கிழக்கு லடாக் பதற்றம்: எல்லையில் மீண்டும் ஆத்திரமூட்டும் செயல்களில் சீன படையினர் - கள நிலவரம் என்ன?

சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா ச்சன்யிங்

பட மூலாதாரம், @GLOBALTIMES

படக்குறிப்பு, சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா ச்சன்யிங்

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் ஏரியின் தெற்குப் பகுதியில் ஆத்திரமூட்டும் செயல்பாடுகளில் சீனா ஈடுபடுவதாகக் கூறி அங்கு முகாமிட்டிருந்த சீன படையினர் மேலும் முன்னேறாத வகையில் இந்திய படையினர் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சையாகி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 29-30 நள்ளிரவில் தரை மார்க்கமாக நூற்றுக்கணக்கான சீனப்படையினர் வடக்குப் பகுதி வழியாக முன்னேறி வந்ததை அறிந்த இந்திய படையினர், எல்ஏசி பகுதியில் முன்னேறி சீன படையினர் மேலும் முன்னேறாத வகையில் தடுத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

இது தொடர்பாக பரஸ்பரம் எல்லை தாண்டிய ஊடுருவலில் இரு நாட்டுப் படையினரும் ஈடுபடுவதாக இந்தியாவும், சீனாவும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இரு தினங்களுக்கு முன்பு எல்லையில் ஆத்திரமூட்டல் செயல்பாடுகளில் சீன படையினர் ஈடுபட்ட பிறகு, இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகளை பாதுகாக்க தற்காப்பு நடவடிக்யை மேற்கொண்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் இரு தரப்பு ராணுவ கட்டளைத் தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தவேளையில், மீண்டும் இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆத்திரமூட்டல் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். உரிய நேரத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு, அவரவர் நிலையிலேயே தொடர்ந்து இருக்க முயன்றதாக அவர் கூறினார்.

இதற்கிடையே பாங்கோங் ஏரியின் தென் பகுதியில் இந்திய படையினர் பெருமளவிலும், வடக்குப் பகுதியில் சீன படையினரும் தளவாடங்களுடன் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவை ஜூன் மாதம் நடந்ததை போல மோதிக்கொள்ளும் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முன்னாள் ராணுவ தளபதி லெஃப்டிணன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா கூறினார்.

இந்த நிலையில், பதற்றம் தொடர்பாக டெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

இரு தினங்களுக்கு முன்பு கிழக்கு லடாக்கின் பாங்கோங் ட்செள பகுதியின் தெற்குக் கரை பகுதியில் சீன படையினர் இரவு நேரத்தில் முன்னேறி வந்ததால் அவர்கள் எல்ஏசி பகுதியில் மேலும் முன்னேறாமல் தடுக்க இந்திய படையினர் முயன்ற விவகாரம் இரு தரப்பிலும் சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் எல்ஏசி எனப்படும் அசல் கட்டுப்பாட்டு கோடு நிர்ணயிக்கப்பட்ட பகுதியைத் தாண்டி சீன படையினர் முகாமிட்டதாக இந்தியா கூறி வந்த நிலையில், "எல்லை தாண்டி வந்தது நாங்களல்ல, இந்திய படையினர்தான்" என்றும் "அவர்கள் உடனடியாக அங்கிருந்து திரும்பப் பெறப்பட வேண்டும்" என்றும் சீன அரசு வலியுறுத்தியுள்ளது.

சீனா

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா ச்சன்யிங், எந்தவொரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தையும் சீனா கைப்பற்றவில்லை என்று கூறினார்.

"70 ஆண்டுகளுக்கு முன்னர் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து, சீனா ஒருபோதும் எந்தவொரு சண்டையையும் மோதலையும் தூண்டவில்லை அல்லது வேறு எந்த நாட்டின் ஒரு அங்குல நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. சீன துருப்புக்கள் ஒருபோதும் எல்லை மீறவில்லை. ஒருவேளை இது தகவல் தொடர்பு பிரச்சனையாக இருக்கலாம்" என்று ஹுவா கூறினார்.

"உண்மையில், சீனாவின் எல்லைப் படைகள் எல்ஏசி பாதுகாப்பு மரபை கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகின்றன, அவை ஒருபோதும் அத்துமீறவில்லை. எல்லைப் பகுதிகளின் அமைதி மற்றும் அமைதியை கூட்டாகப் பாதுகாக்க, இந்திய தரப்பு உண்மைகளை மதித்து, சீனா-இந்தியா உறவுகளைப் பாதுகாக்க, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று சச்யன்யிங் வலியுறுத்தினார்.

எல்லையில் இந்தியா அதிக துருப்புக்களை நிறுத்துவது குறித்து சில இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டு வருவதை சீனா கவனித்து வருவதாகவும், அது உண்மை என நிரூபிக்கப்பட்டால், அத்தகைய நடவடிக்கை இரு நாட்டு மக்களின் நலன்கள், இரு தரப்பு நல்லுறவுக்கு எதிரானதாக அமையும் என்று ச்சன்யிங் தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள சீன தூதர் சார்பில் தூதரக செய்தித்தொடர்பாளர் ஜி ரோங், இந்திய படையினர்தான் சட்டவிரோதமாக எல்ஏசியின் வெவ்வேறு பகுதிகளை கடந்து முன்னேறியிருப்பதாக குற்றம்சாட்டி தமது டிவிட்டர் பக்கத்தில் தூதரகத்தின் எதிர்வினையை பதிவு செய்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தமது படைத்துருப்புகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்ட அவர், எல்லை கடந்த பகுதியில் இந்திய படையினரின் ஆத்திரமூட்டல் செயல்பாடுகள், சீன பிராந்திய இறையாண்மை மற்றும் இரு தரப்பு உடன்பாடுகளை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்ட்ட பதில்கள் அடங்கிய இணையதள பக்கத்தையும் அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் இணைந்திருக்கிறார்.

அதில், பாங்கோங் ட்செளவின் தெற்குப் பகுதியில் இந்திய வீரர்கள் சட்டவிரோதமாக நுழைந்தார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, முந்தைய காலங்களில் இந்தியா, சீனா இடையே செய்து கொள்ளப்பட்ட பல நிலை பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகளினால் ஏற்பட்ட கருத்தொற்றுமையை இந்திய துருப்புகள் மீறியுள்ளனர். பாங்காங் ட்செள ஏரியின் தெற்குக் கரை குதியில் மீண்டும் இந்திய படையினர் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், இந்திய -சீனா எல்லையில் உள்ள நிலைமைகள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதைத்தொடர்ந்து இன்று மாலை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அஜித் தோவால், முப்படை தளபதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

ரஷ்யாவில் வரும் 3,4 ஆகிய நாட்களில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ராஜ்நாத் சிங் நாளை புறப்படவிருக்கிறார். இந்த தகவல் ராஜ்நாத்சிங்கின் டிவிட்டர் பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

அந்த அமைப்பில் சீனாவும் ஒரு உறுப்பினர் என்பதால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரும் ரஷ்ய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். லடாக் எல்லை பகுதி அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு மாதங்களுக்கு முன்பு நடந்த இரு நாட்டு படையினருடன் ஆன மோதலுக்கு பிறகு இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் முதல் முறையாக நேருக்கு நேராக ரஷ்யாவில் சந்திக்கவிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மீண்டும் கிழக்கு லடாக் எல்ஏசி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அதிகாரிகள் விளக்கினார்கள். ரஷ்ய கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் பங்கேற்பு இன்னும் உறுதியாகவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

முன்னதாக, எல்ஏசி பகுதியில் முதலில் அத்துமீறி வந்தது சீனாதான் என்று இந்தியா தெரிவித்தது. இரு தரப்பும் முந்தைய பேச்சுவார்த்தைகளின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதியை மீறி சீன படையினர் மேலும் முன்னேறி வந்து எல்ஏசி பகுதிகளை ஆக்கிரமித்திருந்ததாகவும் அவர்களை இந்திய படையினர் தடுத்ததாகவும் இந்தியா கூறியது.

இந்த விவகாரத்தில் இந்திய ராணுவத்தைப் பொருத்தவரை, ஆகஸ்ட் 29-30ஆம் ஆண்டு இரவில் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழல் எழுந்ததாக இந்தியா கூறியது. ஆனால், தங்கள் படையினர் எல்ஏசி பகுதியில் குறிப்பிட்ட பகுதியைத் தாண்டிச்செல்லவில்லை என்று சீனா கூறியது.

இந்திய படையினர்

பட மூலாதாரம், SOPA IMAGES

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,500 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு எல்லை உள்ளது, அங்கு தற்போது இரு தரப்பும் எல்ஏசி பகுதிக்கு அப்பால் இருந்தாலும், இதுதான் எல்லை என்று வரையறுக்கப்படாத இடத்தில் இரு நாடுகளும் அவற்றின் எல்லைக்குள் சுருங்கிக் கொள்ளாததால் அவ்வப்போது பதற்றம் எழுகிறது. கடைசியாக 1962ஆம் ஆண்டில் எல்லை விவகாரம் உச்சத்துக்கு சென்று இரு தரப்பிலும் போர் மூண்டது.

அதன் பிறகு அவ்வப்போது சிறிய அளவில் ஆத்திரமூட்டல் செயல்பாடுகல் இருந்தாலும், அது கடுமையான உச்சத்தை எட்டி, கடந்த ஜூன் 15ஆம் தேதி, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், இரு நாட்டு வீரர்களும் வன்முறை மோதலில் ஈடுபட்டார்கள். அந்த சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். அதன் பிறகு இரு நாடுகளின் உயர்மட்ட அளவில் தலைவர்களும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

படையினர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்துக்குப் பிறகு, எல்ஏசியில் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் இரு தரப்பும் செல்லாமல் சுருங்கிக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து முன்பு வந்த பகுதியிலேயே சீன படையினர் மீண்டும் முகாமிடுவதாக இந்திய படையினர் கூறுகிறார்கள்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பாங்காங் ட்செள பகுதியில் ஏற்கெனவே பல இடங்களில் சீன படையினர் நிலைகளை நிறுவியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரு தரப்பும் லடாக் எல்லை பதற்றத்தை தணிக்கும் வகையில், அவரவர் நிலைகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்வா வலியுறுத்தியுள்ளார். இரு நாட்டு படைத்துருப்புகளும் பரஸ்பரம் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து திரும்பப்பெறப்பட்டால் மட்டுமே அங்கு இயல்புநிலை திரும்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: