கொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - விரிவான தகவலகள்

கொரோனாவைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸால் சமுக முடக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆணுறைகள் நுகர்வு ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் சர்வதேச அளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது,

சர்வதேச அளவில் அதிகளவில் ஆணுறை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இது நீண்டகாலத்திற்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தும்.

காரெக்ஸ் பெர்ஹாடின் மூன்று மலேசிய ஆணுறை உற்பத்தி தொழிற்சாலைகள் கடந்த 10 நாட்களாக உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 10 கோடி ஆணுறைகள் உற்பத்தி குறைந்துள்ளது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

கொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பட மூலாதாரம், Getty Images

உலகின் ஐந்து ஆணுறைகளில் ஒன்று இந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.

சமூக முடக்கத்தில் பகுதி அளவாவது தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென இப்போது இந்த நிறுவனம் மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

தென்கிழக்கு ஆசியாவில் மலேசியாதான் கொரோனா தொற்றால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரத்தின்படி மலேசியாவில் 26 பேர் பலியாகி உள்ளனர். 2,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோ, "இந்த நிறுவனம் திறக்கப்படவில்லை என்றால், சர்வதேச அளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும். இதௌ பல்வேறு விதங்களில் பல மாதங்களுக்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தும்," என்றார்.

மேலும் அவர், "சர்வதேச அளவில் சூழல் இப்படியானதாக இருக்கும் போது பல தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இதன் காரணமாக ஆணுறைகளின் தேவையும் அதிகம் இருக்கிறது," என்று தெரிவிக்கிறார்.

டுயுரெக்ஸ் (Durex), பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மற்றும் ஐ.நா மக்கள் தொகை நிறுவனம் ஆகியவற்றுக்கு காரெக்ஸ்தான் ஆணுறை விநியோகம் செய்கிறது.

காணொளிக் குறிப்பு, ஆப்பிரிக்காவின் ஆணுறை ராஜா - ஏன் தெரியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: