கொரோனா வைரஸ்: கிறிஸ்துமஸ் தீவில் தனிமைப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியர்கள் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
தனி தீவில் தனிமைப்படுத்தப்படுத்தப்படும் ஆஸ்திரேலியர்கள்
சீனா சென்று திரும்பிய ஆஸ்திரேலியர்களை தனி தீவில் தனிமைப்படுத்தப்படும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது ஆஸ்திரேலியா.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து ஏறத்தாழ 2700 கி.மீ தொலைவில் இந்தோனீசியாவுக்கு அருகில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில் இவர்களை இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்துகிறது ஆஸ்திரேலியா.
சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்த 89 குழந்தைகள் உட்பட 243 பேர் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய நாட்டிற்குள் முறைகேடாக நுழைய முயல்பவர்களைத் தடுத்து கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
இப்போது அங்கு நான்கு இலங்கை குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு எதிராக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ்: மாநிலப் பேரிடராக அறிவித்தது கேரளா

பட மூலாதாரம், Getty Images
சீனா சென்று திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது கேரள அரசு.
முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையின் பேரில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ்: மாநிலப் பேரிடராக அறிவித்தது கேரளா

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வீராங்கனை விருது வழங்கும் விழாவை இந்தியாவில் முதல்முறையாக நடத்துகிறது பிபிசி. பொது மக்கள் வாக்களிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கனைகள் பெயர்களையும் பிபிசி அறிவித்துள்ளது.
உங்களுக்கு பிடித்த இந்திய வீராங்கனைக்கு வாக்களித்து அவரை நீங்கள் வெற்றிபெற செய்யலாம்.
பிபிசியின் ஏதேனும் ஒர் இந்திய மொழி சேவையின் வலைதளத்திற்கு சென்று நீங்கள் வாக்களிக்கலாம்.
விரிவாகப் படிக்க: பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள்

"5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் மன அழுத்தம், இடைநிற்றல் அதிகரிக்கும்"

பட மூலாதாரம், Getty Images
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக பல தரப்புகளில் இருந்தும் கருத்து தெரிவிக்கப்படுகிறது.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், இந்த நடைமுறையை அமல்படுத்துவது பற்றி அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
விரிவாகப் படிக்க: "5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் மன அழுத்தம், இடைநிற்றல் அதிகரிக்கும்"

ஷாஹின்பாக் பெண்கள் போராட்டமும் கூடங்குளம், மெரினா போராட்டமும்

பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பெண்கள் நடத்தும் தொடர் தர்ணா போராட்டம் 50 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்துக்கும் தமிழகத்திற்கும் பல தொடர்புகள் உள்ளன.தொடர்பு என இங்கு குறிப்பிடுவது பௌதீக தொடர்பை அல்ல. போராட்ட வழிமுறை குறித்த தொடர்பு அது.
எப்படி மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் எந்த தலைமையும் இல்லாமல் நடந்ததோ, எப்படி கூடங்குளம் போராட்டம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டதோ அப்படியான தொடர்பு இது.
இன்னும் குறிப்பாக இந்த ஷாஹின்பாக் பெண்கள் போராட்டத்தைக் குறித்து சொல்ல வேண்டுமானால் அமெரிக்கா வால்ஸ்டீரீட் போராட்டம் (Occupy Wallstreet) போராட்டம் போல நடக்கிறது.
விரிவாகப் படிக்க: ஷாஹின்பாக் பெண்கள் போராட்டத்துக்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













