கொரோனா வைரஸ்: இதுவரை நடந்தது என்ன? - முழுமையான தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல், அதனைக் கட்டுப்படுத்த சீன அரசு எடுத்துள்ள முயற்சிகள், சீனாவில் இந்திய மாணவர்களின் நிலை ஆகியவற்றை முழுமையான தொகுத்துள்ளோம்.
- கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் புத்தாண்டு விடுமுறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பல நகரங்களுக்குப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
- அரசு கணக்கின்படி, சீனாவில் 2744 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிகிறது.
- ஹூபே மாகாணத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56லிருந்து 76ஆக உயர்ந்துள்ளது.
- சீனாவுக்கு வெளியே, தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், தைவான், மலேசியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், நேபாளம், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 41 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவுக்கு வெளியே எந்த மரணமும் பதிவாகவில்லை.
- வுஹான் நகரத்திலிருந்துதான் இந்த நோய் தோற்று ஏற்பட்டுள்ளது. அந்த நகரத்தில் 11 மில்லியன் பேர் வசிக்கிறார்கள். அந்த நகரத்திலிருந்து பிற இடங்களுக்குப் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஐந்து லட்சம் மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
- கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக சீன நகரமான வுஹானில் ஆறு நாட்களில் ஒரு மருத்துவமனையை உருவாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
- சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களின் உடல்நலம் குறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Xi Jinping - "புதிய வைரஸ் வேகமாக பரவுகிறது" | China President on deadly virus | Coronavirus
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:









