புகைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறதா? - எச்சரிக்கும் ஆய்வு முடிவு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக ஸ்பெயினின் கலிசியா பிராந்தியத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கலிசியா பிராந்தியத்தின் வீதிகள், உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க இயலாத இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் முதல் முறையாக கலிசியா பிராந்தியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையை நாட்டின் மற்ற சில பிராந்தியங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன.
வல்லுநர் குழுவினர் அரசுக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதாவது, ஸ்பெயினின் சுகாதார அமைச்சகம் நடத்திய ஆய்வொன்றில், புகைப்பிடிப்பதற்கும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு தொடர்புள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக ஸ்பெயினின் கலிசியா பிராந்தியத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், GETTY CREATIVE
புகைப்பிடித்து அதை வெளியேற்றும்போது நீர்த்துளிகளும் சேர்ந்து பரவுவதால் அதன் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்று அங்குள்ள மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி, சிகரெட்டை கையிலெடுத்து வைக்கும்போதும், முகக்கவசத்தை கழற்றி, அணிவதாலும் கூட புகைப்பிடிப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.புகைப்பழக்கத்தின் எதிர்மறையான உடல்நல பாதிப்புகளையும் இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது.
"புகையிலை பயன்பாடு எந்த வடிவத்தில் இருந்தாலும், சுவாச நோய்களின் போக்கை மோசமாக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று அந்த ஆய்வு கூறுகிறது.
"தற்போதைய சான்றுகளின்படி, புகைபிடிப்பதற்கும் கடுமையான நோய்த்தொற்று அறிகுறிகள் உருவாவதற்கும் தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது."

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

தமிழ்நாட்டில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ்: தமிழக அரசு அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்குப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திருமணம், மரணம் போன்ற முக்கியமான காரணங்களுக்காக செல்ல விரும்புபவர்கள் தமிழக அரசிடம் விண்ணப்பித்து, அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்துவந்தது. இந்த அனுமதி இ-பாஸ் என அழைக்கப்பட்டு வந்தது.
விரிவாகப் படிக்க:தமிழ்நாட்டில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ்
எஸ்.பி. பாலசுப்ரமணியம்: ஐசியுவில் இருக்கிறார் அப்பா - உடல்நிலை பற்றி மகன் எஸ்.பி. சரண் விளக்கம்

பட மூலாதாரம், SPB / FACEBOOK
கோவிட் - 19 வைரஸ் பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவரது உடல்நிலை மிக சிக்கலான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை

பட மூலாதாரம், Getty Images
(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் நான்காவது கட்டுரை.)
தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது.
இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளை அனுபவித்து வந்தாலும், அதிகாரபூர்வமாக செம்மொழி என்று இந்தியாவில் முதல் முறையாக அறிவிக்கப்பட்ட மொழியே தமிழ்தான்.
விரிவாகப் படிக்க:தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை
லாக்கப் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், ZEE5
சமீப காலமாக ஓடிடியில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் பல த்ரில்லர்களாகவே இருக்கின்றன. அதே பாணியில் அமைந்த திரைப்படம்தான் Zee 5ல் வெளியாகியிருக்கும் 'லாக்கப்'.
ஒரு காவல்துறை ஆய்வாளரான சம்பத் (மைம் கோபி) கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். அந்தக் கொலையை விசாரிக்கும் காவல்நிலையத்திற்கு தற்காலிக ஆய்வாளராக வருகிறார் ஆய்வாளர் இளவரசி (ஈஸ்வரிராவ்). அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளரான மூர்த்தி (வெங்கட் பிரபு), கொலைகாரன் என ஏற்கனவே ஒருவரை பிடித்து வைத்திருக்கிறார். இந்த வழக்கை இளவரசி விசாரிக்கத் துவங்கும்போது மல்லிகா (பூர்ணா) என்றொரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது. இந்தச் சடலத்திற்கும் ஆய்வாளர் சம்பத்தின் கொலைக்கும் என்ன தொடர்பு, சம்பத்தை உண்மையிலேயே கொலை செய்தது யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
விரிவாகப் படிக்க:லாக்கப் - சினிமா விமர்சனம்
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












