் தவிப்பது போல, ப்ரதீக் குஹாத் இந்த பாடலை அமைத்து இருக்கிறார்.

நான்கு வருடங்களுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த பாடலைப் பாடுகிறார். பார்வையாளர்கள் இந்த பாடலால் ஈர்க்கப்படுகிறார்கள். அதன் பின் தான், ப்ரதீக், ஆறு பாடல்களுடன் Cold / Mess என்கிற பெயரில் வெளியிட்டார்.

2018-ம் ஆண்டில் ப்ரதீக்கின் Cold/Mess வெளியாகும் போது, இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடிக்கிறது. அத்துடன் கடந்த ஆண்டு ஸ்பாடிஃபை தொடங்கப்பட்ட போது, அதில் கேட்கப்பட்ட நபராகிவிட்டார் ப்ரதீக்.

ப்ரதீக்

பட மூலாதாரம், SAMBIT BISWAS

கடந்த ஆண்டி முடிவில், டெல்லியில் 9,000 பேர் கொண்ட அரங்கத்தில் பாடும் அளவுக்கு ப்ரதீக்குக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துவிட்டது. இவை எல்லாமே ஒபாமா ட்விட்டுக்கு முன்பே நடந்துவிட்டது. ஒபாமா ட்விட்டுக்குப் பிறகு, ப்ரதீக்கின் இசை வாழ்கைக்கு, பெரிய வேகத்தைக் கொடுத்து இருக்கிறது.

30 வயதாகும் இந்த இளைஞர், ஜெய்பூரில் பிறந்து வளர்ந்தவர். ஆறு வயதில் கிட்டாரை கையில் எடுத்தவர், ஐந்து பாடங்களுக்குப் பிறகு கிட்டாரை கீழே வைத்துவிட்டார். மீண்டும் உயர் நிலைப் பள்ளியில் கிட்டார் வகுப்பில் சேர்ந்து, மீண்டும் தோல்வியைத் தழுவுகிறார்.

பெங்களூரில் வாழ்ந்த தன் சகோதரியின் நண்பர் வழியாக, சகோதரியின் பாடல் கேசட்டுகள், ப்ரதீக் கைக்கு வருகிறது சவேஜ் கார்டன், தி பியூட்டிஃபுல் சவுத், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ், பாய் சோன், பிங்க் ஃப்ளாய்ட், நிர்வானா.... போன்ற கேசட்டுகளைக் கேட்கிறார்.

ப்ரதீக்

பட மூலாதாரம், Getty Images

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் வாழ்ந்ததால், எலியட் ஸ்மித், லாரா மார்லிங், நிக் ட்ராகே போன்றவர்களின் இசை பரிட்சயமாகிறது. அப்படியே கிட்டாரையும் தீவிரமாகப் பழகுகிறார்.

கென்யே வெஸ்ட், டைலர் ஸ்விஃப்ட், ரிஹானா, மடோனா போன்றவர்களோடு எல்லாம் பணியாற்றிய ஜெஃப் பாஸ்கர் , ப்ரதீக்கின் பாடலைக் கேட்டு, இன்னும் "melodic movement" வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். அது ப்ரதீக்குக்கு உதவியாக இருந்து இருக்கிறது. ஆனால் ப்ரதிக்கோ மெலொடி இசையில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. பாடல் வரிகளில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கிறார்.

ப்ரதீக்கின் Cold/Mess பாடல், இந்திய இசைத் துறைக்கே சவால்விட்டது. பெரும்பாலான பாலிவுட் இசைக் காணொளியில், அதிகம் நாடகத்தன்மை இருக்கும். நிறைய வண்ணங்கள், பெரிய ஏற்பாடுகள், அதிக சத்தமாக இருக்கும். ஆனால் Cold/Mess இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது.

அடுத்து என்ன?

இந்த குளிர் காலத்தில், அமெரிக்காவின் எலெக்ட்ரா ரெகார்ட்ஸ் உடன் இணைந்து, Cold/Mess-ஐ மீண்டும் ரிலீஸ் செய் இருக்கிறார்களாம். இதற்கான வேலை தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: